நித்ய கர்மானுஷ்டானம் (36)

​ஸ்ரௌதாசமனம்

லக்ஷணம்:

த்ரிராசாமேத், த்வி: பரிம்ருஜ்ய, ஸக்ருதுபஸ்ப்ருஸ்ய, யத்ஸவ்யம் பாணிம் | பாதௌ ப்ரோக்ஷதி, ஸிரஸ்சக்ஷுஷி நாஸிகே ஸ்ரோத்ரே ஹ்ருதயமாலப்ய ||

த்ரி ராசாமேத் – என்று மூன்று முறை உளுந்து மூழ்கும் அளவு ஜலத்தை ப்ரஹ்மதீர்த்தமாக ஆசமனம் செய்யவும்.

த்வி: பரிம்ருஜ்ய, ஸக்ருதுபஸ்ப்ருஸ்ய – வலது கை பெருவிரலை ஜலத்தில் நனைத்து, இரண்டு உதடுகளை தனித்தனியாக துடைத்து பிறகு இரண்டு உதடுகளை சேர்த்து ஒருமுறை  துடைத்துக் கொள்ளவும்.

யத்ஸவ்யம் பாணிம் பாதௌ ப்ரோக்ஷதி – என்று வலது கையினால் ஜலத்தை இடது உள்ளங்கை மீதும், இரண்டு பாதங்களின் மீதும் ப்ரோக்ஷித்துக் கொள்ளவும்.

ஸிரஸ்சக்ஷுஷி நாஸிகே ஸ்ரோத்ரே ஹ்ருதய மாலப்ய – என்று ஸிரஸின் மீது ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொண்டு, அங்குஷ்ட-அனாமிக (பெருவிரல்-மோதிரவிரல்) விரல்களினால் கண்களையும், அங்குஷ்ட-தர்ஜனீ (பெருவிரல்-ஆள்காட்டிவிரல்) விரல்களினால் மூக்கையும், அங்குஷ்ட-அனாமிக (பெருவிரல்-மோதிரவிரல்) விரல்களினால் காதுகளையும், உள்ளங்கையினால் ஹ்ருதயத்தையும் தொடவும்.

ப்ரஹ்ம யக்ஞத்திற்கு முன்பாக ஸ்ரௌதாசமனம் என்ற இந்த விதானமாக ஆசமனம் செய்யவும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s