சுவாமிநாத்


குழந்தை சுவாமிநாத் !
ஒருமுறை ஸ்ரீ பெரியவா சதாராவில் குடி கொண்டிருந்த போது சசிகலாவிற்கு ஒரு அதிசய உணர்வு ஏற்பட்டது. சசிகலாவின் மனதில் ஒரு மந்திரஜபம் தோன்றியது. தன்னையறியாமல் அந்த மந்திரத்தை அவர் மனம் திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பித்தது. காரணமே இல்லாமல் “சுவாமிநாத்….சுவாமிநாத்” என்ற மந்திரம் எப்படி தன்னுள் எழுந்தது என பெரியாதபோது ஸ்ரீ பெரியவாளின் அன்னையான மாதுஸ்ரீ மகாலட்சுமி தாயாரைப் பற்றியும் மனம் யோசிக்க ஆரம்பித்து விட்டது.
அந்த அன்னைக்கு தன் 13 வயது பாலகன் பிரிந்து சென்றபோது எப்படி இருந்திருக்கும்? எப்படி தான் சமைத்து உண்ணும்போது குழந்தை எப்படி சாப்பிடுகிறாரோ என்று ஏக்கம் வாட்டியிருக்கும்? கடுங்குளிரில் காவியோடு செல்லும் தன் குழந்தை எப்படி அதை தாங்கிக் கொள்ள இயலுமோ என்ற வேதனை மனதை அரித்திருக்கும்.
இப்படி ஸ்ரீ பெரியவாளை ஈன்றெடுத்த அன்னைக்கு ஏற்பட்டிருக்கும் எண்ணங்கள் திரும்ப திரும்ப மனதில் எழுந்து மகாலட்சுமி தாயாருக்கு ஏற்பட்ட அதே வேதனையை சசிகலாவிற்கும் ஏற்படுத்திய விந்தை நிகழ்ந்தது.
ஒரு வேளை தாங்க முடியாத குளிரால் தன் உடல் வாடுவதால் அதே எண்ணங்கள் ஏற்படுகின்றதோ என எண்ணிய சசிகலா உடனே சென்று கம்பளி நூலை வாங்கிவந்தார். அதை ஒரு அன்னையை போல் ஸ்ரீ பெரியவாளுக்கு சமர்ப்பிக்க நினைத்தார். ஸ்ரீ பெரியவா யாரிடமும் எதையும் வாங்குவதில்லை என அறிந்தும், சிவநாமாவை சொல்லியபடியே கம்பளி நூலில் ஸ்வெட்டர் பின்ன தொடங்கினார். ஒரு லட்ச சிவநாம ஜபத்தோடு பின்னிய ஸ்வெட்டரை   தயாரித்தபோது பெரியவா சதாராவிற்கு வந்திருந்தார்.
ஒரு சின்ன குன்றில் பாழடைந்த மடத்தில் ஸ்ரீ பெரியவா அருள 25 படிகளை சசிகலா ஏற ஆரம்பித்தபோது “நீங்கள்தான் பூனாவிலிருந்து வருகிறீர்களா? பெரியவா காத்துண்டிருக்கா சீக்கிரம்” என்று ஒருவர் அதிசயமாக சசிகலாவை அழைத்துச் சென்றார்.
ஒரு இருட்டான அறையில் யாருக்கோ காத்திருப்பது போன்ற தோற்றத்துடன் காட்சியருளிய மகான், ஸ்வெட்டரை ஜன்னல் கம்பி இடுக்கில் பக்தை வைத்தவுடன் ஒரு குழந்தையைப்போல் ஓடி வந்து தன் திருக்கரத்தில் எடுத்து லேசான புன்னகையோடு தன் மார்பில் வைத்து பின் திருநாசியில் முகர்வதுபோல் கொண்டு சென்று, திருமுகத்தில் தேய்த்து பின் மெதுவாக உள்ளே சென்றுவிட்டார். பேரருளால் பக்தை திக்குமுக்காடினார்.
மிக ஆச்சரியமாக அதுவரை சசிகலாவின் மனதில் ஒலித்துக் கொண்டிருந்த சுவாமிநாத் என்ற மந்திரம் சட்டென்று நின்றதுபோல பக்தை உணர்ந்தார். அப்போது புரியாத ஒரு அதிசயம் பக்தைக்கு பின்னர் ஒரு புத்தகத்தை படித்தபோது புரிந்தது. மகா தெய்வமான ஸ்ரீ பெரியவாளின் பூர்வாஸ்ரம மகாலட்சுமி தாயாரின் புதல்வராய் ஸ்ரீ பெரியவாளின் திருநாமம் சுவாமிநாதன் என்பதே!
இப்படி சசிகலாவிற்கு குழந்தையாக அருளிய உலகினை ஈன்ற தயாபரமூர்த்தி, பக்தி செயும் அனைவருக்கும் தாயினும் மேன்மையான அருள்பொழிந்து சர்வ மங்களங்களையும், சகல ஐஸ்வர்யங்களையும் அருள காத்து நிற்பது சத்தியமே!
– கருணை தொடர்ந்து பெருகும் (பாடுவர் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் – சுந்தரமூர்த்தி சுவாமி தேவாரம்)

Advertisements

One thought on “சுவாமிநாத்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s