நித்ய மானுஷ்டானம் (20)

​ஸ்நான ப்ரகரணம்-குளியல் முறை

ஸ்லோகம்||

”குணா தஸ ஸ்நானபரஸ்ய ஸாதோ |

ரூபம் ச தேஜஸ்ச பலம் ச ஸௌசம்|

ஆயுஷ்யமாரோக்யமலோலுபத்வம் து:ஸ்வப்னநாஸஸ்ச தபஸ்ச மேதா: ||”

ஓ சாதுவே! ரூபம், தேஜஸ், பலம், பவித்ரம் (சுத்தம்), ஆயுள், ஆரோக்கியம், நிர்லோபம், து:ஸ்வப்ன நாஸனம், தபஸ், மேதஸ் என்ற இந்த பத்து குணங்கள் ஸ்நானம் செய்பவர்களுக்கு கிட்டும் என்று தக்ஷஸ்ம்ருதியில் கூறப்பட்டுள்ளது.

”ஸ்நானமூலா: க்ரியா: ஸர்வா: ஸ்ருதிஸ்ம்ருத்யுதிதா ந்ருணாம் |

தஸ்மாத் ஸ்நானம் நிஷேவேத ஸ்ரீபுஷ்ட்யாரோக்யவர்தனம் ||”

ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் கூறப்பட்டுள்ள ஸகல கர்மாக்களும் ஸ்நான மூலமானவையே. அதனால் ஐஸ்வர்யம், பலம், ஆரோக்கியம் போன்றவை வ்ருத்தியாக வேண்டும் என்று கோருபவர் எப்பொழுதும் கண்டிப்பாக ஸ்நானம் செய்ய வேண்டும்.

”உத்தமம் து நதீஸ்நானம் தடாகே மத்யமம் ஸ்ம்ருதம் |

கூப ஸ்நானம் து ஸாமான்யம் பாண்டஸ்நானம் வ்ருதாபவேத் ||”

நதிஸ்நானம் உத்தமமானது. மத்யமம் தடாக ஸ்நானம். கிணறு அல்லது கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட ஜலஸ்நானம் ஸாமான்யமானது. பாண்ட ஜலஸ்நானம் (பக்கெட்டிலிருந்து எடுத்து குளித்தல்) அதமம் என்பது தாத்பர்யம். இதையே அக்னிபுராணத்தில் இந்த விதமாக கூறப்பட்டுள்ளது.

கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட ஜலத்தை காட்டிலும் ஆற்று நீர் பவித்ரமானது. ஆற்று நீரை விட ஏரி நீர் பவித்ரமானது. ஏரி நீரை விட நதி ஜலம் மிகவும் பவித்ரமானது. நதி ஜலத்தையும் விட தீர்த்த (புண்ணிய நதி) ஜலம் இன்னும் பவித்ரமானது. கங்கா ஜலம் எல்லாவற்றையும் விட மிகவும் பவித்ரம், புண்ணியமானதும் ஆகும்.

க்ருஹஸ்தர்கள், வானப்ரஸ்தர்கள் தினத்திற்கு இரண்டு முறை ஸ்நானம் செய்ய வேண்டும். யதி (ஸந்நியாசி) தினத்திற்கு மூன்று முறை ஸ்நானம் செய்ய வேண்டும். இனி ப்ரஹ்மசாரி தினத்திற்கு ஒரு முறை ஸ்நானம் செய்ய வேண்டும்.

ப்ராஹ்மணர்கள், க்ஷத்ரியர்கள், வைஸ்யர்கள் மந்த்ரோக்தமாக ஸ்நானம் செய்ய வேண்டும். ஸ்த்ரீகள், ஸூத்திரர்கள் மந்திரங்கள் இல்லாமல் ஸ்நானம் செய்ய வேண்டும்.

நதியில் ஸ்நானம் செய்யும் பொழுது ப்ரவாஹத்திற்கு (நீரோட்டம்) எதிராக நின்று கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். மற்ற நீர்நிலைகளில் ஸூரியனுக்கு அபிமுகமாக (எதிராக) நின்று கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.  இரவு நேரங்களில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக ஸ்நானம் செய்ய வேண்டும்.

உணவு அருந்திய பிறகு, ஆரோக்கிய ஹீனமாக இருக்கும் பொழுது, நடுஇரவு, மிகையாக வஸ்திரங்கள் அணிந்து கொண்டிருக்கும் பொழுது, பரிச்சயம் இல்லாது நீர் நிலைகளில் அல்லது கிணற்றில் ஸ்நானம் செய்யக்கூடாது.

இரவு நேரங்களில் ஸ்நானம் செய்யக்கூடாது. ஸந்தியா சமயத்திலும் ஸ்நானம் செய்யக்கூடாது. ஆனால் ஸூர்ய, சந்திர க்ரஹண காலங்களில் இரவு நேரங்களில் கூட ஸ்நானம் செய்யலாம்.

சரீரத்தின் சோர்வினை தீர்த்துக் கொள்ளாமல், முகத்தை சுத்தம் செய்து கொள்ளாமல் மற்றும் நக்னமாக (வஸ்திரமில்லாமல்) இருந்து கொண்டு ஸ்நானம் செய்தல் ஆகாது. ஸூர்யதாபத்தினால் (வெய்யில்) களைப்புடன் இருக்கும் நபர் ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உடனடியாக ஸ்நானம் செய்தால் அவரின் கண் பார்வை பாதிக்கப்படும் மற்றும் தலைவலி உண்டாகும். முக்கியமாக ஸ்நானம் செய்யும் பொழுது சரீரத்தில் ஒட்டுத் துணியில்லாமல் (நக்னமாக) ஸ்நானம் செய்தல் கூடாது என்று பல சாஸ்திரங்கள் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளன.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s