விபூதி மகிமை

சிவ ரகசியம், எட்டாவது அம்சம், ஒன்பதாவது அத்யாயம் – 1. சிவ பெருமானை வணங்குபவர்கள் விபூதி பூசிக் கொள்ளுதல் வேண்டும். 2. விபூதி அணியாதவனிடம் ஞானம் ஏற்படுவதில்லை. விபூதி பூசிக் கொள்பவன் ஞானத்தையும், மோக்ஷத்தையும் அடைகிறான். 3. எவன் “பஸ்ம – பஸ்ம” எனும் நாமத்தைக் கூறுகிறானோ அவன் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான். 4. எவனொருவன் தனது தேகத்தில் விபூதியை பூசிக் கொள்கிறானோ அவன் சம்சாரம் எனும் பாவத்திலிருந்து விடுபடுகிறான். 5. பிராமணன், வணிகன், குடும்பஸ்தன், முனி ஆகிய அனைவரும் விபூதி பூசிக் கொள்ளல் வேண்டும். 6. எவனொருவன் விபூதி பூசிக் கொள்ளாமல் கர்மங்களை செய்கிறானோ அக்கர்மாவின் பலனை அவன் அடைவதில்லை. 7. அதர்வண வேதத்தில் பஸ்மத்தை மிகவும் புண்ணியம் என்ற அர்த்தத்தில் கூறப்பட்டிருக்கிறது. 8. பஸ்மம் அணிந்தவன் சிவபெருமானின் பரம பக்தன் ஆகிறான். அவன் அவரது அருளுக்கு பாத்திரமாகிறான். 9. பஸ்மம் தரித்தவரை எவன் வணங்க மறுக்கிறானோ அவன் பாபியாகிறான். 1௦. ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கிய ஞானம் விபூதி தரித்தவனுக்கு ஏற்படுகிறது. 11. பஸ்மம் தரித்தவனுக்கு தேவர்கள் அனைவரும் நண்பர்களாவர். 12. பஸ்மம் தரிக்காமல் சிவனை வழிபட்டால் சிவபெருமான் அவனது பூஜையை ஏற்பதில்லை. 12. சந்தியாவந்தனம், விவாகம், முதலிய கர்மாக்களை செய்யும்போது விபூதி தாரணம் மிகவும் அவசியமாகிறது. 14. பஸ்மம் இல்லாமல் செய்யும் செயல்கள் அனைத்தும் பலனற்றவைகளாகும். 15. சுத்தமற்றவனும் பஸ்ம தாரணத்தினால் சுத்தமுள்ளவனாகிறான். சாப்பிடத் தகாதவைகளை சாப்பிட்டால் பஸ்ம தாரணத்தின் மூலம் அப்பாபங்களிலிருந்து விடுபடுகிறான். 16. ஒருவன் விபூதி அணிந்து சிவபிரானுக்கு தண்ணீர், மலர்கள் ஆகியவற்றை சமர்ப்பித்தால் அதனை அவர் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறார். 17. விபூதி அணிந்து தேவர்களுக்கு செய்யப்படும் யாகம் முதலியவை உடனே ஏற்கப்படுகின்றன. 18. விபூதி அணிந்தவனின் பாவங்கள் அக்கணமே நசிந்து விடுகிறது. 19. விபூதி அணிந்தவரை கிரஹதோஷங்கள் பாதிப்பதில்லை.

Leave a comment