ஆத்யந்த பிரபு


எந்த ஒருசெயல் துவங்கினாலும், விக்கினங்கள் -தடைகள் இன்றி செவ்வனே நடைபெற விநாயகரை வணங்கிச் செய்வது வழக்கம்..
எந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சியும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது போல் ராமதூதனான அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பது ஐதிகம். 
 உபன்யாசகர்களும், கதாகாலட்சேபம் செய்பவர்களும் ஆன்மிக உரை நிகழ்த்துபவர்களும் ஆரம்பத்தில் ஆனைமுகனை வணங்கிவிட்டு“மகா கணபதிம்” என்று ஆரம்பித்து, , கடைசியில் ஆஞ்சநேயனைத் துதித்து “ராமச்சந்த்ராய ஜனக என மங்களம் பாடி முடிப்பது சம்பிரதாயமான மரபு.

 
பக்தி சார்ந்த எந்தச் செயலும் நல்ல முறையில் நடந்து முடிந்ததைக் குறிப்பிடத்தான், ‘

பிள்ளையார் பிடித்து குரங்கில் முடிந்தது’ என்பார்கள். 
அதற்கு ‘மஞ்சளில் பிள்ளையார் பிடித்து ஆரம்பித்து, மாருதிக்கு மங்களம் பாடித் துதித்து மங்களகரமாய் நிறைவடைந்தது’ என்று பொருள்.
 

ஒரு செயலைத் துவங்கினால் அதை நல்லபடியாக முடிக்க வேண்டும். இதற்கு நல்ல திட்டமும் மனஉறுதியும் தெய்வ பலமும் வேண்டும்.
திட்டமிடாமல், மன உறுதியும் இல்லாமல் ஒரு செயலைத் துவங்கினால் அதை முடிக்க முடியாமல் திண்டாடினால் பலரும் பலவிதமாக ஆலோசனை சொல்லி குழப்புவர்.
 செயலைத் தொடங்கியவருக்கு அங்கும் இங்கும் தாவும் குரங்கு போன்ற மனநிலை ஏற்பட்டு, எடுத்த செயலை முடிக்காமலேயே விட்டு விடுவார்கள்.
ஒரு காரியத்தைச் செய்யத் துவங்குவது என்பதை பிள்ளையார் பிடிப்பது என்றும், அது சரி வர நடக்காமல் போனால் அங்குமிங்கும் தாவும் குரங்காய் முடிந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
எந்த ஒரு காரியத்தைச் செய்யும்போதும்,மஞ்சள் தூளில் பிள்ளையாரைப் பிடித்து வைத்து,அவரை வழிபட்டு ஆரம்பிக்க்கிறோம்…
காரியம் நல்லபடியாக முடிந்ததும், ஆஞ்சநேயருக்குவடைமாலை சாத்தி முடிக்கணும்… என்ற விளக்கம் உண்டு..
வியாச மகரிஷி,மகாபாரதத்தைச் சொல்லிவர, பிள்ளையார்

அதை தம்முடைய கொம்பை ஒடித்துப் பிடித்து எழுதினார்.
குருஷேத்திரப் போர் முடிந்ததும், அர்ச்சுனனைரதத்தை விட்டு இறங்கும்படி

 ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார். அர்ச்சுனன் இறங்கியதும், ஸ்ரீ கிருஷ்ணர்

இறங்கினார்.
அடுத்து ரதத்தின் கொடியிலிருந்த ஆஞ்சநேயர் மறைந்து விட்டார். அடுத்தநொடி, ரதம் தீப்பிடித்து எரிந்தது.
இப்படி பிள்ளையார் ஆரம்பித்து வைத்தது,

ஆஞ்சநேயரால முடிந்தது மகாபாரதம் …..
 “கம்” என்பது  கணபதியின் பீஜாக்ஷரமந்திரம் 

“ஹம்”! ஆஞ்சநேயரின் பீஜாக்ஷர (உயிர்ப்பெழுத்து) மந்திரம்…..

கம் கணபதயே என்று க-வில் துவங்கி 

ஸ்வாஹா என்று ஹ-வில் முடிப்பது மரபு.
கணபதி  ,அனுமன் இருவருமே பிரம்மச்சாரிகள்!

விலங்கின ரூபம் கொண்டவர்கள்!

ஞானச் செருக்கு இல்லாத சமநிலை மூர்த்திகள் ! 
 நமக்கு அருளும் போது மட்டும், நிமிர்ந்து நின்று, வேண்டியது வேண்டிய வண்ணம் அருளும் அனுக்ரஹ மூர்த்திகள்!
இருவருமே எளியவர்க்கு எளியவர்கள்! 

இருவருக்குமே சூரியன் தான் குரு…
இது தான் இடம், இது தான் பூசை என்றில்லை!

கணபதிக்கு  ஆற்றங்கரை கூட இடம் தான்! 

மதுரை முக்குறுணியும் ஒரு இடம் தான்! 
அனுமனுக்கோ தூண் கூட இடம் தான்! 

விஸ்வரூப நாமக்கல்லும் ஒரு இடம் தான்!

 வடநாட்டில் சிந்தூரம் பூசுவது பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருக்குமே!
 நவக்கிரகங்கள் என்னும் கோள் ஆளுமைக்கு அனைத்து தேவதைகளும் உட்பட்டவர்கள்! பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவரைத் தவிர!

கீதையில் காட்டிய விஸ்வரூபத்திலே பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே உண்டு!
இருவருக்குமே ஐந்து முகங்கள் உண்டு! 

பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர்!

Jai hanuman

இராமாயணத்தில், அனைவரையும் வழியனுப்பி விட்டு, இறுதியில் அனுமன் உபாசனையே நடக்கிறது! 

அனைவருக்கும் நன்றி சொல்லும் இராமன், அனுமனை மட்டும் மனைவியுடன் சேர்ந்து உபாசிக்கிறார்! 

நன்றி ஒன்று வேண்டாதானிடம் நன்றி சொல்லி மாளுமா !!? 
விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை “ஆத்யந்த பிரபு’ என்பர். ஆதி+அந்தம் என்பதையே ஆத்யந்த பிரபு’ என்று  சொல்கிறார்கள்.

 

“ஆதி’ என்றால் “முதலாவது’. முதல் கடவுள் விநாயகர். “அந்தம்’ என்றால் “முடிவு’. விநாயகரை வணங்கி ஒரு செயலைத் துவங்கினால், அனுமன் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பார்.
ஒருபுறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது ஆத்யந்த பிரபு வடிவம்.
பிரம்மச்சர்ய விரதம் மேற்கொண்டுள்ளோர், இந்த இரண்டு பிரம்மச்சாரிகளும் இணைந்த வடிவத்தை தங்கள் இஷ்ட தெய்வமாகக் கொண்டுள்ளனர்.
அனுமன், சிவனின் அம்சம். விநாயகர் சக்தியிடமிருந்து (பார்வதி) உருவானவர். சென்னை தரமணி அருகிலுள்ள மத்திய கைலாஷ் கோயிலில் ஆத்யந்த பிரபுவுக்கு சந்நிதி உள்ளது.

Advertisements

One thought on “ஆத்யந்த பிரபு

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s