நித்ய கர்மானுஷ்டானம் (5)

​உபாஸனா ஸமுச்சயம்

கொஞ்ச நேரம் பரமாத்மாவை த்யானம் செய்த பிறகு இந்த விதமான பரமாத்மாவை பிரார்த்திக்கவும். “ஓ பரமாத்மாவே! உன்னுடைய ஆக்ஞையின் ரூபங்களே ஸ்ருதி, ஸ்ம்ருதி.  இப்படி உன் ஆக்ஞையை அனுஷ்டிப்பதற்கு நான் உறக்கத்திலிருந்து விழித்ததிலிருந்து மறுபடியும் உறங்கும் வரை எல்லா கடமைகளையும் சரிவர ஆசரிப்பேனாக! எஜமானரிடம் நல்ல பெயர் வாங்குவதற்கு அவரின் உத்தரவுகளை சிரம் தாங்கி சந்தோஷத்துடன் அவற்றை நிறைவேற்றுவது போல் வேறு சேவை ஏதுமில்லை. அதனால், விநயத்துடன் சிரம் தாழ்த்தி உன் உத்தரவுகளையே கடமையாக பாவித்து நிறைவேற்றுவேனாக. இந்த பக்தனிடத்தில் சந்தோஷமாக மிகுந்த தயையுடன் அனுக்ரஹம் செய்வீராக! இது மட்டுமே அல்லாமல், *#“தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு மாமனுஸ்மர யுத்ய ச!” என்று சொன்ன படி நிரந்தரம் உன்னை ஸ்மரித்துக் கொண்டு எங்கள் கடமைகளை நாங்கள் செய்ய வேண்டும் என்பதல்லவா உன் ஆக்ஞை! இப்படிப்பட்ட ஆக்ஞையை அனுசரித்து உன்னை மறவாமல் இருந்து, யதாவிதியாக உன் நாம ஸ்மரணம் செய்து கொண்டு, என் கடமையிலிருந்து சிறிதளவும் விலகாமல் உனக்கு ஸமர்ப்பணம் செய்வேனாக! இந்த விதமான கர்ம் ரூபமான பூஜையினால் நீ சந்தோஷமடைவாயாக! அப்படியே தன்னலமற்ற உன் க்ருபையால் என்னை அனுக்ரஹிப்பாயாக என்று த்ரிகரண ஸுத்தியாக உன்னை பிரார்த்திக்கிறேன்.  “த்ரைலோக்ய சைதன்யமனாதிதேவ! ஸ்ரீநாத! விஷ்ணோ! பவதாக்ஞயைவ| ப்ராத: ஸமுத்தாய தவ ப்ரியார்த்தம் ஸம்ஸாரயாத்ராமனுவர்தயிஷ்ய|| “ஸுப்த: ப்ரபோதிதோ விஷ்ணோ! ஹ்ருஷீகேஸேன யத் த்வயா| யத்யத்காரயஸே கார்யம் தத்கரோமி த்வதாக்ஞயா||*#

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s