நவகிரக பரிகார கோவில்கள் வழிபாடு

சூரியன் – முதலில் நவகிரகங்களுக்கு அருள்புரிந்த திருமங்கலங்குடி ஸ்ரீ பிரானநாதேஸ்வரரை வழிபட்டு பின்பு, சூரியனார் கோவிலுக்கு சென்று கருவறையில் உள்ள சூரிய சக்கரத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும். சூரியனை வழிபடுவதாலும் இங்குள்ள நவக்கிரகங்களை வழிபடுவதாலும் அனைத்து தோஷங்களும் நீங்கப் பெறுவார். சந்திரன் – தாய்க்குப் பீடை நோய், மன நிலை பாதிப்பு, சந்திரன் ஜாதகத்தில் நீசம், மறைவு, பாவ கிரக சேர்க்கை உள்ளவர்கள் திங்களூர் கைலாசநாதர் கோவிலில் உள்ள சந்திரனை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகும். செவ்வாய் – ஜாதகத்தில் செவ்வாய் பாதிப்பு, திருமணத்தடை, தொழில் சிக்கல், வீடு மனை வாங்க, அடிக்கடி விபத்து போன்றவை ஏற்பட்டாலும், செவ்வாய் திசை நடைபெறும் காலங்களிலும் வைத்தீஸ்வரன் கோவிலில் தனி சன்னதியில் உள்ள செவ்வாய்க்கு தீபம் ஏற்றி தரிசனம் செய்ய எத்தகைய கடுமையான செவ்வாய் தோஷமும் நீங்கும். புதன் – குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வமின்மை, தடங்கல்கள் ஏற்படும் போது திருவெண்காடு புதன் வழிபட்ட ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரரை தரிசித்த பின்பு, அங்கு எழுந்தருளியுள்ள புதனையும் வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். குரு – திருமணத்தடை, புத்ர தோஷம், குடும்ப ஒற்றுமை, நிம்மதி குறைவு, ஜாதகத்தில் குரு தோஷம் உள்ளவர் வியாழக்கிழமை ஆலங்குடி குரு பகவானை நெய் தீபம் ஏற்றி, வழிபடுவது சிறந்த பரிகாரமாகும். சுக்கிரன் – சுக்கிர தோஷம் உள்ளவர் கஞ்சனூர் மூலவர் சுக்ரீஸ்வரரை சுக்கிர பகவானாக கருதி வழிபட்டால் தோஷம் நீங்கும். திருநாவலூர் பார்கவீஸ்வரரை வழிபட சுக்கிர தோஷம் நீங்கும். சனி – ஜாதகப்படி ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி ஏற்படும் காலங்களில் திருநள்ளாறு நள தீர்த்தத்தில் நீராடி தர்ப்பாரண்யேஸ்வரரையும், போகமார்த்த அம்மனையும் வழிபட்ட பிறகு சனீஸ்வரர் சன்னதி சென்று எள் தீபம் ஏற்றி வழிபட தோஷம் நீங்கும். சனி பாதிப்புள்ளவர் திருவாதவூர் சனீஸ்வரனை சனிக்கிழமை வழிபட வேண்டும். சனி, ஈஸ்வரனைப் பிடிக்க முயன்று, கால் முடமாகி, கால் சரியாக ஈசவரனை நோக்கி தவமிருந்த இடம் இது. ராகு – ஆதிசேஷன் அவதாரமான ஸ்ரீமத்ராமானுஜர் எழுந்தருளியுள்ள ஸ்ரீபெரும்புதூர் சென்று நெய் தீபம் ஏற்றி, ஸ்ரீமத்ராமானுஜரையும், ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் ஸ்ரீ தியாகராஜா நாதவல்லித் தாயாரையும் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் வழிபட நாக தோஷம் நீங்கும். கேது – பஞ்ச லிங்கங்களில் வாயு லிங்கம் உள்ள இடம், கண்ணப்பனுக்கு காட்சி தந்த ஸ்தலம் திருக்காளத்தி. இங்குள்ள காளத்தீஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் செய்து அர்ச்சனை செய்ய கேதுவினால் ஏற்படும் தோஷம் நீங்கும்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s