சீமந்தம் (தனியாகச் செய்வதானால் செய்வதற்கான காலம்)

சித்திரை, வைகாசி என்ற முறையில் வழங்கப்பெறும் மாதக் கணக்கின்படி நான்கு, ஆறு, எட்டு ஆகிய மாதங்களில் (ஏதோ ஒரு மாதத்தில்) முதலாவது கர்ப்பம் ஏற்பட்ட சமயத்தில் அந்தணர் குலப்பெண்டிர்க்கு சீமந்தம் என்னும் சடங்கை செய்யவேண்டும். எட்டாவது மாதத்தில் விஷ்ணு பலியையும் செய்ய வேண்டும். சீமந்தம் நடத்தும் விஷயத்தில் பூசம், ஹஸ்தம், புனர்பூசம், திருவோணம், மிருகசீர்ஷம், ரேவதி, ரோகிணி, உத்திரம் மூன்று (உத்தரம்-உத்தராடம்-உத்தரட்டாதி) ஆகிய நக்ஷத்திரங்கள் உத்தமம். பக்ஷச்சித்ரைகளான சதுர்த்தி, ஷஷ்டி, அஷ்டமி, துவாதசி, சதுர்த்தசி ஆகிய இந்த ஐந்து திதிகள் வளர்பிறையில், தேய்பிறையிலும்; நவமி (ரிக்தை) ஆகிய திதிகளைத் தவிர மற்ற திதிகளும், சிம்மம், விருச்சிகம் தவிர பிற லக்னங்களுக்குள் சுபகிரஹ பலம் உள்ள லக்னங்களும், திங்கள், வெள்ளி, புதன், குரு ஆகிய கிழமைகளும் உத்தமம். அஷ்டமம் சுத்தமாக இருக்க வேண்டும்.