நித்ய கர்மானுஷ்டானம் (6)

​ அஜபாஜபம் – விசேஷ விதானம்

ஸதா ஸர்வ காலம் ஆற்றலுடன் நிர்வகிக்கப்படும் இந்த மானிட தேகத்தை நமக்கு ப்ரசாதித்தவர் அழகாக ஆலோசித்து மனதுடன் தொடர்பு கொண்டு நிச்சயிக்கவல்ல ஸத்புத்தியை கூட அவரே அனுக்ரஹித்துள்ளார். அது மட்டுமல்லாமல், ஜனன-மரண சக்ரத்தில் பந்திக்கப்பட்டு அனேக ஆபத்தான சிக்கல்களில் விழும்படியான மாயையின் சங்கிலிப் பிடியிலிருந்து ரக்ஷித்துக் கொள்வதற்கு, ஒரு சுலபமான, வெளிப்படையான வழியையும் அவரே மிகுந்த தயையுடன் அருள்பாளித்துள்ளார். அப்பேர்பட்ட சாதனையின் பெயர்தான் “அஜபாஜபம்”. இதை ஜபிக்க வேண்டிய அவசியமில்லை. உச்சரித்தல் கூட தேவையில்லை. ஆனால் நாம் நித்யம் உள்வாங்கி-வெளிவிடும் (காற்று) ஸ்வாஸோச்வாஸ த்வாரமாகவே சகஜமாக இந்த ஜபம் நடக்கும். *#“ந ஜப்யதே நோச்சார்யதே ஸ்வாஸ ப்ரஸ்வாஸயோர்கமனாகமநாப்யாம் ஸம்பத்யதே இதி அஜபா||”*# என்று சொல்லப்பட்டுள்ளது. *#“ஸதாநிஷட் திவாராத்ரம் ஸஹஸ்ராண்யேகவிம்ஸதி: | ஏதத்ஸங்க்யான்விதம் மந்த்ரம் ஜீவோ ஜபதி ஸர்வதா ||*# (த்யானபிந்தூபநிஷத். 62-63) பகல் இரவுமாக அதாவது (24) இருபத்தி நான்கு மணி நேரத்தில் மனிதன் 21,600 ஸ்வாஸிப்பான். இந்த ஸ்வாஸ-ப்ரஸ்வாஸ மூலமாக “ஹம்ஸ – ஹம்ஸ:” என்று நிரந்தரம் ஜபித்து கொண்டிருக்கும் என்று த்யானபிந்தூபநிஷத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. *#“ஹகாரேண பஹிர்யாதி ஸகாரேண விஸேத்புன: | ஹம் ஸ ஹம் ஸேத்யமும் மந்த்ரம் ஜீவோ ஜபதி ஸர்வதா | அஜபா நாம காயத்ரீ யோகினாம் மோக்ஷதாம் ஸதா||”*# மனிதன் ஸ்வாஸத்தை உள்ளிழுக்கும் பொழுது “ஸ:” என்றும், மறுபடியும் ஸ்வாஸத்தை விடும் பொழுது “ஹ” என்றும் த்வனிக்கும். (நல்ல உறக்கத்திலிருக்கும் பொழுது இந்த த்வனி இன்னும் அதிகமாக கேட்கும்). இந்த விதமாக ஜீவன் “ஹம்ஸ-ஹம்ஸ” என்ற மந்திரத்தை நிரந்தரம் ஜபிக்கும். இப்படிப்பட்ட அஜபா காயத்ரீ யோகிகளுக்கு மோக்ஷ பிரதானமானதென்று யோக சூடாமணி உபநிஷத்து (31)ல் மற்றும் த்யானபிந்தூபநிஷத்தில் (61-73) கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், அஜபாஜபம் போன்ற அதி உன்னதமான ஜபமோ, ஸர்வ உத்தமமான வித்யாவோ வேறு இல்லை. இதை மிஞ்சுமளவுக்கு வேறொரு புண்ணிய காரியம் இது வரையில் இல்லை. இனி மேலும் இருக்கப் போவதில்லை  என்று அஜபாவின் பலஸ்ருதியில் ஸ்பஷ்டமாக சொல்லப்பட்டுள்ளது. *#“அனயா ஸத்ருஸீ வித்யா அனயா ஸத்ருஸோ ஜப: | அனயா ஸத்ருஸம் புண்யம் ந பூதம் ந பவிஷ்யதி ||”*# மற்றுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், முதன் முதலில் இந்த மந்திரத்தை ஏதாவது ஒரு குரு மூலமாக தீக்ஷயை ஸ்வீகரிக்கவும்.  அதன் பின்னரே ஜபிக்க வேண்டும். ஏனென்றால், வாஸ்தவத்திற்கு “ஸோஉஹம் ஸோஉஹம்” என்றே மந்த்ர யோகம் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஸுஷும்னாவில் இது விபரீதமாக என்றால் “ஹம்ஸ: ஹம்ஸ:” என்று ஜபிக்கப்படும் என்று ஒரு விசேஷமான வார்த்தையை பற்றி யோகபீஜோபநிஷத்தில் (135) மற்றும் யோகஸிகோபநிஷத்தில் (1-132,133) குறிப்பிடப்பட்டுள்ளது. “ஸோஉஹம்” என்றால் – ‘அந்த பரப்ரஹ்மா பரமாத்மாவுன் நான் தான்” என்று அர்த்தம். இருந்தாலும், *#“அஸ்யா: ஸங்கல்ப மாத்ரேண நர: பாபை: ப்ரமுச்யதே”*# – என்றால் இப்படிப்பட்ட அஜபா காயத்ரீயை பற்றிய ஸங்கல்பத்தினால் மட்டுமே மனிதன் பாபங்களிலிருந்து முக்தி பெறுவான் என்று த்யானபிந்தூபநிஷத்தில் (64) வர்ணிக்கப்பட்டுள்ளது. குருவின் மூலம் பிரதானமாக தீக்ஷை எடுத்துக் கொள்வது அவ்வளவு வலுக்கட்டாயமானதல்ல என்பது தெரிய வருகிறது. ஒரு வேளை குரு தீக்ஷை மூலம் ஸ்வீகரித்தால் ஜபம் இன்னும் பலம் பெறும் என்பதை கவனிக்கவும். ஸாதகர் “ஹம் ஸ: ஹம் ஸ;’ என்றோ, இல்லை “ஸோஉஹம், ஸோஉஹம்” என்றோ, இந்த இரண்டில் எந்த விதமாக ஜபித்தாலும் அதன் பலன் மட்டும் சமமாக தான் இருக்கும் என்று ஸ்பஷ்டமாக புரிகிறது. அது மட்டுமல்லாமல், ஹம்ஸ: ஹம்ஸ: என்று சொல்லும் பொழுது இரண்டாவது முறையாக அது “ஸோஉஹம்” (ஹம்ஸ: ஸோ ஹம் ஸ:)என்று சகஜமாக மாறிவிடும் என்பதை கிரகிக்க முடிகிறது.
இப்பொழுது அஜபா காயத்ரீ உபாஸனா விதானம் பற்றி பரிசீலிக்கலாம். எப்படிப்பட்ட ஸத்காரியத்திற்கும் எல்லாவற்றையும் விட முதலில் ஸ்நானம் செய்தாக வேண்டும். ஆனால், அஜபாகாயத்ரீ அனுஷ்டானார்த்தமாக மானசீக ஸ்நானம் செய்து கூட ஜபத்தை அனுஷ்டிக்கலாம். ஏனென்றால், முதலாக நேற்றைய சூரியோதயத்திலிருந்து இன்று சூரியோதயம் வரை செய்யப்பட்ட அஜபாஜபம் ஸமர்ப்பிப்பதற்கோ மற்றும் இன்றிலிருந்து நாளைய சூரியோதய பர்யந்தம் செய்யப் போகும் ஜபத்தை பற்றிய ஸங்கல்பம் செய்வதற்கு மானஸ-ஸரோவரத்தில் (மானசீக தீர்த்தம்) ஸ்நானம் செய்வதே ஸௌகரியமாக இருக்கும். மானசீக ஸரோவரத்தில் ஸ்நானம் செய்வது எவ்வளவோ விசேஷமானதென்று பல சாஸ்த்ர க்ரந்தங்களில் கூறப்பட்டுள்ளது.
*#“இடா பகவதீகங்கா பிங்களா யமுனாநதீ |

தயோர்மத்யகதா நாடீ ஸுஷும்னாக்யா ஸரஸ்வதீ ||

ய: ஸ்நாதி மானஸேதீர்தே ஸ வை முக்தோ ந ஸம்ஸய: ||*#
“இடா நாடி ஸாக்ஷாத் கங்காதேவி போன்றதென்று அதே போல் பிங்களா நாடி யமுனாநதி போன்றதென்று சொல்லப்பட்டுள்ளது. இந்த இரண்டிற்கும் நடுவில் இருக்கும் ஸுஷும்னா நாடியே ஸரஸ்வதி நதியாக போற்றப்பட்டுள்ளது. இந்த மூன்று வித நாடிகளுக்கும் சொல்லப்பட்ட மூன்று வித நதிகளின் த்ரிவேணி சங்கமம் ஸ்தலமென்றும் மானசீக தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தவர்கள் சகல பாபங்களிலிருந்து நிச்சயமாக முக்தியடைவார்கள்’ என்பது ஐதீகம்.
அதனால் ப்ராத: காலத்தில் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு, படுக்கையிலிருந்து எழுந்து கை-கால்களை சுத்தமாக அலம்பிக் கொண்டு, நன்றாக ஜலத்தினால் வாய் கொப்பளித்து உமிழ வேண்டும். பிறகு இரவு உடுத்திய வஸ்திரத்தை களைந்து சுத்தமான வஸ்திரத்தை உடுத்த வேண்டும். பிறகு ஆஸனத்தின் மேல் உட்கார்ந்து ஆசமனீயம், ப்ராணாயாமம் செய்ய வேண்டும். பிறகு பகவானை த்யானிக்கவும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s