இதோபதேசம் – பக்தி

41. கர்மகாண்டத்தின் பிரயோசனத்தைத் தெரிந்துக் கொண்டபின் பக்தியை ஆரம்பிக்க வேண்டும். 42. எப்போதும் பகவானைப் புருஷனாகவாவது சிநேகிதனாகவாவது, தாயாராகவாவது, பிதாவாகவாவது, புத்திரனாகவாவது, யஜமானனாகவாவது நினைத்து பக்தி பண்ண வேண்டும். 43. மனதை எப்போதும் சகுன நிர்குண பகவான் பாதாரவிந்தங்களிலே செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். 44. உலக விஷய போகங்களில் இச்சையை விட்டுத் தனிமையாகச் சஞ்சரித்து மனதை ஏகாக்ரப்படுத்த வேண்டும். 45. தசேந்திரியங்களையும் திருப்பித் தன்னிடத்தில் சேர்க்க வேண்டும்.

Leave a comment