Kin specialist

பெரியவா Kin specialist!!
உறவுகளை இணைக்கும் தன்மையவர்!

நான் வெளி நாட்டில் படித்துவிட்டு வந்தவன்.

சாதாரணமாகவே வெளி நாடு சென்று

வந்தவர்கள் நம் நாட்டையும், நம் 

பழக்க வழக்கங்களையும் இழிவாகப்

பேசும் காலகட்டம் அது.

ஆனால் என் முன்னோர் செய்த புண்ணியம் 

எனக்கு அந்த மாதிரி நிலை வரவில்லை..

நம் ஆசாரம், கர்மானுஷ்டானகளை 

பெரியளவில் செய்யாவிட்டாலும்,

விடாமல் செய்து வந்தேன்.

அதன் பயனாக ஸ்ரீவித்யாஉபாஸனையும்

கைகூடிற்று.பூஜை, ஹோமம் முதலானவற்றை

ச்ரத்தையுடன் செய்து வந்தேன்.

பெரியவா தரிசனத்துக்குப் போகும்போது

என் சொந்த வாழ்க்கை பற்றியும் அடிக்கடி

விஜாரிப்பார்.

”நீ ஏழைகளுக்கு இலவச வைத்யம் பார்க்கிறாயா”

போன்ற கேள்விகள். ஒரு நாள்”ஆமாம் நீ வெளி

நாட்டில்  படித்து, அங்கு வாழ்க்கையில் பல

சௌகர்யங்களை அனுபவித்தவன்; ஆனால்

நீ நம் நாட்டுக்குத் திரும்பியதுமன்றி நம்

தேச கலாசாரங்கள், அனுஷ்டானங்கள்

இவற்றை எப்படி விடாப் பிடியாக ச்ரத்தையா

செய்யறாய்”?
அதற்கு நான்”அங்குள்ள வாழ்க்கை

இயந்தரத்தனமானது,நிம்மதி எள்ளளவும் 

கிடையாது;உடல் இன்பம்,பணம் வசதிகள்

மட்டுமே;ஆனால் நம் வாழ்க்கையில்

அமைதி இருக்கிறது,பண்பாடு இருக்கிறது,

ஆன்மீகம் இருக்கிறது. நான் இங்கேயே

இருந்திருந்தால் கூட எனக்கு ஆன்மீகத்தில்

இவ்வளவு ஈடுபாடு வந்திருக்காது. அங்கே

சென்று திரும்பியதே ஒரு வரப்ரஸாதம்!”
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பெரியவாளுக்கு

என் பதில் சந்தோஷத்தைக் கொடுத்திருக்க

வேண்டும். அவர் தன் கையில் வைத்திருந்த ஆப்பிள் 

பழத்தை எடுத்துப் பந்தாடி என்னை காட்ச் பிடிக்க

வைத்தார்கள்

நான் அவர் திருவடிகளைக் காட்ச் பண்ணிப் 

பல வருஷங்கள் ஆகிவிட்டது. கனவிலாவது 

அவர் எனக்கு பழத்தைப் போட்டுக்கொண்டே

 இருக்கணும், நான் காட்ச் பிடிச்சுண்டே 

இருக்கணும்! நான் ஒரு ஸ்கின் ஸ்பெலிஸ்ட்தான்;

ஆனால் அவர் kin specialist(உறவுமுறைகளை

இணைத்து வைப்பவர்) நான் skin specialist 

அவர் soul doctor! ஆத்மாவைப் பீடிக்கும்

சம்சாரப் பிணிகளை அறவே நீக்குபவர்!

சொல்பவர் டாக்டர் எம். நடராஜன்  skin specialist
கோதண்டராம சர்மா  தரிசன அனுபவங்கள்
ஜய ஜய சங்கரா…..

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s