நித்ய கர்மானுஷ்டானம் (37)

ஸ்ம்ருத்யாசமனம் (ஸ்மார்த்தாசமனம்)

லக்ஷணம்:

த்ரிராசாமேத் ஹ்ருதயங்க மாபிரத்பி: த்ர்ரோஷ்டௌ பரிம்ருஜேத் (த்விரித்யேகே) ஸக்ருதுபஸ்ருஸேத் (த்விரித்யேகே) தக்ஷிணேன பாணினா ஸவ்யம் ப்ரோக்ஷ்ய, பாதௌ ஸிரஸ்சேந்த்ரியாண்யுபஸ்ப்ருஸேத், சக்ஷுஷி நாஸிகே ஸ்ரோத்ரே ச, அதாப உபஸ்ப்ருஸேத் ||

த்ரிராசாமேத் ஹ்ருதயங்க மாபிரத்பி:

ஜலத்தை எடுத்துக் கொண்டு ஸ்வாஹா, ஸ்வாஹா, ஸ்வாஹா என்று மூன்று முறை ஆசமனம் செய்ய வேண்டும். ஜலம் கண்டத்தினுள் இறங்கி ஹ்ருத்யஸ்தானம் சேர்ந்ததாக உணர்ந்த பிறகே மறுபடியும் ஆசமனம் செய்ய வேண்டும். இப்படி மூன்று முறை ஆசமனம் செய்ய வேண்டும்.

த்ரிரோஷ்டௌ பரிம்ருஜேத் || (த்விர்த்யேகே)

பிறகு (அங்குஷ்ட மூலத்தினால் வலது பெருவிரலின் கீழ் பாகத்தினால்) உதடுகளை மூன்று முறை துடைத்துக் கொள்ள வேண்டும். (இரண்டு முறை என்று சிலரின் அபிப்ராயம்).

ஸக்ருதுபஸ்ப்ருஸேத் || (த்விரித்யேகே)

மத்யம்-அனாமிகத்தினால் (நடுவிரல்-மோதிரவிரல்) உதடுகளை ஒரு முறை துடைத்துக் கொள்ள வேண்டும். (இரண்டு முறை என்று சில்ரின் நம்பிக்கை).

தக்ஷிணேன பாணினா ஸவ்யம் ப்ரோக்ஷ்ய, பாதௌ, ஸிரஸ்ச ||

வலது கையினால் இடது உள்ளங்கை மீது, இரண்டு பாதங்களின் மீது, ஸிரஸின் மீது ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும்.

இந்த்ரியாண்யுபஸ்ப்ருஸேத், சக்ஷுஷி நாஸிகே ஸ்ரோத்ரே ச ||

(அங்குஷ்ட-அநாமிகத்தினால்) (பெருவிரல்-மோதிரவிரல்) கண்களை, (அங்குஷ்ட-தர்ஜனீயினால்) (பெருவிரல்-ஆள்காட்டிவிரல்) மூக்கின் துவாரங்களை, (அங்குஷ்ட-கனிஷ்டகத்தினால்) (பெருவிரல்-சிறுவிரல்) காதுகளை தொடவும்.

அதாப உபஸ்ப்ருஸேத் ||

பிறகு உள்ளங்கைகளை முன்னும் பின்னும் துடைத்துக் கொள்ளவும்.

ஸந்த்யாவந்தனம் ஆரம்பிப்பதற்கு முன்பு, புராணாசமனம் செய்த பிறகு இந்த ஆசமனத்தை செய்ய வேண்டும். மற்றும் ஸந்த்யோபாஸனத்தில் நடு நடுவில் இந்த ஆசமனத்தை செய்ய வேண்டி வரும்.

 புராணாசமனம்

கேஸவாத்யைஸ்திபி: பீத்வா த்வாப்யாம் ப்ரக்ஷாளயேத் கரௌ |

த்வாப்யாமோஷ்டௌ ச ஸம்ருஜ்ய த்வாப்யாமுன்மார்ஜனம் ததா ||

ஏகேன ஹஸ்தம் ப்ரக்ஷாள்ய பாதாவபி ததைகத: | 

ஏகேனாபி ச முர்த்தானம் ததஸ்ஸங்கர்ஷணாதிபி: ||

ஸர்வாஸாமங்குளீனாம் வை மூலேன சுபுகம் ஸ்ப்ருஸேத் |

தர்ஜன்யங்குஷ்டயோகேன நாஸிகே த்வே உபஸ்ப்ருஸேத் ||

அங்குஷ்டாநாமிகாப்யாம் து சக்ஷுஸ்ஸ்ரோத்ரே உபஸ்ப்ருஸேத் |

கனிஷ்டாங்குஷ்டயோ ர்யோகாத் நாபிதேஸமுபஸ்ப்ருஸேத் |

கரமத்யம் ஹ்ருதிஸ்தாப்ய கராக்ரம் ஸிரஸே ந்யஸேத் ||

முகுளேன ச ஹஸ்தேன பாயுமூல முபஸ்ப்ருஸேத் |

ஏவமாசமனம் க்ருத்வா ஸாக்ஷான்நாரயணோ பவேத் ||

புராணாசமனம் விதானத்தின் விவரம் கீழ் வருமாறு:

ஓம் கேஸவாய ஸ்வாஹா, ஓம் நாராயணாய ஸ்வாஹா,

ஓம் மாதவாய ஸ்வாஹா

என்று மூன்று முறை ஜலத்தை உட்கொள்ள வேண்டும்.

ஓம் கோவிந்தாய நம:, ஓம் விஷ்ணவே நம:

என்று உள்ளங்கைகளை ஜலத்தினால் துடைத்துக் கொள்ள வேண்டும்.

ஓம் மதுஸூதனாய நம:, ஓம் த்ரிவிக்ரமாய நம:

என்று வலது கை பெருவிரலினால் மேல் உதட்டையும், பிறகு கீழ் உதட்டையும் துடைத்துக் கொள்ள வேண்டும்.

ஓம் வாமனாய நம:, ஓம் ஸ்ரீதராய நம:

என்று ஸிரஸின் மீது இரண்டு முறை ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும்.

ஓம் ஹ்ருஷீகேஸாய நம: என்று இடது கையின் மீது ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும்.

ஓம் பத்மநாபாய நம: என்று பாதங்களின் மீது ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும்.

ஓம் தாமோதராய நம: என்று ஸிரஸின் மீது ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும்.

ஓம் ஸங்கர்ஷணாய நம: என்று கை விரல்களை முஷ்டியாக செய்து (விரல்களின் மூலத்தினால் தாடையை (மோவாய்) தொடவும்.

ஓம் வாஸுதேவாய நம: ஓம் ப்ரத்யும்னாய நம:

என்று அங்குஷ்ட-தர்ஜனீ விரல்களினால் மூக்கின் துவாரங்களை தொடவும்.

ஓம் அநிருத்தாய நம:, ஓம் புருஷோத்தமாய நம:

என்று அங்குஷ்ட-அனாமிக விரல்களினால் கண்களைத் தொடவும்.

ஓம் அதோக்ஷஜாய நம:, ஓம் ந்ருஸிம்ஹாய நம:

என்று அங்குஷ்ட-அனாமிக விரல்களினால் காதுகளைத் தொடவும்.

ஓம் அச்யுதாய நம: என்று அங்குஷ்ட-கனிஷ்ட விரல்களினால் நாபியைத் தொடவும்.

ஓம் ஜனார்த்தனாய நம: என்று உள்ளங்கையினால் வக்ஷஸ்தலத்தை தொடவும்.

ஓம் உபேந்த்ராய நம: என்று வலது கையினால் ஸிரஸைத் தொடவும்.

ஓம் ஹரயே நம:, ஓம் ஸ்ரீ க்ருஷ்ணாய நம:

என்று வலது கையை மடித்து வலது, இடது தோள்களைத் தொடவும். இந்த விதமாக ஆசமனம் செய்த நபர் ஸ்ரீமந்நாராயணனுக்கு சம்மாகிறான்.

இந்த புராணாசமனம் ஸந்த்யோபாஸன ஆரம்பத்தில், முடிவில் ஸ்ம்ருத்யாசமனத்திற்கு முன்பு செய்ய வேண்டும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s