குல குரு


பெரியவா பெரியவா இந்த சப்தம் இந்த நாமா

தவிர வேறு எதுவும் தெரியாத குடும்பம் 

இவர்களது. இவர்கள் தாத்தா  தீவிரமுருக பக்தி 

உடையவர். ஆனால் பெரியவா பக்தி கிடையாது!

ஒரு சமயம் இவர்கள் வசித்த கிராமத்துக்கு 

பெரியவா காம்ப் சென்ற போது அனைத்து

வீடுகளிலும் பூர்ண கும்பம் கொடுத்து

வரவேற்றபோது இவர்கள் தாத்தா மட்டும்

பெரியவாளுக்கு எந்தவித மரியாதையும்

செய்ய விருப்பமில்லாமல்  வீட்டிலேயே

அடைந்திருந்தார்.

மற்றவர்கள் இது பற்றிக் கேட்டபோது 

‘பெரியவா என் அப்பன் முருகன் போல்

எனக்குக் காட்சி கொடுத்தால் நான்

அவரை நம்புவேன்’ என்று சொல்லியிருக்கிறார்.
 மடத்தில் பெரியவா மடத்துச் சிப்பந்திகளிடம்

‘ஏன் அவர் மட்டும் வரவில்லை…வர

மாட்டாரோ’ என்று கேட்டிருக்கிறார். ‘அவர்

முருக பக்தர் மற்றவர் யாரையும் தரிசனம்

செய்யமாட்டாராம்; ரொம்ப தகறாரான 

ஆசாமி’ என சொல்ல, அப்படியா’ என்று

சொல்லிவிட்டு, பெரியவா அவரது அகம்

நோக்கி நடந்து வாசலில் போய் நின்றாரம்.

அங்கு நடந்த காட்சியை எப்படிச் சொல்வேன்?

அதைக் கேட்டபோது எனக்கு மயிர்கூச்சலெறிந்தது.
வாசலில் நின்ற பெரியவா அவர் கண்களுக்கு 

தண்டாயுதபாணியாகக் காட்சி கொடுத்துள்ளார்!

வீட்டின் உள்ளேயிருந்து ஓடி வந்து ‘என் அப்பனே

முருகா ‘என்று கதறியவாறு பெரியவாளுக்கு

சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பூர்ண கும்ப

மரியாதைகளுடன் அழைத்து உபசாரம் 

பலவும் செய்தாராம். அன்றிலிருந்து பெரியவா

மந்த்ரம் தவிர அங்கு வேறொன்றும் ஒலித்ததில்லை!
இவரது பேத்தி இருவரும் பெரியவாளின் தீவிர பக்தைகள்.

ஒருத்திக்குக் கல்யாணம் ஆகி வெளி நாட்டில் வசித்து

வந்தாள். நடுத்தர வயது. திடீரென்று ஒரு நாள் இரவு

புருஷன் ‘பின் மண்டையை வலிக்கிறது, என்னவோ

பண்றது, என்று அவள் கைகளைப் பித்துக் கொண்டாராம்.

சில வினாடிகளில் அசைவு நிற்கத்தொடங்க மற்றவர்

உதவியுடன் ஆஸ்பத்திரியில் சேர்த்து மூன்று தினங்கள் 

கழித்து’ ஒன்றும் செய்யமுடியாது இது வெகு சிலருக்கு

மட்டுமே வரும் மூளை பற்றிய வியாதி எல்லா

அவயவங்களும் அடங்கிவிட்டன. யாராவது 

தைர்யசாலியாக இருப்பவர்கள் அவரது அருகில்

சென்று கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்

ஆன்மா சாந்திக்காக’ என்று டாக்டர் சொல்ல

இந்தப் பெண்மணி அவரது கையை இறுகப்

பற்றி வலது காதில் பெரியவா நாமாவைச் சொல்லி

அபார கருணா சிந்தும் என்ற ச்லஒகத்தைச்

சொல்லி ‘நீங்கள் இப்போது பெரியவா பாத 

கமலத்தைச் சேரப் போகிறீர்கள். அவரது

ஸ்மரணையுடன் அவரது துருவடியை

அடையவேண்டும் அடுத்த ஜன்மா ஒன்று

இருந்தால் பெரியவா ஸ்மரணையுடனே

பிறக்கவேண்டும் நல்ல வாழ்க்கை, நல்ல 

மனைவி கிடைக்க வேண்டும், ஆனால் இப்போ

உங்களுடைய கடமை உங்கள் பெற்றோரைக்

காப்பாற்றுவது ஆனால் துரதிர்ஷ்டவசமாக

உங்கள் யாத்திரை தொடங்கிவிட்டது, ஆனால்

நான் உங்கள் கடமையை ,பெற்றோரை என் 

பெற்றோர் போல் காப்பாற்றுவேன் என்று

சொல்ல, அசைவற்றுக் கிடந்த அவர் உடல்

அசைந்ததுமல்லாமல் கண்களில் 

பெரியவா என்ற தாரக மந்த்ரம் கேட்டு

நீர் பெருக்கெடுத்து ஓடியதாம்!

அங்கிருந்த டாக்டர் ‘நீங்கள்அவரிடம் என்ன

சொன்னீர்கள் இயக்கம் நின்ற நிலையில் கண்களில்

எப்படி நீர் வழிந்தோடியது’ என்று அதிசயப் பட்டார்களாம்!

எங்கள் குல குரு, எங்கள் தெய்வம் சங்கரரைப் பற்றிச்

சொன்னேன் என்று சொல்ல அவர்களின் வியப்பை

எழுத்தில் வர்ணிக்க இயலாது!
இது சங்கர ஜபத்தினால், பக்தியால் வந்த மன முதிர்ச்சி!

இது என் நெருங்கிய நண்பர் வீட்டில் நடந்த நிகழ்ச்சி!
ஜய ஜய சங்கரா…..

Advertisements

One thought on “குல குரு

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s