சிகை

​சௌள ப்ரகரணம்

    குடுமி எனும் சிகை வைக்கும் ஸம்ஸ்காரத்திற்கு சௌளம் என்று பெயர். இது விதிவத்தாய் – விதிப்படி வைக்கப்பட்டிருந்தால்தான் சூடாகரணம் என்று சொல்லத் தகுந்ததாகும். இதை 1, 3, 5ம் வயதிலாவது அவச்யம் செய்துவிடவேண்டும். நெற்றிக்கு மேல் ஒரு விரல்கடை (நான்கு விரல் அகலம்) வரை உள்ள ரோமங்களை வட்டமாக எடுத்துவிடவேண்டும். சிகையை யஜ்ஞோபவீதத்திற்கு சமமாக பாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதை பிறகு வேறுவிதமாக மாற்றி அமைக்கவோ, எடுத்துவிடவோ சாஸ்த்ரம் அனுமதிப்பதில்லை. அத்வைதிகள் ஸந்யாஸம் மேற்கொள்ளும்போது பூணலை எடுக்கும்போது சிகையையும் எடுத்து மொட்டையாக்கிவிடுகிறார்கள். இதனாலும் சிகையும், பூணலும் சமம் என்பது நிரூபணமாகிறது. க்ருஹஸ்தன் மாதத்திற்கொருமுறை ஸர்வாங்க க்ஷவரம் செய்துகொள்ளவேண்டும். ஸர்வாங்க க்ஷவரம் செய்துகொள்ளாவிடில் அது தீட்டுள்ளவனுக்குச் சமம். அப்படிப்பட்டவன் ஓர் ஆசமனம் செய்வதற்குக் கூட அருகதை அற்றவன் ஆவான். திருப்பதி முதலிய க்ஷேத்ரங்களுக்குச் செல்பவர்கள் கூட ப்ரார்த்தனை இல்லாவிடில் சிகையை எடுக்கக்கூடாது. நோயாலோ, காராக்ரஹ வாஸம் போன்ற தண்டனையாலோ மயிர் எடுக்கப்பட்டிருக்குமானால், பசுவின் வால் மயிரையோ, தர்பத்தையோ சிரசில் சிகையின் ஸ்தானத்தில் வைத்துக்கொண்டுதான் கர்மா செய்யவேண்டும். தலையில் வைத்துக்கொள்ள முடியாவிடில் காதிலாவது சொருகிக்கொள்ளவேண்டும். 

    ஒவ்வொரு நாளும் தீர்த்தமாடியதும், கரைக்கு வந்து பித்ருக்களின் த்ருப்திக்காக சிகையின் தலை மயிரை முன்பக்கமாகத் தொங்கவிட்டு ஜலத்தைப் பிழிந்து சிகோதகம் கொடுக்கவேண்டும். வீட்டிற்குக் கூரை போல, நம் தேஹமாகிய வீட்டிற்கு சிகை அவசியம் ஆகும். வேதத்திலும் க்ஷௌர க்ரமம் சொல்லப்பட்டுள்ளது. முதலில் கட்கங்கள், பின் முகம், அதன்பின் தலை என்ற வரிசையில் க்ஷெளரம் செய்யவேண்டும்.

    மாத்ரு பித்ரு மரணத்தில் ஒரு வருடமும், பார்யை கர்பம் தரித்தது உறுதியானது முதல் அவள் ப்ரஸவித்து 10நாள் ஆகும் வரையிலும், விவாஹம், உபநயனம் இவை ஆனபின் ஆறு மாதங்களும், மாதா – பிதாக்களின் ச்ராத்தம் வருகிற ஒரு மாதம் அல்லது ஒரு பக்ஷம் ஆகிய காலங்களில் வபநம் செய்துகொள்ளக் கூடாது. 

    ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளிலும், சதுர்த்தீ, சதுர்தசீ, ஷஷ்டீ, அஷ்டமீ, நவமீ, ஏகாதசீ, த்வாதசீ, பௌர்ணமீ, அமாவாஸை, ப்ரதமை ஆகிய திதிகளிலும் வபநம் செய்து கொள்ளக் கூடாது. இதனால் ஏற்படும் கெடுதல்களை தர்மசாஸ்த்ர நூலில் படித்து அறியவும்.  க்ருத்திகை, பூரட்டாதி, உத்ரட்டாதி ஆகிய நக்ஷத்திரங்களிலும் வபநம் கூடாது. 

    சௌள ஸம்ஸ்காரம் செய்ய புநர்வஸு நக்ஷத்திரம் மிகுந்த பொருத்தமாகும். சௌளத்திற்கு முன்பாக ப்ராஹ்மண போஜனம் செய்வித்து ஆசீர்வாதம் பெறவேண்டும். ஸீமந்தத்தில் வகுடெடுத்தல் போலவே இதிலும் செய்யவேண்டும். உபநயன ப்ரகரணத்தில் இதற்கான மந்த்ரங்களுக்குரிய அர்த்தங்களை பார்த்துத் தெரிந்துகொள்ளவும். தலையில் இரண்டு விசேஷமான இடங்களை வபநம் செய்வது கோதாநம் என்னும் கர்மாவிற்கு அங்கமாகும்.

Advertisements

One thought on “சிகை

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s