சந்திரன்

பரம்பொருள் ( சிவபெருமான்) பிறையை ( சந்திரனை ) சடைமுடியில் தரித்துக் கொண்ட காரணம் பற்றிப் பார்ப்போம்

தக்கன் தன்னுடைய இருபத்தேழு ( 27) பெண்களையும் சந்திரனுக்கு விவாகஞ்செய்து ( திருமணம் செய்து ) கொடுத்தபோது இவர்கள் எல்லாரிடத்திலும் ஒரே தன்மையான இஷ்டமுள்ளவனாய் ( விருப்பமுள்ளவனாய்) இரு என்று சொல்லி அவ்வண்ணமாகயிருந்த சந்திரன் தன் ஸ்திரீகளுள் ( மனைவிகளுள்) மிகுந்த சவுந்தரியமுள்ள கார்த்திகை, உரோகினி என்னும் இரண்டு ஸ்திரீகளிடத்தில் மாத்திரம் மிகுந்த இஷ்டமுள்ளவனாய் ( விருப்பமுள்ளவனாய்) இருந்தான்

மற்ற இருபத்தைந்து ( 25 ) ஸ்திரீகளிடத்திலும் இஷ்டமில்லாதவனாய் ( விருப்பமில்லாதவனாய் ) இருந்தான் அவர்கள் மனம்வருந்தித் தக்கனிடத்தில் சொல்லிக் கொண்டார்கள். அவன் கோபங்கொண்டவனாய்சந்திரனுடைய சோடசகலைகளும் அழிவுறும்படிச் சபித்தான் ( சாபமிட்டான்) அந்தச்சாபத்தின்படி தினம் ஒரு கலையாகப் பதினைந்து (15) கலை குறையக்கண்ட சந்திரன்

துயரங்கொண்டு தேவேந்திரனிடத்தில் சொல்ல இந்தச்சாபம் என்னால் நீக்கத்தக்கதல்ல என்று சொல்லிவிட்டு நீ போய் பிரம்மதேவனிடத்தில் போய்ச் சொல்லச் சொன்னான். சந்திரன் போய்ச்சொன்னவுடன் பிரம்மன் நான் சொன்னாலும் தக்கன் இந்த சாபத்தை நிவர்த்தி செய்யமாட்டான் என்று சொல்லிவிட்டார். மேலும் நீ வைகுந்தத்துக்குப் போய் விஷ்ணுவிடத்தில் போய் விண்ணப்பம் செய்துகொள் என்று சொல்ல சந்திரன் அப்படியே செய்ய தன்னால் முடியாது ஸ்ரீ கைலாசகிரிக்குப் போய்க் ( கைலாயமலையில்) பரமசிவனிடத்தில் விண்ணப்பம் செய்து கொண்டால் இந்தச் சாபம் நிவர்த்தியாகும் என்று விஷ்ணு சொல்ல அதைக் கேட்டுக்கொண்டு சந்திரன் ஸ்ரீகைலாயகிரிக்குப் ( கைலாயமலை) போய் பரமசிவனைப் பணிந்து தோத்திரம் ( சமஸ்காரம் ) செய்தான்

பரமசிவன் கிருபை கூர்ந்து சந்திரன் இடத்தில் இருந்த ஒரு கலையினையை தமது சடைமுடியில் தரித்துக்கொண்டு இது உன்னிடத்தில் இருந்தால் தக்கன் சாபம் இதனையும் அழித்துவிடும் ஆகவே இனி நம்முடைய திருமுடியிலிருக்கிற கலையைத் தொடராது இந்தக் கலைகள் அழியாமல் இருக்க வேண்டும் என்றால் உனக்கு முன்னிருந்தது போல நாளுக்கு நாள் ஒவ்வொரு கலையாக வளர்ந்து சோடசகலைகளும் நிறைவுபடும். அப்படி நிறைந்தாலும் வளர்ந்தது போல மறுபடியும் ஒவ்வொரு கலையாக குறைந்தும் மீண்டும் வளர்ந்தும் இருக்குமென்று அநுக்கிரகஞ் செய்தார் சந்திரன் மிக்க சந்தோசத்துடன் சுவாமியைத் ( சிவபெருமானை) தோத்திரஞ்செய்து விடைபெற்றுக்கொண்டு தன் பதவியிற்போய் சேர்ந்தான்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s