நித்ய மானுஷ்டானம் (18)

​தைலாப்யங்க விதி – எண்ணை ஸ்நானம்

ஸ்நானம் செய்வதற்கு முன்பு முழு சரீரத்திற்கும் தைலத்தை (எண்ணையை) தடவிக் கொள்வதையே தைலாப்யங்கம் என்பர். ஆரோக்கிய ரீதியாக தைலாப்யங்கம் சரீரத்திற்கு மிகவும் நன்மையை தரும் என்று ஆரோக்கிய சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ப்ரதிபதம், ஷஷ்டி, அஷ்டமி, ஏகாதசி, சதுர்த்தசி, பௌர்ணமி, அமாவாசை முதலிய திதிகளில், ரவி ஸங்க்ரமணத்தன்றும், விரதம், ஸ்ராத்தம் தினங்களிலும் சரீரத்திற்கு தைலம் கூடாது. 
ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை போன்ற நாட்களிலும் தைலாப்யங்கம் கூடாது. 
ஞாயிற்றுக்கிழமை அன்று சரீரத்திற்கு எண்ணை தேய்த்து கொள்வதன் மூலம் தாபம் (க்லேஸம்) ஏற்படும். திங்கட்கிழமை அன்று ஸோபை (ஹேஜஸ்) பெருகும். செவ்வாய்க்கிழமை அன்று ஆயுள் குறையும். புதன்கிழமை அன்று தனம் கிட்டும். வியாழக்கிழமை அன்று விபத்து நேரும். வெள்ளிக்கிழமை அன்று துக்கத்திற்கு காரணமாகும். சனிக்கிழமை அன்று சுகம் கிடைக்கும்.
ஒரு வேளை நிஷித்த தினங்களில் தைலம் தேய்த்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், ஞாயிறு அன்று புஷ்பமும், வியாழன் அன்று தூர்வமும் (அருகம்புல்), செவ்வாய் அன்று மண்ணும், வெள்ளி அன்று கோமியமும் (பசுஞ்சாணம்), தைலத்தில் சேர்த்து சரீரத்தில் தேய்த்து கொள்வதன் மூலம் தோஷம் வராது. ஸுகந்தபுஷ்பஸுவாஸணை போன்ற அத்தர் போன்ற தைலங்கள், ஆயுர்வேத பத்ததியில் தயார் செய்யப்பட்ட ப்ருங்கராஜம், மஹா ப்ருங்கராஜம் போன்ற தைலங்கள், கடுகு எண்ணை நிஷேதங்கள் அல்ல. இவற்றை மேலே கூறப்பட்ட நிஷித்த காலங்களிலும் உபயோகிக்கலாம்.
ஒவ்வொரு நாளும் ஸ்நானத்திற்கு முன்பு தைலாப்யங்கம் செய்து கொள்பவர்களுக்கு எப்பேற்பட்ட நிஷேதங்களும் பொருந்தாது. கடுகு எண்ணை மட்டும் க்ரஹண காலங்களில் தவிர மற்ற எல்லா தினங்களிலும் உபயோகிக்கலாம்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s