நித்ய கர்மானுஷ்டானம் (11)

​ஆப்யந்தர ஸௌசம்

மண் மற்றும் ஜலத்தினால் செய்யப்படும் இந்த ஸௌச க்ரியை பாஹ்யமானது (வெளிப்புறம்). ஆட்சேபணை இல்லாமல் இதை கண்டிப்பாக அனுஷ்டிக்க வேண்டியதே. ஆப்யந்த்ர ஸுத்தி அல்லது பாஹ்ய ஸுத்தி நிலையாகாது.  மனோபாவத்தை சுத்தமாக வைத்திருப்பதே ஆப்யந்தர ஸௌசம் எனப்பட்டும். பொறாமை, பகை, க்ரோதம், லோபம், மோஹம், வெறுப்பு முதலிய பாவங்கள் (மனோபாவம்) எவரிடத்திலும் வராமலிருப்பதே ஆப்யந்தர ஸௌசம் ஆகும். ஒரு மலையளவு மண்ணை மற்றும் கங்கை நதியில் உள்ள எல்லா ஜலத்தையும் உபயோகித்து ஒரு நபர் தன் வாழ்நாள் முழுவதும் பாஹ்ய ஸுத்தி காரியத்தை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் இதே நபர் ஒரு வேளை ‘அந்தர் ஸௌச’த்தை அதாவது பாவ ஸுத்தி இல்லாத அந்தரங்கம் இருக்குமேயானால், அவன் பவித்ரன் ஆகமுடியாது – ஸுத்தியற்றவன் என்று ஸ்ரீ வ்யாக்ரபாதர் அவர்களின் வாக்யம். அது மட்டுமல்லாமல், “பாவ ஸம்ஸுத்தி ரித்யேதத் தபோமானஸமுச்யதே” (கீதை 17/13) பாவ ஸம்ஸுத்தி என்றால் அந்த:கரண ஸுத்தி இருப்பதே மானசீக தபஸ் என்று பகவத்கீதையில் ஸ்வயமாக பகவானே கூறியிருக்கிறார்.
ஆதலால் ஆப்யந்தர ஸௌசம் மிகவும் அவசியமானது.  பகவான் எல்லோரிடத்திலும் உள்ளார். அதனால் மற்றவரிடத்தில் க்ரோதம், த்வேஷம் எதற்கு? எல்லோரிடத்திலும் பகவானை தரிஸித்துக் கொண்டு, சூழ்நிலைகள் அனைத்திலும் பகவானை உணர்ந்து, எல்லோருடனும் மித்ர (ஸ்நேக) பாவத்துடன் இருக்க வேண்டும். இதனுடன் கூட ஒவ்வொரு நொடிப் பொழுதும் பகவான் ஸ்மரணம் செய்து கொண்டு, அவரின் ஆக்ஞையாக நினைத்து சாஸ்த்ரத்தில் கூறப்பட்டுள்ளது போல் எல்லா காரியங்களையும் சரிவர செய்து கொண்டிருக்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s