சிதம்பரம் நடராஜர்


*சிதம்பரம்_நடராஜர்_சிலை_உருவான_வரலாறு* 
# ஒரு காலத்தில் நடராஜர் சிலை வடிக்க மன்னன் ஆணையிட, சிற்பிகள் சிலை வடிக்க முற்பட்டனர். ஆனால் சிலை உருவாகும் நேரத்தில் எப்படியோ தவறு நடந்துவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் இப்படியே நடந்து வந்தது. சிலை முழுமையடையவில்லை.
 # எனவே சிற்பிகள் அரசரிடம் சென்று தங்களின் இயலாமையைத் தெரிவித்தனர். மன்னரோ கடும்கோபம் கொண்டார். அவர் சிற்பிகள் அனைவரையும் அழைத்து ஒருநாள் குறிப்பிட்டு “இத்தேதிக்குள் சிலை முழுமை அடைய வேண்டும். இல்லையேல் உங்களுக்கு சிரச்சேதம்தான்’ என ஆணை பிறப்பித்தார். சிற்பிகள் நடுங்கினர்.
 # சிற்பிகள் அனைவருக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. எனவே மிகவும் கவலையுற்று நம்பியவர்களைக் காக்கும் நடராஜர் பாதத்தில் சரணடைந்து மனம் உருகி வேண்டியபடி சிலையமைக்கும் இடம் சென்றனர். அவ்விடம் ஒரு காடு என்பதால் ஜன நடமாட்டமே கிடையாது. சிற்பிகள் கலக்கத்துடன் தங்களின் வேலையைத் துவக்கினர்.
# அப்போது ஒரு வயோதிகர் வந்து நின்று “ஐயா! மிகவும் பசியும், தாகமுமாக உள்ளது. ஏதேனும் உணவு கொடுங்கள்’ என இரு கைகளை நீட்டி யாசிப்பவராய் நின்றார். சிற்பிகளோ பதற்றத்தின் உச்சியில் நிற்க, வயோதிகரைப் பார்த்து “ஏனய்யா சமயம் தெரியாமல் நீர் வேறு தொல்லை தருகின்றீர். இவ்விடம் உணவில்லை. உலோகக் கூழ்தான் உள்ளது. நாங்கள் என்ன செய்ய?” என்றனர்.
# கிழவரோ, “”என்னால் பசி தாங்க முடியவில்லை ஐயா. உயிர்போகும் படியாய், தலை சுற்றுகிறது, நடக்க முடியவில்லை. எனவே இந்த உலோகக் கூழையே ஊற்றுங்கள். குடித்துக் கொள்கிறேன்” என்றார். சிற்பிகளோ ஒன்றும் புரியாது குழப்பத்துடன் நிற்க, அதில் ஒருவர் “”சரி என்னவோ நடக்கட்டும் கிழவர் கேட்கின்றார் ஊற்றுவோம்” எனக் கூறி ஒரு குவளை எடுத்து கையில் ஊற்ற பெரியவரோ அதை அன்புடன் சுவைக்க இவர்கள் ஊற்றிக்கொண்டே வந்தனர்.
# சிற்பிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அனைத்துக் கூழும் தீர்ந்தது. பெரியவர் சிரித்துக்கொண்டே “அப்பா என் பசி தீர்ந்தது’ என்றார். அடுத்த நொடி புன்னகையுடன் குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயும், குமிழ் சிரிப்பும், பனித்த சடையும், பவளம்போல் மேனியும், பால் வெண்ணீறும், இனித்தமுடைய எடுத்த பொற்பாதத்துடன் ஆடல்பிரான் சிரித்துக்கொண்டே அருட்காட்சி தந்து நின்றார். நாம் இக்கலியுகத்தில் காணும் சிதம்பர நடராஜன் தானே உகந்து வந்து நாம் உய்யும் பொருட்டு நமக்கு அருளாசி தருகின்றார். 
# தகவல் _ தின மணி

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s