வடக்கே தலை வைக்காதே

வடக்கில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று இந்து மத சாத்திர நூல்கள் கூறுகின்றன. சதாசாரம் என்னும் நூல் நாம் அன்றாடம் பின்பற்றவேண்டிய பழக்க வழக்கங்களைப் பற்றிக் கூறுகிறது. மற்ற திசைகளில் தலை வைத்துப் படுக்கலாம். இந்த சாஸ் த்திர விதிக்கு ஏதேனும் விஞ்ஞான விளக்கம் உண்டா என்று கேட்டால் “உண்டு” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம்.
காம்பஸ் என்னும் திசை காட்டும் கருவியை நாம் அறிவோம். அதன் ஊசி எப்போதும் வடக்கு திசையையே காட்டிக் கொண்டிருக்கும்
புல் மேயப் போகும் மாடுகளும் காட்டில் திரியும் மான்களும் ஒரே திசையை நோக்கி நின்றுகொண்டு புல் மேய்வதைக் கண்ட விஞ்ஞானிகள் ஆச்சரியப் பட்டார்கள். அவை ஏன் இப்படி நின்று புல் மேய்கின்றன என்பது நீண்ட காலமாகப் புரியாத புதிராகவே இருந்தது. இப்போழுது கூகுள் விண்கல புகைப்படங்களை வைத்து ஆராய்ந்ததில் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த மாட்டு மந்தையோ மான்கள் கூட்டமோ உயர் அழுத்த மின்சாரம் (High Voltage Power lines) செல்லும் கம்பிகளுக்குக் கீழாக வந்தால் இப்படி ஒரே திசையில் நிற்காமல் வெவ்வேறு திசையை நோக்கி நிற்பதும் கூகுள் படங்கள் மூலம் தெரியவந்தது. பெரும்பாலும் அவை வடக்கு தெற்கு அச்சுக்கு அணுசரனையாகவே நிற்கும். ஆனால் மின்சார கம்பிகளுக்கு 30 மீட்டருக்குக் கீழாக வந்தால் இது மாறிவிடுகிறது. இதற்கு என்ன காரணம்?
மாடுகள், மான்கள் மற்றும் வௌவால் போன்ற பல பிராணிகளின் உடலிலும் பறவைகளின் மூக்கிலும் காந்தம் (magnetite) இருப்பது தெரிகிறது. இந்த காந்த துருவங்கள் மின்சாரக் கம்பிகள் வெளிவிடும் அலைகள் மூலமாக “extremely low-frequency magnetic fields” (ELFMFs) திசை மாறும் என்பது தெரிந்ததே.
பூமி என்பது மிகப் பெரிய காந்தம். இப்போது நாம் மனிதர்களை நினைத்துப் பார்ப்போம். நம் உடம்பிலும் காந்தம் இருக்கிறது. நாம் தூங்கும் போது நம்முடைய தலையை வடக்கே வைத்தால் அது நம்மை பாதிக்கும். எப்படி என்றால் தலையை காந்தத்தின் வடதுருவம் என்று வைத்துக் கொண்டால் கால்கள் தென் துருவம் ஆகும்.
இயற்பியல் படித்தவர்களுக்குத் தெரியும் “ஒரே துருவங்கள் ஒன்றை ஒன்று தள்ளிவிடும், மாற்று துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும்/கவரும்”.. (same poles repel each other, opposite poles attract) ஆக நம் உடல் என்னும் காந்தம் வடக்கைத் தவிர எந்தப் பக்கத்தில் தலை வைத்தாலும் பாதிக்காது.
கண்டங்கள் உருவானது எப்படி?
இந்த பூமியானது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தனித்தனி கண்டமாக இல்லாமல் ஒரே நிலப் (Pangaea) பகுதியாக இருந்தது. பிறகு சிறிது சிறிதாக (Continental Drift) விலகி இப்போதைய நிலக்கு வந்துள்ளன. இன்னும் கோடிக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னால் பார்த்தால் ஆப்பிரிக்கா ,அமெரிக்கா ஆகிய கண்டங்கள் இப்போதைய நிலையில் இருக்காது. ஆனால் உலகப் படத்தைப் பார்த்தீர்களானால் ஒரு வியப்பான விஷயத்தைக் கவனிக்கலாம். ஒரே நிலப் பரப்பு விலகி விலகி சென்றபோது ஏன் வடக்கே மட்டும் அதிக நிலப்பரப்பு (land mass) போயின? தெற்கே ஏன் அதிகம் கடற்பரப்பு (oceans) வந்தன? ஏன் எல்லா கண்டங்களும் கீழே குறுகியும் மேலே பருத்தும் இருக்கின்றன. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா ஆகிய நிலப் பரப்பைப் பாருங்கள். வடக்கில் பெரிய நிலப் பரப்பும் தெற்கில் சுருங்கி தீபகற்பமாகவும் (peninsular) இருக்கும். ஏன் இப்படி வந்தது என்றால் இதுவரை யாரும் விடை சொல்ல முடியவில்லை.
பூமியில் வடக்கில் காந்த சக்தி அதிகம் இருந்ததால் கண்டங்களை இப்படி மேல் நோக்கி இழுத்தனவா? அல்லது தன்னிச்சையாக வடக்கில் நிலப் பரப்பு கூடியதாலங்கே காந்த சக்தி அதிகரித்ததா? இதற்கு விடை கிடைத்தாலும் விடை கிடைக்காவிட்டாலும் வடக்கில் நிலப் பரப்பு குவிந்திருப்பதை யாரும் காணலாம்.
ஆக பூமி என்னும் காந்த உருண்டைக்கு மதிப்பு கொடுத்து அதனுடன் மோதாமல் இருக்க வேண்டுமானால் வடக்கைத் தவிர வேறு திசையில் தலை வைத்தும் உறங்கலாம். கிழக்கு திசையிலோ தெற்கு திசையிலோ தலைவைத்துப் படுப்பது உத்தமம்.
புனித திசை வடக்கு
இந்துக்களுக்கு வட திசை மீது மதிப்பும் மரியாதையும் அதிகம். கையிலாயமும் மேருவும் இருக்கும் புனித திசை அது. உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்க விரும்புவோர் வட திசை நோக்கி அமர்ந்து உயிர் விடுவர். சங்க இலக்கிய நூல்கள் பிசிராந்தையாரும் கோப்பெருஞ் சோழனும் உண்ணாநோன்பு இருந்ததை வடக்கிருத்தல் என்றே அழைப்பர். மஹாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் வட திசைப் பயணம் நோக்கிப் பயணம் செய்து ஒவ்வொருவராக உயிர்விட்டதையும் படித்திருப்பீர்கள். இதை மஹா பிரஸ்தானம் என்று அழைப்பர்.
நூறாண்டுக் காலம் வாழ்க! நோய் நொடி இல்லாமல் வாழ்க என்று வேதம் கூறுகிறது
பஸ்யேம சரதஸ் சதம், ஜீவேம சரதஸ் சதம், நந்தாம சரதஸ் சதம், ப்ரப்ரவாம சரதஸ் சதம்
தீர்க்காயுஷ்மான் பவ:

Advertisements

3 thoughts on “வடக்கே தலை வைக்காதே

  1. upli srinivasan says:

    I am  actually placing my head at present in the north as my house is facing south  the pial is  extending   north south and the slope is from to south for water to dran.  kindly reconcile uppilisrinivasan

    செவ்வாய்கிழமை, 27 செப்டம்பர், 2016 8:27:41 மதியம் அன்று, CHAMARTHI SRINIVAS SHARMA எழுதியது:

    #yiv3840572727 a:hover {color:red;}#yiv3840572727 a {text-decoration:none;color:#0088cc;}#yiv3840572727 a.yiv3840572727primaryactionlink:link, #yiv3840572727 a.yiv3840572727primaryactionlink:visited {background-color:#2585B2;color:#fff;}#yiv3840572727 a.yiv3840572727primaryactionlink:hover, #yiv3840572727 a.yiv3840572727primaryactionlink:active {background-color:#11729E;color:#fff;}#yiv3840572727 WordPress.com | Chamarthi Srinivas Sharma posted: “​வடக்கில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று இந்து மத சாத்திர நூல்கள் கூறுகின்றன. சதாசாரம் என்னும் நூல் நாம் அன்றாடம் பின்பற்றவேண்டிய பழக்க வழக்கங்களைப் பற்றிக் கூறுகிறது. மற்ற திசைகளில் தலை வைத்துப் படுக்கலாம். இந்த சாஸ் த்திர விதிக்கு ஏதேனும் விஞ்ஞான விளக” | |

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s