சாமி கண்ணை குத்தும்

தப்பு செஞ்சா சாமி கண்ணை குத்தும்!
சிறு வயதில் தமிழ் நாட்டில் எந்த குழந்தையும் இந்த வாக்கியத்தை கேட்காமல் வளர முடியாது. ஆம், அந்த அளவிற்க்கு இது பிரபலமான வாக்கியம்.
இந்த வாக்கியத்தை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைநல்வழிபடுத்துவதற்க்காக (அ) ஒரு பயபக்தியை உருவாக்குவதற்க்காக மட்டுமே உபயோகபடுத்தினார்களேதவிர அதற்க்கு மேல் அதில் ஒன்றும் இல்லை என்ற அளவிலே பெரும்பாலானோர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.
நாம் நினைப்பது போல இந்த வாக்கியம் சாதாரணமாக குழந்தைகளை பயமுறுத்துவதற்க்காக மட்டும் இல்லை! இதில் எவ்வளவு பெரிய ஞான கருத்து மறைந்து இருக்கிறது என்று நிச்சயமாக நம்மில் பெரும்பாலானோர் உணர்ந்திருக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. எந்த வாக்கியத்தை வைத்து கொண்டு நாம் நமது குழந்தைகளை சும்மா பயமுறுத்தி கொண்டிருக்கிறோமோ அதே வாக்கியம் நாம் அன்றாட வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நம்மால் நம்ப முடிகிறதா?
ஆம், குழந்தைகளாவது நாம் அந்த வாக்கியத்தை சொல்லும் போது வெளியில் இருந்து சாமி வந்து நம் கண்ணை குத்தி விடுமோ என்று நம்புவார்கள். ஆனால் சொல்லும் பெற்றோர்கள் ஒருகாலும் இப்படி சாமி வந்து கண்ணை குத்தாது என்று நம்பியே சொல்கிறார்கள்.
இந்த இடத்தில் நாம் சொல்வதை நம்பும் குழந்தைகள், நம்மை விட ஒரு படி மேலேதான் இருக்கிறார்கள். ஆம், குழந்தைகள் புறத்தில் இருந்து சாமி கண்ணை குத்தி விடும் என்று நம்பி கொண்டிருப்பார்கள். ஆனால் அதில் ஒரு சிறு மாற்றம் சாமி புறத்தில் அதாவது வெளியில் இருந்து குத்துவதில்லை! உள்ளே இருந்து தான் குத்தி கொண்டிருக்கிறது!
ஆம், கண்ணிலே ஒளியாக இறைவன் இருக்கிறான். அவன் நாம் ஏதாவது தப்பு செஞ்சால் நம் கண்ணை குத்தி கொண்டேதான் இருக்கிறான். நம்முடனே இருக்கும் இறைவன் குத்த குத்த நமக்கு கிடைப்பதே துன்பம். இதுவே நம்மை இறைவனை நாம் உணராமல் தடுக்க வகை செய்து கொண்டே இருக்கிறது. அதானல்தான் நமது முன்னோர்கள் தப்பு செய்யாதே அப்படி தப்பு செய்தால் சாமி கண்ணை குத்தும் என்று சொல்லி வைத்தார்கள்.
எந்த வித ஆதாரமும் இல்லாமல் எப்படி நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் என கேட்டால்? திருமூலர் அய்யா திருமந்திரத்தில் இந்த பாடலில் எவ்வளவு அப்பட்டமாக சொல்கிறார் என்று படித்தால் புரியும்!
கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்

கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்

கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்

கண்காணி கண்டார் களவொழிந் தாரே

பாடல் – 2067
இந்த பாடலுக்கான ஞான விளக்கத்தை “மந்திர மணி மாலை” (திருமந்திர விளக்க உரை புத்தகம்) என்ற புத்தகத்தில் இருந்து தருகிறோம்.
விளக்கம்:
உலக மக்கள் பலரும் நம்மை யாரும் பார்க்கவில்லை என்று கள்ளம் – தப்பு – பாதகங்கள் பலவும் செய்வர்! அவன் செய்கை ஒவ்வொன்றையும் கண்காணித்து கொண்டே கவனித்து கொண்டே அவன் கண்ணிலே ஜோதியாக ஒருவன் உள்ளான்!எப்போதும் நம் கண்மணி ஒளியாக துலங்கும் இறைவன் நம்மை பார்த்து கொண்டே இருந்து நம் செயலுக்கு தக்கவாறு நல்லது கெட்டது தருகிறானே அதனால்தான் நாம் இன்பமும் துன்பமும் அடைகிறோம்! இதை உணர்ந்தால் அறிந்தால் தப்பு செய்வானா?! இந்த பிரபெஞ்சமெங்கும் இறைவன் நிறைந்துள்ளானே! ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக இருக்கின்றானே! அப்படியானல் யார் எங்கு தப்பு செய்தாலும் அவன் அறிவானே! எங்குமாய் நிறைந்த அந்த கடவுள் நம் கண்களிலும் தன்னை கண்பிக்கான்றானே! என்ன அதிசயம் இது! நம் கண்ணிலயே அவனை காணாலாம்! கண்ணிலே காண்பித்து, கடந்துள்ளே போனால் கடவுள் அவனை காணலாமே! கண்காணித்து நம்மை கடத்துள்ளே புகச் செய்த அவன் பெருங்கள்ளன் அல்லவா?! மறைந்திருந்தல்லவா நம்மை தன்னடியில் வீழச் செய்தான்! நம்மையும் நல்வழி நடக்கும் உத்தமனாக்கியருளினான்! தம்மை  கண்காணிப்பவை கண்டவர் களவு செய்ய மாட்டார்! கங்காணி – கண்காணிப்பவன் – கவனிப்பவன் எங்குமுள்ளான்! எனவே தவறு செய்யாதே! மானிடா திருந்து! இல்லையேல் கங்காணி தக்க தண்டனை தருவார்.
இனி தப்பு செய்யாமல் இருப்போம், நம்முள்ளே இருக்கும் ஒளியான இறைவன் நம் கண்ணை குத்தாமல் பார்த்து கொள்வோம்.
ஆம், ஞான சற்குருவை நாடினால்
பார்த்து பார்த்து இருந்து கொள்ளலாம்!!!
குறிப்பு:
தப்பு செஞ்சா சாமி ஏன் கண்ணை மட்டும் குத்துது வேறு எதையும் குத்த வில்லை என்று யோசிப்பதுதான் ஞான வழி!
கண்ணில் மட்டும்தான் குத்துவார்!
சாமி எங்கு அடைக்க வேண்டுமோ அங்குதான் அடைப்பார்.
புத்திசாலிகள் வழி எங்கு மூடியிருக்கிறதோ அங்குதான் திறக்க முயற்ச்சி செய்வார்கள்.
இதுதான் ஞான வழி. வள்ளலாரும், சித்தர்களும் காட்டிய சன்மார்க்க வழி.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s