நித்ய கர்மானுஷ்டானம் (28)

​ வஸ்த்ர தாரண விதி

நதிக்கரையில் ஈர வஸ்திரத்தை கீழ் பாகத்திலிருந்து களைய வேண்டும். ஆனால், க்ருஹத்தில் (வீட்டில்) ஸ்நானம் செய்த பிறகு ஈர வஸ்திரத்தை மேல் பாகத்திலிருந்து களைய வேண்டும். களைந்த ஈர வஸ்திரத்தை நான்கு பாகங்களாக மடித்து ஜலத்தை பிழிய வேண்டும். பிழித்த வஸ்திரத்தை இடது பக்கத்தில் வைத்து நதி ஜலத்திற்கு வெளியே – கரையில் இரண்டு முறை ஆசமனம் செய்ய வேண்டும். பிழித்த (ஈர) வஸ்திரத்தை தோளின் மீது போட்டுக் கொள்வது கூடாது. ஒரு வேளை போட்டுக் கொண்டால் அதன் பிறகு செய்யப்படும் கர்மாக்கள் பலனளிக்காது. அதனால் மறுபடியும் ஸ்நானம் செய்ய வேண்டும்.  ஈர வஸ்திரத்தை எப்பொழுது அணியக்கூடாது. அதே போல் மற்றவர்கள் உடுத்திய, உபயோகப்படுத்திய வஸ்திரங்களையும் தரித்துக் கொள்ளக் கூடாது. முடிந்த வரையில் அவரவர் வஸ்திரங்களை அவரவர்களே அணிந்து கொள்வது உத்தமம். ஸ்நானானந்தரம் வேறொரு வஸ்திரத்தினால் சரீரத்தை துடைத்துக் கொள்ள வேண்டும். வெறும் கைகளினால் கூட துடைத்துக் கொள்ளக்கூடாது. ஸ்நானம் செய்து வஸ்திரம் அணிந்த பிறகு தலையிலிருந்து ஜலம் சொட்டக்கூடாது. ஒரு வேளை அப்படி நடந்தால் மறுபடியும் ஸ்நானம் செய்ய வேண்டும். 

ஜலத்தில் நனைத்த அல்லது துவைத்த வஸ்திரத்தை கிழக்கு திசையிலிருந்து ஆரம்பித்து மேற்கு திசைக்கு அல்லது தெற்கு திசையிலிருந்து வடக்கு திசைக்கு முழுவதுமாக களைய (விடுப்பது) வேண்டும். இதற்கு எதிர்மறையாக களைத்தால் அந்த வஸ்திரம் சுத்தமற்றதாக கருதப்படும். அந்த வஸ்திரத்தை மறுபடியும் ஜலத்தில் துவைக்க வேண்டும். ஜலத்தில் உலர்ந்த வஸ்திரத்தினால் மற்றும் தரையின் மீது ஈர வஸ்திரத்தினால் ஆசமனம், தர்ப்பணம், ஜபம் முதலிய கர்மாக்களை செய்வது பலனளிக்காது என்பதை கருத்தில் கொள்ளவும்.

ஈர வஸ்திரத்தை ஜலத்தில் பிழியக்கூடாது.

எட்டு முழம் கொண்டது, வெள்ளை நிறத்துடன் கூடியது, கரை உள்ளது, வெளுத்தது (துவைத்த), உலர்ந்த வஸ்திரத்தை அணியவும். இந்த விதமான வஸ்திரத்தை உடுத்தியவர்களின் ஸர்வ கர்மாக்களும் பவித்ரமாகும்.

பஞ்சகச்சமாக வஸ்திரத்தை அணியவும். கட்சம் என்றால் மடிப்பு/கோமனம் என்று அர்த்தம். வஸ்திரத்தை அணியும் பொழுது ஒரு கச்சம் பின்புறமாக இருக்க வேண்டும். இரண்டாம் கச்சம் நாபி அருகிலும், மூன்றாவது கச்சம் இரண்டாவது கச்சத்திற்கு மேலேயும் (நாபி) இருக்க வேண்டும். இந்த விதமாக மூன்று கச்சங்களுடன் க்ரம்மாக வஸ்திரத்தை அணிந்த த்விஜன் முனீஸ்வரனாக போற்றப்படுவான். “தக்ஷிணோத்தரயோ: கக்ஷ்யோ: கச்சம்பத்னாதி” – என்றால் இடது, வலது பக்கத்தில் முடித்ததை இரண்டு கச்சங்களாக கூறப்பட்டு மொத்தம் பஞ்சகச்சம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலே உத்தரீயத்தை கண்டிப்பாக அணிய வேண்டும். ஏக வஸ்திரத்தை அணிந்து யக்ஞம், தானம், ஜபம், ஹோமம், வேதாத்யானம், பித்ரு தர்ப்பணம், போஜனம், தேவதார்ச்சனம் முதலியவைகளை செய்யக்கூடாது. எரிந்து போன வஸ்திரம், கிழிந்த வஸ்திரம், அழுக்கு வஸ்திரம், எலிகளினால் கடிக்கப்பட்ட வஸ்திரம், பசுவினால் கடிக்கப்பட்ட வஸ்திரம் – இவைகளை அணியக்கூடாது. ஈர வஸ்திரத்தை அணிவது திகம்பரத்வமாக (அம்மணம்/நக்னம்) கருதப்படும். அதே போல் மலினமானவை (அசுத்தமானவை), எரிந்தவை, (கிழிசல்) ஊசியால் தைக்கப்பட்டவை – இவற்றை அணிவது திகம்பரத்வத்திற்கு சமம் என்பதை அறிந்து கொள்ளவும். ப்ராஹ்மணர்கள் சுத்தமாக வெள்ளை வஸ்திரத்தையும், க்ஷத்ரியன் சிவப்பு வஸ்திரத்தையும், வைஸ்யன் மஞ்சள் வஸ்திரத்தையும், ஸூத்திரன் நீல வஸ்திரத்தையும் அணிய வேண்டும். உறங்குவதற்கு வேறு வஸ்திரத்தை அணிய வேண்டும். வாகனங்களில் வெளியே செல்வதற்கு வேறு வஸ்திரத்தை அணிய வேண்டும். அதே போல் பூஜை செய்யும் பொழுது வேறு வஸ்திரம் அணிய வேண்டும்.

நூல் வஸ்திரம் ஒரு நாளும், காவி வஸ்திரம் மூன்று நாட்களும், பட்டு வஸ்திரம் ஏழு நாட்களும் மடி வஸ்திரமாக பயன்படும். அந்தந்த நாட்கள் முடிந்துவிட்டால் மறுபடியும் துவைத்து உலர்த்தி அணிய வேண்டும். ’தாவளி’ (கம்பளி) மட்டும் எப்பொழுதும் மடி வஸ்திரமாக உபயோகப்படும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s