நித்ய கர்மானுஷ்டானம் (35)

​ஆசமனம் விதானம்

அந்தர்ஜாம: ஸுசௌதேஸ உபவிஷ்ட உதங்முக: |

ப்ராக்வா ப்ராஹ்மேண தீர்த்தேன த்விஜோ நித்யமுபஸ்ப்ருஸேத் ||

த்விஜன் சுத்தமான இடத்தில் ஆஸனம் மீது அமர்ந்து வடக்கு முகமாக அல்லது கிழக்கு முகமாக இரண்டு கைகளையும் முழங்கால்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு வலது கையினால் ப்ரஹ்ம தீர்த்தம் வழியாக ஆசமனம் செய்ய வேண்டும் என்று யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி கூறுகின்றது.

ஒவ்வொரு காரியத்திற்க்கும் ஒவ்வொரு ஆசமன விதானம் கூறப்பட்டுள்ளது. ஆசமனம் மூலம் நம்மை நாமே சுத்தப்படுத்தி கொள்வது மட்டுமே அல்லாமல், ப்ரஹ்மம் முதல் த்ருணம் வரை உள்ள எல்லாவற்றையும் திருப்தி செய்கிறோம். ஆசமனம் செய்யாமல் செய்யப்படும் எல்லா கர்மாக்களும் வீணாகும். அதனால் ஸௌச அனந்தரம் சாஸ்திரத்தில் ஆசமன க்ரியை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுத்தமான மடி வஸ்திரத்தை த்ரிகச்சம் அல்லது பஞ்சகச்சம் அணிந்து, ஸிகையை முடித்துக் கொண்டு, உபவீதியாக, மோதிர விரலுக்கு தேவ பவித்ரத்தை அணிந்து, ஆஸனத்தின் மீது பகவத் த்யானத்துடன் அமர்ந்து, பாதங்களை தரையில் ஊன்றி ஆசமனம் செய்ய வேண்டும். வடக்கு, ஈஸான்யம் அல்லது கிழக்கு முகமாக உட்கார்ந்து ஆசமனம் செய்ய வேண்டும். கைகள் முழங்காலளுக்கு உள்பக்கமாக இருக்க வேண்டும். தெற்கு, மேற்கு முகமாக ஆசமனம் செய்யக்கூடாது.

ஆசமனம் செய்யப்படும் ஜலம் நுரை, நீர்க்குமிழி(bubble) இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். ஆசமனம் செய்யும் பொழுது வாயின் வழியே எந்த விதமான சப்தமும் வரக்கூடாது.

ஆசமனம் செய்யும் ஜலம் ப்ராஹ்மணர்களுக்கு ஹ்ருதயம் வரை, க்ஷத்ரியர்களுக்கு கண்டம் வரை, வைஸ்யர்களுக்கு கன்னத்தின் உள்பாகம் வரை, சூத்திரர்கள் மற்றும் ஸ்த்ரீகளுக்கு நாக்கு வரை சேரும்படி எடுத்துக் கொள்ளவும்.

கோகர்ணமாக கையை வைத்துக் கொண்டு உளுந்து முழுகுமளவு ஜலத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு ப்ரஹ்ம தீர்த்தமாக ஆசமனம் செய்ய வேண்டும்.

கோகர்ணம் மூன்று விதமாக கூறப்பட்டுள்ளது.

பெருவிரலை நடுவிரலையின் அடிபாகத்தில் மடித்து வைத்து, ஆள்காட்டி விரலை அவற்றின் மீது வளைத்து வைத்து மீதமுள்ள விரல்களை நிமிர்த்து வைத்தால் நம் கரம்(கை) கோகர்ணாக்ருதி (கோகர்ணம் – பசு காது போல்) வரும் (அல்லது)

ஆள்காட்டி விரலை வளைத்து பெருவிரலின் அடிபாகத்தில் சேர்த்து வைத்து, பெருவிரலை நடுவிரலின் நடு ரேகைக்கு சேர்த்து மீதி விரல்களை நிமிர்த்தி வைத்தால் கை கோகர்ணாக்ருதியாக இருக்கும் (அல்லது)

உள்ளங்கையை அர்த்த சந்திரன் போல் மடித்து பசுவின் காது (கோகர்ணம்) போல் செய்ய வேண்டும். கனிஷ்டிக (சிறு விரல்)ஐ மற்றும் அங்குஷ்டம் (பெருவிரல்)ஐ தூரமாக – தனித்தனியே இருக்கும் படி செய்து, மற்ற மூன்று விரல்களை நெருக்கி வைத்து கொண்டால் கை கோகர்ணாக்ருதியாக இருக்கும்.

ஆசமனம் செய்யும் பொழுது இடது கையின் ஆள்காட்டி விரலினால் வலது கையில் உள்ள ஜலத்தை தொட்டால் ஸோமபானம் அருந்திய பலன் கிட்டும்.

தும்மல் வரும் பொழுது, உமிழ்ந்த பிறகு, உறங்கி எழுந்த பின்பு, வஸ்திரத்தை அணிந்த பிறகு, கொட்டாவி விடும் சமயத்தில், கண்களிலிருந்து நீர் வந்த பிறகு ஆசமனம் செய்ய வேண்டும் அல்லது வலது காதினை தொடுவதன் மூலம் ஆசமன விதி பூர்த்தியாகும்.

உட்கார்ந்து ஆசமனம் செய்ய வேண்டும் என்பது இதற்கு முன்பே கூறப்பட்டுள்ளது. ஆனால், முழங்கால்களுக்கு மேலாக ஜலத்தில் நின்று கொண்டும் ஆசமனம் செய்யலாம். ஜலம் முழங்கால் அளவை விட கம்மியாக இருக்கும் பட்சத்தில் இந்த விதியை ஆசரிக்க்க்கூடாது.  அப்பொழுது உடகார்ந்தே ஆசமனம் செய்ய வேண்டும்.

ஆசமனம்

ஆசமனம் மூன்று வகையாக கூறப்பட்டுள்ளது. எல்லா கர்மாக்களிலும் இவற்றையே உபயோகப்படுத்தவும்.  அவை 1) ஸ்ரௌதாசமனம் (ஸ்ருத்யாசமனம்) 2) ஸ்ம்ருத்யாசமனம் (ஸ்மார்த்தாசமனம்) 3) புராணாசமனம்.

அ. ஸ்ரௌதாசமனம் (ஸ்ருத்யாசமனம்)

ஸ்ரௌதாசமன லக்ஷணம்

“தேவ்யா: பாதை: த்ரிபி: பீத்வா அப்ளிங்கைர்னவபி: ஸ்ப்ருஸேத் |

ஸப்தவ்யாஹ்ருதி ஸம்யுக்தா காயத்ரீ த்ரிபதா ஸிர: ||”

“தேவ்யா: பாதை: த்ரிபி: பீத்வா” என்றால்

ஓம் தத்ஸவிதுர்வரேண்யக்கு ஸ்வாஹா ||

ஓம் பர்கோ தேவஸ்ய தீமஹி ஸ்வாஹா ||

ஓம் தியோ யோ ந: ப்ரசோதயாத் ஸ்வாஹா ||

என்று இந்த மூன்று மந்திரங்களினால் மூன்று முறை கையிலுள்ள ஜலத்தை எடுத்துக் கொண்டு ஆசமனம் செய்ய வேண்டும்.

“அப்ளிங்கைர்னவபி: ஸ்ப்ருஸேத்” என்றால்

ஆபோஹிஷ்டா மயோபுவ:

தான ஊர்ஜே ததாதன

என்று உள்ளங்கைகளை ஜலத்தினால் துடைத்துக் கொள்ளவும்.

மஹேரணாய சக்ஷஸே

யோவ ஸ்ஸிவதமோ ரஸ:

என்று வலது கையின் பெருவிரலை ஜலத்தில் நனைத்து, இடதிலிருந்து

வலது புறம் வரை இரண்டு உதடுகளையும் தனித்தனியாக துடைத்துக் கொள்ளவும்.

தஸ்ய பாஜயதேஹ ந:

உஸதீ ரிவ மாதர:

என்று இரண்டு முறை தர்ப்பையினால் அல்லது வலது கை விரல்களினால் ஸிரத்தின் மீது ஜலத்தை தெளித்துக் கொள்ளவும்.

தஸ்மா அரங்க மாம வ:

என்று வலது கையினால் இடது கையின் மீது ஜலத்தை தெளித்துக் கொள்ளவும்.

யஸ்யக்ஷயாய ஜின்வத

என்று இரண்டு பாதங்களின் மேல் ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொள்ளவும்.

ஆபோஜனயதா ச ந:

என்று ஸிரத்தின் மீது ஜலத்தை தெளித்துக் கொள்ளவும்.

ஓம் பூ:

என்று வலது கை விரல்களை மடித்து மோவாயை தொடவும்.

ஓம் புவ:

ஓகும் ஸுவ:

என்று அங்குஷ்ட-தர்ஜனீ (பெருவிரல்-ஆள்காட்டி விரல்) இவற்றினால் இடது மற்றும் வலது மூக்கைத் தொடவும்.

ஓம் மஹ:

ஓம் ஜன:

என்று அங்குஷ்ட-அனாமிக (பெருவிரல்-மோதிர விரல்) இவற்றினால் இடது மற்றும் வலது கண்ணைத் தொடவும்.

ஓம் தப:

ஓகும் ஸத்யம்

என்று அங்குஷ்ட-கனிஷ்ட (பெருவிரல்-சிறுவிரல்) இவற்றினால் இடது மற்றும் வலது காதைத் தொடவும்.

ஓம் தத்ஸவிதுர்வரேண்யம்

என்று அங்குஷ்ட-கனிஷ்ட விரல்களினால் நாபியைத் தொடவும்.

ஓம் பர்கோ தேவஸ்ய தீமஹி

என்று வலது கையினால் ஹ்ருதயத்தைத் தொடவும்.

ஓம் தியோ யோ ந: ப்ரசோதயாத்

என்று வலது கை விரல்களினால் ஸிரத்தைத் தொடவும்.

ஓ மாபோ ஜ்யோதீ ரஸோ ம்ருதம்

என்று மடக்கிய கையினால் வலது தோளைத் தொடவும்.

ஓம் ப்ரஹ்ம பூர்ப்புவ ஸ்ஸுவரோம்

என்று இடது தோளைத் தொடவும்.

ஸந்தியாவந்தனத்தில் காயத்ரீ மந்த்ர ஜபம் செய்வதற்கு முன்பு, செய்த பின்பு இந்த ஆசமனத்தை செய்ய வேண்டும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s