ஸ்வாமியே சரணம் ஐயப்பா – மாலை தரித்து மலைக்கு செல்லக்கூடாத இதர சந்தர்ப்பங்கள்

மனைவி குளித்து (கர்ப்பம் தரித்து) ஆறு மாதங்கள் ஆனால் மலைக்குப் போகக்கூடாது. கர்ப்பம் தரித்த 180 நாட்களில் பிண்டத்துக்கு உயிர் வருவதால் சூதக தோஷம் ஏற்படும். அது போலவே மனைவி பிரசவித்து 27-ம் நாள் ஸ்நானம் செய்த பிறகே கணவன் மலைக்குச் செல்ல அருகதை உள்ளவன் ஆகிறான். யாத்திரை துவங்கும் நாள் இதற்குப் பின்னர் வந்தால், நல்ல நாள் பார்த்து மாலை தரித்து யாத்திரை செய்யலாம். (பிரம்மச்சர்ய விரதம் முன்பே ஆரம்பித்திருக்க வேண்டும்). விருத்தி என்பது நம் வழக்கப்படி 11 நாடகள். விருத்தி நமது தாயாதிகள் வீட்டுப் பிரசவத்தினாலும் ஏற்படலாம். எனவே மனைவி கர்ப்பமுற்ற 180 நாட்களுக்கும் பின்பும் பிரசவித்து 27 நாட்களுக்கு முன்பும், மாலை தரிக்கவோ, மலை ஏறவோ கூடாது. மாலையில் சிவகணங்களும் சக்தி கணங்களும் நம்மைக் காக்க குடி கொண்டிருப்பதால், மாலையைக் கழற்றாவிடில் கணங்களை அசுத்தமான இடத்தில் வசிக்க கட்டாயப்படுத்துவது போல் ஆகிவிடும். எனவே அவைகளின் சாபத்தால் நாம் அவதியுற நேரிடும். ஆகவே, எக்காரணம் கொண்டும், விருத்தி சமயத்தில் மாலை அணிவதோ, அணிவிப்பதோ கழற்றாமல் இருப்பதோ சபரிமலை யாத்திரை மேற்கொல்லுவதோ கூடாது.

Advertisement

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s