நித்ய கர்மானுஷ்டானம் (21)

​ ஸ்நான பேதங்கள்

மந்த்ர ஸ்நானம், பௌம ஸ்நானம், ஆக்னேய ஸ்நானம், வாயவ்ய ஸ்நானம், திவ்ய ஸ்நானம், வாருண ஸ்நானம் மற்றும் மானசீக ஸ்நானம் என்று ஸ்நானங்கள் ஏழு விதமாக கூறப்பட்டுள்ளன.

மந்த்ர ஸ்நானம் – ஆபோஹிஷ்டா மந்திரங்களை சொல்லிக் கொண்டு மார்ஜனம் செய்து கொள்வது மந்த்ர ஸ்நானம் எனப்படும்.

பௌம ஸ்நானம் – பவித்ரமான இடத்தில் மண்ணை எடுத்துக் கொண்டு ஸ்நான மந்திரங்களை சொல்லிக் கொண்டு சரீரத்திற்கு பூசிக் கொள்வதை பௌம ஸ்நானம் என்பர். இதையே பார்திவ ஸ்நானம் என்று கூட சொல்வதுண்டு.

ஆக்னேய ஸ்நானம் – “த்ர்யாயுஷம் ஜமதக்னே:” இத்யாதி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு பஸ்மத்தை தேஹம் முழுவதும் பூசிக் கொள்வதை ஆக்னேய ஸ்நானம் என்பர். இதை பஸ்ம ஸ்நானம் என்று கூட சொல்வதுண்டு.

வாயவ்ய ஸ்நானம் – பசுவின் கால் குளம்புகளின் உராய்தல் மூலம் வெளியேறும் தூளியை (தூசு) காயத்ரீ மந்திரத்தை ஜபித்துக் கொண்டு தேஹத்தில் படுமாறு செய்வதை வாயவ்ய ஸ்நானம் என்பர்.

திவ்ய ஸ்நானம் – உத்தராயண காலத்தில் ஸூர்யனின் வெட்பம் இருக்கும் பொழுது மழை பெய்யும் பட்சத்தில் அந்த மழையின் நீரில் நனைதல்-ஸ்நானம் செய்தல் திவ்ய ஸ்நானம் எனப்படும்.

வாருண ஸ்நானம் – தண்ணீரில் மூழ்கி செய்யப்படும் ஸ்நானம்  வாருண ஸ்நானம் எனப்படும்.

மானசீக ஸ்நானம் – ஆத்மசிந்தனை செய்வதே அல்லது நிர்மலமான சித்தத்தினால் பரமேஸ்வரனை தியானிப்பதே மானசீக ஸ்நானம் என கூறப்பட்டுள்ளது.

மேலே கூறப்பட்டுள்ள ஏழு விதமான ஸ்நானம் மட்டுமல்லாமல், இன்னும் பல விதமான ஸ்நானம் பற்றி கூறப்பட்டுள்ளது.

ஸாரஸ்வத ஸ்நானம் – வேத பண்டிதர்களால் “நீ ஸ்நானம் செய்தவனாகிறாய்” என்று அனுக்ரஹம் பெற்றால் “ஸாரஸ்வத ஸ்நானம்” என்று கூறப்பட்டுள்ளது.

காபில ஸ்நானம் – ஈரத் துணியினால் சரீரம் முழுவதையும் துடைத்துக் கொள்வதை “காபில ஸ்நானம்” எனப்படும்.

த்யான ஸ்நானம் – விப்ர பாதோதகத்தினால், விஷ்ணு பாதோதகத்தினால், துளசி ஜலத்தினால் ப்ரோக்ஷித்துக் கொள்வதை “த்யான ஸ்நானம்” ஆகும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s