பரிஷேஷனம் செய்யும் போது அன்னத்தை எந்த விரலால் எடுத்து வாயில் போட்டுக் கொள்ள வேண்டும்? எதாவது விதிமுறை உண்டா?

பரிஷேசனத்துக்கு ப்ராணாஹுதி எனப்பெயர். பகவத்கீதை வசனப்படி நம் ஒவ்வொருவரிடமும் உள்ளிருந்து சாப்பிடுபவர் பகவான்தான். ஆகவே ஜடராக்னி என்னும் அக்னியில் ஹோமம் செய்யும் விதமாகவே நமது சாப்பாடு அமைகிறது. ஆகவேதான் ஸ்வாஹா என்னும் மந்திரம் சொல்லி முதலில் வயிற்றில் இருக்கும் பகவானுக்கு ஹோமம் செய்கிறோம். இதற்குத்தான் ப்ராணாஹுதி எனப்பெயர். இதில் மொத்தம் ஆறுமுறை சாதத்தை எடுத்து வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மந்திரம். முதல் (பிராணாய ஸ்வாஹா) மந்திரம் சொல்லி ஆள்காட்டி விரல்+நடு விரல்+கட்டை விரல் ஆகிய மூன்று விரல்களாலும் அன்னத்தை எடுத்து வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். இரண்டாவது (அபானாய ஸ்வாஹா) மந்திரம் சொல்லி நடுவிரல்+மோதிரவிரல்+கட்டைவிரல் ஆகிய மூன்று விரல்களாலும், மூன்றாவது (வ்யானாய ஸ்வாஹா) மந்திரம் சொல்லி சுண்டுவிரல்+மோதிரவிரல்+கட்டைவிரல் ஆகிய மூன்று விரல்களாலும், நான்காவது (உதானாய ஸ்வாஹா) மந்திரம் சொல்லி ஆள்காட்டிவிரல் தவிர மற்ற நான்கு விரல்களாலும், ஐந்தாவது (ஸமானாய ஸ்வாஹா) மந்திரம் சொல்லி ஐந்து விரல்களாலும், ஆறாவது (ப்ரம்மனே ஸ்வாஹா) மந்திரம் சொல்லி ஐந்து விரல்களாலும் சாதத்தை எடுத்து பல்லில் படாமல் விழுங்க வேண்டும். இதுவே ப்ராணாஹுதி செய்யும் முறை. இங்கு கூறிய மந்திரங்கள் யஜுர்வேதத்தை அனுசரித்தது, மற்ற வேதங்களுக்கு மந்திரங்களைக் கூறும் வரிசைக்கிரமம் மட்டும் மாறலாம். ஆனால் செய்ய வேண்டிய முறை மாறாது. இவ்வாறு ப்ராணாஹுதியை முறையாகச் செய்வதால் சாப்பிடும் உணவு நன்கு ஜீரணமாகி நல்ல உடல் மற்றும் உள்ள வலிமை ஏற்படும்.

2 thoughts on “பரிஷேஷனம் செய்யும் போது அன்னத்தை எந்த விரலால் எடுத்து வாயில் போட்டுக் கொள்ள வேண்டும்? எதாவது விதிமுறை உண்டா?

  1. kowsi2006 says:

    ராம் ராம்,

    நான் இரவு முதலில் தோசை, இட்லி என்று சாப்பிட்டுவிட்டு, பின் மோருஞ்சாதம்
    சாப்பிடுவேன்.

    இப்போதும் பரிசேஷணம் செய்தபின்பே சாப்பிடவேண்டுமா என்பதை தயவு கூர்ந்து
    சொல்லவும்.

    நன்றியுடன்,

    ரெ. ராமஸ்வாமி அய்யர்.
    கைபேசி: 94869 59182

    On Fri 11 Sep, 2020, 6:24 PM CHAMARTHI SRINIVAS SHARMA, wrote:

    > Chamarthi Srinivas Sharma posted: ” பரிஷேசனத்துக்கு ப்ராணாஹுதி எனப்பெயர்.
    > பகவத்கீதை வசனப்படி நம் ஒவ்வொருவரிடமும் உள்ளிருந்து சாப்பிடுபவர் பகவான்தான்.
    > ஆகவே ஜடராக்னி என்னும் அக்னியில் ஹோமம் செய்யும் விதமாகவே நமது சாப்பாடு
    > அமைகிறது. ஆகவேதான் ஸ்வாஹா என்னும் மந்திரம் சொல்லி முதலில் வயிற்றில் இர”
    >

    Like

Leave a comment