நித்ய கர்மானுஷ்டானம் (32)

​பஸ்மதாரண விதி

ஸ்ராத்தே யக்ஞே ஜபே ஹோமே வைஸ்வதேவே ஸுரார்ச்சனே |

பஸ்ம த்ரிபுண்ட்ரை: பூதாத்மா ம்ருத்யும் ஜயதி மானவ: ||

(ஸ்ராத்தம், யக்ஞம், ஜபம், ஹோமம், வைஸ்வதேவம், தேவதார்ச்சனம் முதலியவற்றை செய்வதற்கு முன்பு த்ரிபுண்ட்ரத்தை அணிந்தவன் ம்ருத்யுவை ஜயித்தவனாவான்)

அக்ருத்வா பாலதிலகம் தஸ்ய கர்ம நிரர்த்தகம் – நெற்றியின் மீது திலகம் (பஸ்மம்) இல்லாமல் செய்யப்படும் கர்மாக்கள் எல்லாம் அர்த்தமற்றவை. அதனால் அவரவர்களின் சம்பிரதாயத்தை அனுசரித்து நெற்றியின் மீது திலகமோ, பஸ்மமோ அணிந்து ஸந்தியா வந்தனம் போன்ற நித்ய கர்மாக்களை ஆசரிக்கவும். குறைந்தது கையில் ஜலத்தை எடுத்துக் கொண்டு பஸ்ம ரேகைகள் போல் அல்லது திலகம் போல் பாவனை செய்து நெற்றியின் மீது இட்டுக் கொண்டால் நித்ய கர்மாக்களை ஆசரிக்கலாம் என்பது ரிஷியின் வாக்கு.

ஊர்த்வ புண்ட்ரம் ம்ருதா குர்யாத் பஸ்மனா து த்ரிபுண்ட்ரம் |

உபயம் சந்தனே நைவ அயங்கோத்ஸவ ராத்ரிஷு ||

மண் அல்லது கோபி சந்தனத்தினால் ஊர்த்வ புண்ட்ரமும், பஸ்மத்தினால் த்ரிபுண்ட்ரமும், ஸ்ரீ சந்தனத்தினால் இரண்டு விதமாக திலகத்தை இட்டுக் கொள்ளலாம். உற்சவ சமயத்தில், இரவு நேரங்களில் ஸ்ரீ சந்தனத்தை ஸர்வ அங்கங்களிலும் பூசிக் கொள்ளலாம்.

ஆக்னேயம் பஸ்ம ஸத்யோஜாத மிதி பஞ்சப்ரஹ்ம மந்த்ரை: ப்ரதிக்ருஹ்யா || (என்றால் ஸத்யோஜாத மந்திரங்களை சொல்லிக் கொண்டு பஸ்மத்தை கையில் எடுத்துக் கொள்ளவும்)

ஓம் ஸத்யோஜாதம் ப்ரபத்யாமி ஸத்யோஜாதாய வை நமோ நம: |

பவே பவே நாதி பவே பவஸ்வ மாம் | பவோத்பவாய நம: |

வாமதேவாய நமோ ஜ்யேஷ்டாய நம ஸ்ரேஷ்டாய நமோ ருத்ராய நம: காலாய நம: கலவிகரணாய நமோ பலவிகரணாய நமோ பலாய நமோ பல ப்ரமதனாய நம ஸ்ஸர்வபூத்தமனாய நமோ மனோன்மநாய நம: ||

அகோரேப்யோஉதகோரேப்யோ கோர கோர தரேப்ய: |

ஸர்வேப்யோ ஸ்ஸர்வ ஸர்வேப்யோ நமஸ்தே அஸ்து ருத்ர ரூபேப்ய: ||

தத் புருஷாய வித்மஹே | மஹா தேவாய தீமஹி |

தந்நோ ருத்ர: ப்ரசோதயாத் ||

ஈஸானஸ்ஸர்வ வித்யானா மீஸ்வர ஸ்ஸர்வ பூதானாம் ப்ரஹமாதிபதிர் ப்ரஹமணோஉதிபதி ர்ப்ரஹ்மா ஸிவோ மே அஸ்து ஸதாஸிவோம் ||

அக்னிரிதி அனேன சாஉபிமந்த்ர்ய ||

(என்றால் அக்னிரிதி என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டு கையிலுள்ள பஸ்மத்தை அபிமந்த்ரிக்கவும்)

அக்னிரிதி பஸ்ம | வாயுரிதி பஸ்ம | ஜல மிதி பஸ்ம | ஸ்தலமிதி பஸ்ம | வ்யோமேதி பஸ்ம | ஸர்வகும் ஹவா இதம் பஸ்ம | மன ஏதானி சக்ஷுகும் பஸ்மானி ||

மானஸ்தோக இதி ஸமுத்ருத்ய ஜலேன ஸம்ஸ்ருஜ்ய ||

(கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தினால் பஸ்மத்தை ஜலத்தினால் நனைக்கவும்)

மானஸ்தோகே தனயே மான ஆயுஷி மானோ கோஷு மானோ அஸ்வேஷு ரீரிஷ: | வீரான்மானோ ருத்ர பாமிதோ வதீர் ஹவிஷ்மந்தோ நமஸா விதேம தே | த்ராயுஷை: த்ரயம்பகை: திர்யக்திஸ்ரோ ரேகா: ப்ரகுர்வீத |

(என்றால் கீழே உள்ள மந்திரத்தை சொல்லிக் கொண்டு பஸ்மத்தை மூன்று ரேகைகள் வீதம் லலாடம்(நெற்றி), கண்டம்(கழுத்து), புஜம்(தோள்), கரம்(கை), ஹ்ருதயம்(மார்பு), உதரம்(நாபி) ஆகிய இடங்களில் இட்டுக் கொள்ளவும்)

ஓம் த்ராயுஷம் ஜபதக்னே: கஸ்யபஸ்ய த்ராயுஷம் | 

யத்தேவானாம் த்ராயுஷம் தன்மே அஸ்து த்ராயுஷம் ||

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம் |

உர்வா ருக மிவ பந்தனான் ம்ருத்யோர்முக்ஷீய மாம்ருதாத் ||

யே தே ஸஹஸ்ரமயுதம் பாஸாம்ருத்யோ மர்த்யாய ஹந்தவே |

தான் யக்ஞஸ்ய மாயயா ஸர்வா நவயஜாமஹே |

ம்ருத்யவே ஸ்வாஹா ம்ருத்யவே ஸ்வாஹா ||

ப்ராத: ஸ ஸலிலம் பஸ்ம மத்யாஹ்னே கந்தமிஸ்ரிதம் |

ஸாயஹ்னே நிர்ஜலம் பஸ்ம ஏவம் பஸ்ம விலேபயேத் ||

மத்யமானாமிகாங்குஷ்டை: அமலோம விலோமத: |

அதி ஸ்வல்பமவாயுஷ்யம் அதிதீர்க்கம் தப:க்ஷயம் ||

நேத்ரயுக்ம ப்ரமாணேன பாலே தீப்தம் த்ரிபுண்ட்ரகம் ||

(என்றால் – ப்ராத: காலத்தில் ஜலத்தினால் நனைத்த பஸ்மத்தையும், மதியம் சந்தனத்துடன் கலந்த பஸ்மமும், ஸாயங்காலம் ஈரமில்லாத (பொடி) பஸ்மத்தை இட்டுக் கொள்ளவும். பஸ்மத்தை இட்டுக் கொள்ளும் போது முதலில் அங்குஷட்த்தினால் (பெருவிரல்) ஊர்த்வபுண்ட்ரத்தை (நாமம்) நீளமாக இட்டுக் கொண்ட பிறகு மத்யம், அனாமிகா (நடு விரல், மோதிர விரல்)களினால் இடப்புறத்திலிருந்து வலப்புறத்திற்கு (இரண்டு ரேகைகள்/கோடுகள்) இட்டுக் கொண்டு, பெரு விரலினால் வலப்புறத்திலிருந்து இடப்புறத்திற்கு (ஓரு ரேகை/கோடு) இட்டுக் கொள்ளவும். இந்த விதமாக மூன்று பஸ்ம ரேகைகளை இட்டுக் கொள்ள வேண்டும். மூன்று ரேகைகளின் மத்ய(நடு) ஸ்தானம்(பாகம்) காலியாக இருக்க வேண்டும். இந்த பஸ்ம ரேகைகள் மிகவும் சிறியதாகவும், மிக நீளமாகவும் இருக்கக்கூடாது. நேத்ரயுக்ம ப்ரமாணமாக அதாவது இரண்டு கண்களின் கடைசி பாகத்தை தாண்டி போகாமல் நெற்றி பாகத்தில் பஸ்மத்தை மூன்று ரேகைகளாக இட்டுக் கொள்ளவும்)>

|| இதி பஸ்மதாரண விதி: ||

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s