நீ அறியாதது ஒன்றுமில்லை


நாம் தரிசனத்திற்கு போய் நிற்கும்போதே நம்மைப்பற்றிய அனைத்தையும் ஸ்ரீ பெரியவாயெனும் தெய்வம் அறிந்திருக்குமென்பது அதிசயமல்ல! ஆனால் ஏதோ ஒரு மாயை அதை மறைத்துவிட நாம் ஸ்ரீ பெரியவாளை தரிசிக்க நிற்கும்போது நாம் குறைகளை சொல்வதால்தான் ஸ்ரீ மகானுக்கு தெரியும் என்று நினைத்துக் கொள்கிறோம்.
இப்படி ஒரு பக்தர்கள் கூட்டம் தரிசிக்க நின்றபோது தர்மம் வழுவாத மேன்மை துறவி பொதுவாக இப்படி பேச்சை ஆரம்பித்தார்.
“மூதாதையர்கள் நமக்கு நன்மை செய்யனும்னு தான் வாரிசுகள் சௌக்கியமா இருக்கணும்னு பலவிதமான தர்மங்கள் தொடர்ந்து நடக்க நிலம்-பணம் சொத்து எல்லாத்தையும் மூலதனமா வைச்சி அதிலே கிடைக்கிற வருமானத்திலே அந்தந்த தர்மங்கள் பாரம்பர்யமா நடக்கணும்னு ஆசைபட்டா. ஆனா ரொம்ப இடங்களிலே அவர் எழுதி வைச்சபடி நடக்கலே தர்மத்துக்கு செலவாக வேண்டிய பணம் குடும்பச் செலவுக்கு பயன்படுகிறது இது அதர்மம். அதனாலே டிரஸ்ட் பணத்தை அனுபவிக்கும் பல குடும்பங்கள் ரொம்பவும் சிரமப்படுகின்றன. பிரயாகையிலிருந்து கொண்டு வந்த சுத்த கங்கையை தெருவோரம் முட்புதர்லே கொட்டிய மாதிரி ஆகிவிடுகிறது”.
இதை கேட்ட அங்கிருந்த பக்தர் ஒருவருக்கு மனதில் உறுத்தியது “இனிமே அப்படி செய்யமாட்டேன். தர்மத்தை செய்யறேன். பெரியவா அபசாரத்தை மன்னிக்கனும்” என்று தேம்பி தேம்பி அழ தொடங்கினார். தவறை சுட்டி காட்டிய கருணை தெய்வம் உடனே கனிந்து அருளியது.
“நான் உனக்காக சொல்லலே. பல குடும்பங்கள் தர்ம சொத்தை தவறா துர்விரயம் செய்துண்டிருகான்னு சொன்னேன்” என்றார் ஆறுதலாக.
தன் முன் நின்று காட்சியருளுவது சாட்சாத் தெய்வமே என்ற தன் தவறை உணர்ந்து குற்ற மனப்பாண்மையுடன் நின்ற பக்தருக்கு நிறைய பிரசாதம் அளித்து தெய்வம் ஆட்கொண்டுவிட்டது. இப்படி நம் எல்லாவற்றையும் அறிந்து தன் கருணையினால் அரவணைக்க காத்திருக்கும் தெய்வமான ஸ்ரீ பெரியவாளிடம் நாம் கொள்ளும் பக்தி, நமக்கு எல்லா நன்மைகளையும் அள்ளி வழங்கி ஆனந்திக்க வைக்கும் என்பதில் ஐயமுண்டோ!

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s