நித்ய கர்மானுஷ்டானம் (27)

நித்ய ஸ்நான விதி

தற்போதைய சூழ்நிலையில் நித்ய ஸ்நானத்திற்கு எல்லோரும் குளியலைறையை (பாத்ரூம்) தான் அண்டியிருக்கிறார்கள். அதுவும் குழாய் கீழே தான் ஸ்நானம் செய்கிறார்கள். அதனால் பக்கெட்டில் குழாய் மூலம் நிறைத்த ஜலத்தையே கங்கா ஜலமாக பாவனை செய்ய வேண்டும். கீழே குறிப்பிட்டது போல் கங்கா பிரார்த்தனை செய்து, ஸங்கல்பம் சொல்லி, மூன்று முறை அர்க்யம் விட்டு ஸ்நானத்தை பூர்த்தி செய்ய வேண்டும். எல்லோருக்கும் அனுகூலமாக இருக்கும்படி நித்யமும் ஆசரிப்பதற்கு ஏதுவாக சுருக்கமான ஸ்நான விதி கூறப்பட்டுள்ளது. அன்றாட வாழ்க்கையில் ஸ்நானம் மிகவும் முக்கியமானது, பவித்ரமானது. ஸ்நானத்தினால் ஜீர்ண சக்தி பெருகும். சரீரத்தில் தோல் பளபளப்பாக இருக்கும். மானசீக, சாரீரக செயல்பாட்டில் புத்துணர்ச்சி கூடும். ஸுத்தியின் மூலம் பவித்ரத்தை அடையும் சக்தி ஜலத்திற்கு மட்டுமே உள்ளது.  அன்றாடம் உபயோகப்படுத்தும் ஜலத்தில் பவித்ரமான பாவனையுடன் உபயோகிப்பதன் மூலம் வெளிபுறமும், உட்புறமும் பரிசுத்தம் ஸித்திக்கும் என்பது ரிஷியின் வாக்கு.

அத கங்கா த்யானம் (முதலில் கங்கையை கீழே கூறியுள்ளது போல் பிரார்த்திக்கவும்)

தீர்த்த ராஜாய நம:

த்வம் ராஜா ஸர்வதீர்த்தானாம் த்வமேவ ஜகத:பிதா |

யாசதோ தேஹி மே தீர்த்தம் ஸர்வபாபை: ப்ரமுச்யதே ||

யோஉஸௌ ஸர்வகதோ விஷ்ணு: சித்ஸ்வரூபீ நிரஞ்ஜன: |

ஸ ஏவ த்ரவரூபேண கங்காம் போ நாத்ர ஸம்ஸய: ||

கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம்ஸதைரபி |

முச்யதே ஸர்வபாபேப்யோ விஷ்ணுலோகம் ஸ கச்சதி ||

அம்ப! த்வத்தர்ஸனான்னுக்தி: நஜானே ஸ்நானஜம் ஃபலம் |

ஸர்வகாரோஹணாஸோபானே மஹாபுண்யதரங்கிணி ||

நந்தினி நளினி ஸீதா மாலினீ ச மஹாபகா |

விஷ்ணுபாதாஉப்ஜஸம்பூதா கங்கா த்ரிபதகாமினீ ||

பாகீரதீ போகவதீ ஜாஹ்னவீ த்ரிதஸேஸ்வரீ |

த்வாதஸைதானி நாமானி யத்ர யத்ர ஜலாஸ்ரயே |

ஸ்நானகாலே படேந்நித்யம் மஹாபாதக நாஸனம் ||

புஷ்கராத்யானி தீர்த்தானி கங்காத்யா: பரிதஸ்ததா |

ஆகச்சந்து பவித்ராணி ஸ்நானகாலே ஸதாமம ||

ஆசம்ய || ஸிகாம் பத்வா – தேஹம் ப்ரக்ஷாள்ய (ஆசமனம் செய்து ஸிகையை முடித்து ஸரீரம் நனையுமாறு ஸ்நானம் செய்யவும்)

புனராசம்ய (மறுபடியும் ஆசமனம் செய்து, கீழே கூறியுள்ள ஸங்கல்பம் சொல்லவும்)

கோவிந்த கோவிந்த ஸ்ரீ மஹா விஷ்ணோராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய அத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்தே ஸ்வேத வராஹகல்பே வைவஸ்வத மன்வந்தரே (அஷ்டாவிம்ஸண்மஹாயுகே) கலியுகே ப்ரதமபாதே ஜம்பூத்வீபே பாதர வர்ஷே பரதகண்டே மேரூ: தக்ஷிணே பார்ஸ்வே ஸகாப்தே அஸ்மின் வர்த்தமான வ்யாவஹாரிக ப்ரபவாதீ ஷஷ்டி ஸம்வத்ஸரணாம் மத்யே ஸ்வஸ்தி ஸ்ரீ …………….. நாம ஸம்வத்ஸரே ……………….. அயனே ……………. ருதௌ …………….. மாஸே ………………………. பக்ஷே ……………………… திதௌ …………………….. வாஸரே ஸுபவாஸரே ஸுபநக்ஷத்ரே ஸுபயோகே ஸுபகரணே ஏவம் க்ரஹகுண விஸேஷண விஸிஷ்டாயாம் ஸுபதிதௌ மம இஹ ஜன்மனி ஜன்மாந்தரேஷு மனோவாக்காய கர்மபி: ஜ்ஞானதோஉஜ்ஞானத: காயக வாசிக மானசிக ஸாம்ஸர்கிக (ஸ்ப்ருஷ்ட்வாஉஸ்ப்ருஷ்ட்வா, புக்தாஉபுக்தா, பீதாஉபீதா) ஸகல பாபக்ஷயார்த்தம் ப்ராத: கால (மத்யாஹ்னே, ஸாயம்கால) கங்கா ஸ்நானம் அஹம் கரிஷ்யே ||

என்று ஜலம் விடுத்து மறுபடியும் ஆசமனம் செய்ய வேண்டும்.  பிறகு கீழே கூறிய விதமாக மூன்று முறை அர்க்யம் (கைகளில் ஜலத்தை எடுத்து) விட வேண்டும்.

நம: கமலநாபாய நமஸ்தே ஜலஸாயினே |

நமஸ்தே கேஸவாஉனந்த க்ருஹாணாஉர்க்யம் நமேஉஸ்துதே ||

(இதி ப்ரதமார்க்யம் ஸமர்ப்பயாமி)

ஏஹி ஸூர்ய ஸஹஸ்ராம்ஸோ தேஜோராஸே ஜகத்பதே |

அனுகம்பய மாம் பக்த்யா க்ருஹாணாஉர்க்யம் நமோஉஸ்துதே ||

(இதி த்விதீயார்க்யம் ஸமர்ப்பயாமி)

தாது: கமண்டலூத்பூதே கங்கே த்ரிபதகாமினி |

த்ரைலோக்யவந்திதே தேவி க்ருஹாணாஉர்க்யம் நமோஉஸ்துதே ||

(இதி த்ர்தீயார்க்யம் ஸமர்ப்பயாமி)

புஷ்யாஉர்கே ஜன்மநக்ஷத்ரே வயதீபாதே ச வைத்ருதா |

ஸக்ருத்கோதாவரீ ஸ்நானம் குலகோடிம் ஸமுத்தரேத் ||

ஸரீரே ஜர்ஜரீபூதே வ்யாதிக்ரஸ்தே களேபரம் |

ஔஷதம் ஜாஹ்னவீதோயம் வைத்யோநாராயணோ ஹரி: ||

ஹரிகங்கே நமோகங்கே நமோகங்கே நமோ நம: |

ஸர்வாபராதினம் கங்கே ஸர்வபாபை: ப்ரமுச்யதே ||

மாஸோத்தமே மாஸமஹாமாங்கல்ய மாஸ மஹாபர்வணி

புண்யகாலே கங்கா கோதாவரீ ஸ்நானமஹம் கரிஷ்யே ||

ஸுஸ்நாதோ பவ || கங்கா கோதாவரீஸ்நானஃபல ஸித்திரஸ்து ||

(என்று முழுமையாக ஸ்நானம் செய்யவும், அதன் பிறகு உப வஸ்திரத்தினால் சரீரத்தை துடைத்துக் கொண்டு வேறொரு சுத்தமான வஸ்திரத்தை தரிக்கும் வரை கீழே கூறியுள்ள ஸ்லோகத்தை சொல்லவும்)

விஸ்வேஸம் மாதவம் டுண்டிம் தண்டபாணிம் ச பைரவம் |

வந்தே காஸிம் குஹாம் கங்காம் பவானீம் மணிகர்ணிகாம் ||

அயோத்யா மதுரா மாயா காஸீ காஞ்சீஹ்வந்திகா |

புரீ த்வாரவதீ சைவ ஸப்தைதே மோக்ஷதாயகா: ||

அச்யுதாஉனந்த கோவிந்த நாமோச்சாரணபேஷஜாத் |

நஸ்யந்தி ஸகலா ரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் ||

( அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம: )

இதி நித்ய ஸ்நான விதி:

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s