நித்ய மானுஷ்டானம் (19)

​ஸ்நான ப்ரகரணம்-குளியல் முறை

ஸ்நானம் செய்யாமல், செய்யப்பட்டும் புண்ணிய கர்மாக்கள் எல்லாம் பலனில்லாமல் போகும். அப்படிப்பட்ட புண்ணிய பலன்களை ராக்ஷஸர்கள் க்ரஹிப்பர் என்பது சாஸ்திர வசனம். ப்ராத: காலத்தில் ஸ்நானம் செய்தால் மனிதன் சுத்தமாவான். அதனால் ஸந்தியாவந்தனம், ஜபம், பூஜை, பாராயணம் போன்ற எல்லா கர்மாக்கள் செய்வதற்கு யோக்கியமாகிறான். அதனால் ப்ராத: ஸ்நானம் உத்தேசிக்கப்பட்டுள்ளது

ஸ்லோகம் ||

அஸ்நாத்வா நாசரேத்கர்ம ஜபஹோமாதி கிஞ்சன |

லாலாஸ்வேத ஸமாகீர்ண ஸ்ஸயனா துத்தித: பூமான் ||

அத்யந்த மலிந:காயோ நவச்சித்ர ஸமன்வித: |
ஸ்வத்யேஷ திவாராத்ரௌ ப்ராத:ஸ்நானம் விஸோதனம் ||

ப்ராத: ஸ்நானம் ப்ரஸம்ஸந்தி த்ருஷ்டா த்ருஷ்ட கரம்(பலம்) ஹி தத் |
ஸர்வ மர்ஹதி ஸுத்தாத்மா ப்ராத:ஸ்நாயா ஜபாதிகம் ||
ஸ்நானம் செய்யாமல் ஜபம், ஹோமம் போன்ற கர்மாக்களை செய்யக்கூடாது.  உறக்கத்திலிருந்து எழுந்து, படுக்கையிலிருந்து எழுந்த பிறகு வாயிலிருந்து வெளிப்பட்ட லாலாஜலம் (உமிழ்நீர்), சரீரத்திலிருந்து வெளிப்படும் வியர்வை முதலிய மலினங்களால் தேஹம் நிறைந்திருக்கும். 9 இரந்த்ரங்கள் (துளை) கொண்ட இந்த் சரீரத்திலிருந்து அதிகளவில் மலின பதார்த்தங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட மலினங்களை சுத்தம் செய்வதற்கு விடியற்காலையிலேயே ஸ்நானம் செய்ய வேண்டும்.
ப்ராத:கால ஸ்நானம் மிகவும் விசேஷமானது. அது மட்டுமல்லாமல், விடியற்காலையிலேயே ஸ்நானம் செய்வதன் மூலம் த்ருஷ்டபலம் என்றால் வெளியே தெரியும் சரீர சுத்தம், வர்சஸ், ஸௌந்தர்யம் கிட்டும். அத்ருஷ்டபலம் என்றால் கண்ணுக்கு தெரியாத பாபம் நசிக்கும். புண்ணியத்தை சம்பாதித்து கொடுக்கும். மானசீக ஸௌக்கியத்தை ஏற்படுத்தும். ப்ராத:காலத்திலேயே ஸ்நானம் செய்பவன், ஸந்தியாவந்தனம், ஜபம், ஹோமம் முதலிய ஸர்வ கர்மாக்களை ஆசரிப்பதற்கு யோக்கியனாவான். அதனால், உதய காலத்திலேயே ஸ்நானம் செய்ய வேண்டும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s