கோபூஜை

​ஹிந்து சம்பிரதாயத்தில் கோமாதாவை பூஜிப்பது ஆசாரமாக உள்ளது. இதை தான் கோபூஜை என்பர். இதை

நம் புராணங்களில் விசேஷமாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோக்ஷீரத்தில் (பசும்பால்) நான்கு சமுத்திரங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. ஸர்வாங்கங்களில் ஸமஸ்த புவனங்களும் ஒளிந்திருப்பதாக வேத பண்டிதர்கள் கூறுவதுண்டு.
பசுவின் உடல் பாகங்களில் ஒளிந்திருக்கும் தேவதைகளின் விவரங்களை ஆராய்வோம்… 

நெற்றி, கொம்பு பாகத்தில் சிவபெருமான் வீற்றிருக்கிறார். ஆகையால் கொம்பின் மேல் தெளிக்கப்பட்ட நீரை உட்கொண்டால், த்ரிவேணி சங்கமத்திலுள்ள நீரை ப்ரோக்ஷணம் செய்து கொண்ட பலன் கிட்டும் என்று புராணங்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல் சிவாஷ்டோத்திரம், ஸஹஸ்ரநாமம் சொல்லி வில்வத்தினால் பூஜை செய்தால், ஸாக்ஷாத் காசி விஸ்வநாதரை பூஜை செய்த பலன் கிட்டும் என்று வேத பண்டிதர்கள் கூறுகிறார்கள்.
நாசி துவாரத்தில் ஸுப்ரஹ்மண்யர் குடியிருப்பதால், நாசி துவாரத்தை பூஜித்தால் புத்திர சோகம் இராது. 

காதுகளருகே அஸ்வினி தேவர்கள் கொலுவிருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். அதனால் செவிகளை பூஜித்தால் அனைத்து விதமான நோய்களிலிருந்தும் விடுபடலாம். பசுவின் கண்களில் சூரிய சந்திரர்கள் இருப்பார்கள் என்றும், அவற்றை பூஜிப்பதால் அஜ்ஞானம் என்ற இருள் விலகி, ஞான ஒளி, சகல விதமான சம்பத்துகளும் கிட்டும் என்று கூறுகிறார்கள். பசுவின் நாக்கில் வருண தேவர் இருப்பதனால், அதை பூஜிப்பதால் உரிய காலத்தில் சந்ததி உண்டாகும் என்று கூறுகிறார்கள்.

கால்களுக்கு மேலே ஸரஸ்வதியை பூஜித்தால் வித்யா ப்ராப்தி. 

வலது கன்னத்தில் யமதர்மராஜரும், இடது கன்னத்தில்  தர்மதேவதைகள் இவர்களை பூஜித்தால் யமனின் தொல்லை இராது மற்றும் புண்ணிய லோக ப்ராப்தி கிட்டும்.

உதடுகளில் உள்ள ப்ராத: ஸந்தியாதி தேவதைகள் பூஜித்தால் பாபங்கள் நசிக்கும்.

கண்ட்த்தில் (கழுத்தில்) இந்திரன் உள்ளபடியால், இதை பூஜித்தால் இந்த்ரியங்கள் அடக்கும் சக்தி ஏற்படும், சந்தான் ப்ராப்தி உண்டாகும்.

மடியில் நான்கு புருஷார்த்தங்களும் உள்ளன. அதை பூஜித்தால் தர்மார்த்த காம மோக்ஷம் கிட்டும் மற்றும் பூமியில் நாகங்களின் பயம் இருக்காது.

குளம்பில் கந்தர்வர்கள் உள்ளபடியால் குளம்பினை பூஜித்தால் கந்தர்வ லோக ப்ராப்தி கிட்டும்.

குளம்பினருகில் அபஸரஸுகள் இருப்பதால் இதை பூஜித்தால் அன்யோன்யமும், ஸௌந்தர்யமும் கிட்டும்.

அதனால் கோமாதாவை ஸகல தேவதா ஸ்வரூபமாக பாவித்து பூஜை செய்கிறார்கள்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s