கலப்பு எண்ணெய்

கலப்பு எண்ணெய் தீபம் –
🌼 தீமையும் நன்மையும்
🌼1, ஐந்து எண்ணெய். மூன்று எண்ணெய் கூட்டி விளக்கேற்றினால் நல்லது என்று வரும் செய்திகளை நம்பி அப்படியே தவறு செய்யும் அப்பாவி மக்கள் கவனத்திற்கு அறிக,

            
🌼எப்பொழுதுமே ஒரு எண்ணெய்யுடன் இன்னொரு எண்ணெய் சேர்ந்து எரியக்கூடாது 
🌼அதர்வன  மாந்திரிகத்தில் அசுப நிகழ்வுகளை தன் விரோதிக்கு ஏற்படுத்த தந்திரமாக கையாண்ட முறைதான் கூட்டு எண்ணெய் தீப வழிபாடாகும் . அதே போல் தன் குறைதீரவும். கடுமையான பிரச்சினைகள் விலகவும் பல எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றும் வழக்கமும் இருந்தது, இந்த வழக்கம்தான் இன்று தவறாக கையாளப்படுகிறது, 
🌼விளக்கமாக அறிவீராக, 
🌼பௌர்ணமி கழித்து வரும் அஷ்டமி தேய்பிறை அஷ்டமி என்று அனைவருக்கும் தெரிந்ததுதான், இந்த அஷ்டமி கார்த்திகை மாதத்தில் வரும் போது பஞ்ச எண்ணெய் தீபம் கால பைரவருக்கு ஏற்ற வேண்டும், 
🌼இதற்கு பஞ்ச (5) தீபம் என்று பெயர், 5 வகை எண்ணெய் கொண்டு ஏற்றப்பட வேண்டும், 5 தனி தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும், ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, (ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடபாது சக்தி மோதல் உண்டாகும்) இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீரா பிரச்சினையும் தீரும், 
🌼இந்த முறை பிரச்சினைகளுக்கான தீர்வு மட்டுமே, பில்லி சூன்யம். வம்பு. வழக்கு. தீரா நோய் இவைகள் அடங்கும் .
 🌼அடுத்து ஒவ்வொரு செவ்வாய்கிழமை காலையும். மாலையும் ஸ்ரீ கால பைரவரை அஷ்டலட்சுமியும் வழிபடுவார்கள், அந்த நேரத்தில் கடன் தீரவும். செல்வம் பெருகவும் நாமும் இரு அகலில் நெய்தீபம் ஒன்றிலும். நல்லெண்ணெய்  ஒன்றிலும் ஊற்றி சிவப்பு திரி போட்டு தனித்தனியே ஏற்றினால் கஷ்டங்கள் தீரும், 
🌼நவகிரக தோஷம் விலக அரசடி விநாயகருக்கு சதுர்த்தி திதி அல்லது ஞாயிற்றுக்கிழமை மூன்று அகலில் ஒவ்வொன்றின்  வீதம் தேங்காய் எண்ணெய். நல்லெண்ணெய். பசு நெய் இவைகளை தனித்தனியே ஏற்றி வழிபட கிரக தோஷம் விலகும் .
🌼அடுத்து சித்திரை. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமையில் ராகுகால வேளையில் சிவாலயத்தில் உள்ள அன்னை துர்க்கைக்கு 9 அகலில் 9 வகை எண்ணெய் தனித்தனியே ஊற்றி 9 வகை கலர் திரி ஒவ்வொன்றிலும் ஒரு கலர் திரி வீதம் போட்டு தீபம் ஏற்றி அன்னையை வழிபட தீரா பிரச்சினையும் தீரும், 
🌼இவ்வாறு பல செயல்களுக்கும் இந்த பல வகை எண்ணெய் தீபம் ஏற்றும் முறை உண்டு, ஆனால் இன்று இந்த நல்முறை அறியாததால் தவறு நடக்கிறது, 
🌼5 எண்ணெய் கூட்டி தீபம் ஏற்றுங்கள் என அக்காலத்தில் சொன்னது தவறாக செய்தி பரவிவிட்டது, 5 எண்ணெய்ûயும் ஒன்றாக கலந்து தீபம் ஏற்றுவது என தவறாக புரிந்து பாதகத்தை அறியாமலேயே பெருகிறார்கள், 
🌼(அறியாமல் செய்தால் தவறில்லை என்ற மன ஆறுதல் பேச்சு இதில் செல்லாது, விஷம் என்று அறியாமல் நாம் எடுத்து குடித்தால் அது உடலில் பரவாமல் இருக்காது, அதை போலத்தான் தெய்வ சபையும், தெரிந்தோ தெரியாமலோ செய்தாலும் குற்றம் குற்றம்தான், அதனால்தான் ஆன்மிகத்தை பொருத்தவரை தெரியாததை புதிதாக செய்யக்கூடாது என்பார்கள்,) ஆக தீபத்திற்கான எண்ணெய் கலப்படமாகாமல் ஏற்றுவதே சிறந்தது .
 🌼எதிரியை உறவாடி கெடுக்கும் முறை ஒன்று உண்டு .இது அதர்வன முறையில் நிறையவே உண்டு, சூழ்ச்சி. தந்திரம் இவைகளை எதிரி அறியாமல் செயல்படுத்துவதாகும் மூலிகை. யந்திரம். எண்ணெய். மந்திரம் இவைகளில் ஒன்றுக்கொன்று எதிர்ப்பு எதுவென்று அறிந்து அதை சேர்த்து தன் விரோதிக்கு நல்லது என கொடுத்து பயன்படுத்துவார்கள், 
🌼அது என்னவென்று தெரியாமலேயே பயன்படுத்தும் அப்பாவிகள் அதன் விளைவை சந்திக்க வேண்டியதாகிறது . அக்காலத்தில் இதே முறையில் உறவாடி கெடுத்தவர்கள் ஏராளம், அந்த முறையில் ஒன்றுதான் இந்த கூட்டு எண்ணெய் முறை பயன்படுத்தப்பட்டதாகும் .
🌼 இந்த முறையை அறிந்தவர்கள் அதன் பலனை அறியாமல்

செய்திகளை வெளியிட்டு மக்களும் அதை பின்பற்றி துன்பப்படுகிறார்கள், அப்படி என்னதான் துன்பம் என்று சந்தேகம் உண்டாகிறதல்லவா ? அதையும் அறியுங்கள்
🌼ஸ்லோ பாய்சன் என்ற கேள்விப்பட்டிருப்பீர்கள் அது மனிதன் அறியாமலேயே கொஞ்ச கொஞ்சமாய் கொல்வதாகும், அதே போல் இந்த எண்ணெய்களை ஒன்றாக கலக்கி தீபம் ஏற்றினால் அதன் விளைவு இதனால்தான் உண்டானது என சந்தேகப்படா வண்ணம் நடக்கும். 
🌼அந்த செயல் என்னென்ன என்று அறியுங்கள், குழந்தைகளுக்கு முறை தவறிய திருமணம் நடக்கும். இது கலப்பு கல்யாணமாகவும் இருக்கும், 
🌼காதல் திருமணமாகவும் இருக்கும். பெண்ணுக்கு வயது கூடி ஆணுக்கு குறைந்தும் நடக்கும், திருமணத்தில் நம்பி மோசம் போகும் சம்பவங்கள் நடக்கம். இதில் எது வேண்டுமானாலும் நடக்கும், அடுத்து குடும்பத்தில் நம் விருப்பத்தோடு உறவுகள் விலகல் உண்டாகும், கலகங்கள் உண்டாகும், திடீர் என பொருள் களவு போதல் உண்டாகும். திடீர் அறுவை சிகிச்சை கொடுக்கும், இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், 
🌼அதிலும் குறிப்பாக மேற்கண்ட நிகழ்வுகள் யாவுமே நமக்கு நல்ல நேரம் காலம் என்று எப்போது ஜோதிடம் காட்டுகிறதோ அப்போதுதான் நடக்கும், வழிமுறை தெரியாமல் அகப்பட்டுக் கொண்ட மக்கள் பின்னாளில் துன்பப்படும்போது இதனால்தான் நமக்கு நடக்கிறது என்று அறியாமல் விழிப்பார்கள், 
🌼ஜோதிடத்தில் நன்றாக இந்த ஆண்டு இருக்கும் என்றார்களே ஆனால் இந்த ஆண்டுதானே கஷ்டப்படுகிறேன் அவ்வாறெனில் ஜோதிடம் தெய்வம் பொய்யா என கேள்வியும் கேட்பார்கள் 
🌼இவ்வாறு கேட்பவர் குடும்பம் இப்படி ஏதாவது ஒரு தவறை செய்து அகப்பட்டுக் கொண்டவர்களாக இருப்பார்கள் . எத்தனையோ வழிமுறையில் தவறுகள் நடந்தாலும் அதில் இந்த கலப்பு எண்ணெய்யாலும் தவறு நடப்பதால் சுட்டி காட்டினோம் .
🌼 கலப்பாக எண்ணெய் கூட்டி ஏற்றும் போது அப்போதைக்கு செயல் நடந்தார் போல் இருக்கும் அது மட்டும் தான் நமக்கு தெரியும் ஆனால் அதன் எதிர்மறை பலன் மேலே கூறியிருந்தார்போல் நடக்கும் .
 🌼10 ஆண்டுகள் யாம் இதற்காக எடுத்துக் கொண்ட ஆய்வில் சுயமாகவே அறிந்தே கூறியுள்ளேன், அதே நேரத்தில் இக்கருத்தை ஆய்வு செய்தேனே தவிர இதை அக்காலத்திலேயே தெளிவாக கூறிச் சென்றுள்ளார்கள், நமக்கு முறையாக தெளிவாக கூற இன்று யாரும் இல்லாததால் நல்லது கெட்டது அறிய முடியாமல் போகிறது, மீண்டும் அக்காலம் போல் ஆய்வு செய்து தெரிந்து கொள்ள வேண்டியதாகிறது .
🌼ஒரு ரகசியத்தை அறிக  
🌼அக்காலத்தில் காளி அம்மன் அருளை பெறவும் கடினமான பிரச்சனைக்கு உடனே தீர்வு காணவும் 5 எண்ணெய் கூட்டி புது அகலில் தீபம் தனி அறையில் ஏற்றி அங்கு அண்ணம் தண்ணீர் எதுவுமின்றி மௌனமாய் மூன்று தினம் விரதமிருந்து தீப வெளிச்சத்தை தவிர பிற வெளிச்சமும் காணாமல் அம்மனை மனதிலே பூஜித்திருந்தால் அம்மன் கோரிக்கையை நிறைவேற்றி கொடுப்பாள் விரைவில் தீர்வுகிடைக்கும் . இந்த முறையை இன்றைக்கும் கடைபிடிக்கலாம் . வேறு மார்கத்தில் 5 எண்ணெய் கூட்டி திபம் ஏற்றினால் பஞ்சமே உண்டாகும் .

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s