ஸ்ரீமத் பாகவதம் – 11வது ஸ்கந்தம் – மலைப்பாம்பினிடமிருந்து (அஜகரம்) என்ன வெளிவந்தது?

மலைப்பாம்பானது அசையாது ஓர் இடத்தில் படுத்துக் கிடக்கும். அதன் அருகில் ஏதாவது வந்தால் அதை இன்னதென்று கூடக் கவனியாது புசிக்கும். இல்லாவிட்டால் ஆகாரமின்றி கிடக்கும். இது போலவே ஞானியும் இருப்பான். உலக இன்பதுன்பங்களின் ஸ்வபாவம் அவனுக்கு நன்றாகத் தெரியும். தன்னிடம் வலியவந்ததைக் கிரஹிப்பான். ஒன்றும் வராவிடில் தன் நிஷ்டையே கதியாக இருப்பான். எந்தக் காலத்தும் கர்மத்தைச் செய்ய வேண்டும் என்று அவன் மனம் கிளம்பவே மாட்டாது. பகவன் நிஷ்டையைவிட எதுதான் சிறந்தது?’ என்று வெளியாகின்றது (இதற்கே அஜகரவிருத்தி என்று பெயர்).

Leave a comment