க்ருஷ்ணரின் பெயர்கள்


கிருஷ்ணரின் வேறு பெயர்கள்

மகாபாரதத்தின் உத்தியோகப் பருவத்தில், குரு நாட்டின் மன்னர் திருதராட்டிரன் தனது தேரோட்டியான சஞ்சயனிடத்தில், கிருஷ்ணரின் வேறு பெயர்களையும்; அதன் பொருளையும் உரைக்குமாறு கேட்டார். அதற்கு சஞ்சயன் கீழ்கண்டவாறு கிருஷ்ணரின் வேறு பெயர்களை, அதற்கான விளக்கத்துடன் திருதராட்டிரரிடம் கூறினார். [3]
கேசவன் – அளவிடப்பட முடியாதவன், வாயால் விவரிக்கப்பட முடியாதவன்.

வாசுதேவன் – அனைத்து உயிர்களில் வசிப்பவன்.

விஷ்ணு – எங்கும் பரந்திருக்கும் இயல்பினன்.

மாதவன் – பெரும் தவம் செய்பவன்.

மதுசூதனன் – மது எனும் அசுரனை கொன்றதால் மதுசூதனன் என அழைக்கப்படுகிறான்.

புண்டரீகாட்சன் – “உயர்ந்ததும், நிரந்தரமானதுமான அவனது வசிப்பிடத்தை” குறிக்கும் “புண்டரீகம்” (இதயத்தாமரை) மற்றும் “அழிவற்றதைக்” குறிக்கும் “அட்சம்” ஆகியவற்றில் இருந்து அவன் புண்டரீகாட்சன் என அழைக்கப்படுகிறான்.

ஜனார்தனன் – தீயவர்களின் இதயங்களில் அச்சத்தை விளைவிப்பதால் ஜனார்த்தனன் என அழைக்கப்படுகிறான்.

சாத்வதன் – சாத்வ குணம் அவனை விட்டு எப்போதும் விலகாததாலும், அவனும் சாத்வ குணத்தை விட்டு விலகாமல் இருப்பதாலும் சாத்வதன் என அழைக்கப்படுகிறான்;

விருபாட்சணன் – “விருசபம்” என்பது “வேதங்களைக்” குறிக்கும், “இச்சணம்” என்பது “கண்ணைக்” குறிக்கும். இவையிரண்டும் இணைந்து, வேதங்களே அவனது கண்கள் என்றோ, வேதங்களே அவனைக் காண்பதற்கான கண்கள் என்றோ குறிக்கின்றன என்பதால், கிருஷ்ணணை விருஷபாட்சணன் என அழைக்கப்படுகிறான்,

அஜா – எந்த உயிரிலிருந்தும் சாதாரண வழியில் தனது பிறப்பை எடுக்காததால் அஜா என அழைக்கப்படுகிறான்.

தமோதரன் – தேவர்களைப் போலல்லாமல் அவனது பிரகாசமும், அவனது சுயமும், படைக்கப்படாததாக இருப்பதாலும், சுயக்கட்டுப்பாடும், பெரும் பிரகாசமும் கொண்டிருப்பதாலும் தாமோதரன் என அழைக்கப்படுகிறான்.

ரிசிகேசன் – “என்றும் மகிழ்ச்சி” என்பதற்கு “ஹ்ரிஷிகா” என்றும் “ஈசா” என்பதற்கு “ஆறு தெய்வீகப் பண்புகள்” என்றும் பொருள். இன்பம், மகிழ்ச்சி, தெய்வீகம் ஆகியவற்றைக் குறிப்பதால் அவன் ரிஷிகேசன் என அழைக்கப்படுகிறான்.

மகாபாகு – தனது இரு கரங்களால் பூமியையும், வானத்தையும் தாங்கிப் பிடிப்பதால் மஹாபாஹு என அழைக்கப்படுகிறான்.

அதாட்சன் – எப்போதும் கீழே வீழாதவன் என்பதாலும், எக்குறைவின்றியும் இருப்பதனாலும் அதாட்சன் என அழைக்கப்படுகிறான்.

நாராயணன் – மனிதர்கள் {நரர்கள்} அனைவருக்கும் புகலிடமாக இருப்பதால் (அயனமாக இருப்பதால்) நாராயணன் என அழைக்கப்படுகிறான்.

புருசோத்தமன் – ஆண் மக்களில் (புருசர்களில்) மேன்மையானவன் என்பதால் புருசோத்தமன் என அழைக்கப்படுகிறான்.

சர்வன் – அனைத்துப் பொருட்களின் அறிவையும் கொண்டிருப்பதால் சர்வன் என்று அழைக்கப்படுகிறான்.

சத்யன் – கிருஷ்ணன் எப்போதும் உண்மையில் இருக்கிறான், உண்மையும் எப்போதும் அவனில் இருப்பதால் சத்யன் என அழைக்கப்படுகிறான்.

ஜிஷ்ணு – தனது ஆற்றலுக்கும், வெற்றிக்காகவும் ஜிஷ்ணு என அறியப்படுகிறான்.

அனந்தன் – அழிவில்லாதவனாக இருப்பதால் அனந்தன் என்று அறியப்படுகிறான்.

கோவிந்தன் – அனைத்து வகைப் பேச்சுகளின் அறிவையும் கொண்டிருப்பதால் கோவிந்தன் என அறியப்படுகிறான்

கிருஷ்ணன் – ஏற்கனவே இருக்கிறது என்பதைக் குறிக்கும் “கிருஷி” மற்றும் “நித்திய அமைதி” என்பதைக் குறிக்கும் “ண” ஆகிய இரண்டு சொற்களுக்குள் தன்னை மறைமுகமாக ஐக்கியப்படுத்திக் கொள்வதால் அவன் கிருஷ்ணன் என்று அழைக்கப்படுகிறான். ( “க்ருஷ்” என்றால் கீறுதல் என்று பொருள். “கருஷ்” என்றால் பூமி என்று பொருள், “ண” என்றால் சுகம் என்று பொருள். “கிருஷ்ண” என்றால் கலப்பையினால் பூமி கீறப்படுவதால் விளையும் நன்மையைக் குறிப்பதாகும் என்றும் பொருள்).

Advertisements

One thought on “க்ருஷ்ணரின் பெயர்கள்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s