ஸ்ரீ ஐயப்பன்


சபரிமலை ஐயப்பன் வரலாறு…..
நாராயண மூர்த்தியினுடைய சக்தியும், பரமேஸ்வரனுடைய சக்தியும் இணைது அவதரித்த ஹரிஹர புத்திரன் அவதாரம் :

தேவர்களும், அசுரர்களும் தேவாமிர்தம் பெறுவதற்காகவும்;  துருவாச முனிவரின் சாபத்தால் இந்திரன் இழந்த செல்வங்களை பெறுவதற்காகவும்;  மேருமலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு திருபாற் கடலைக் கடைந்தார்கள். அப்போது வாசுகி வேதனையால் கக்கிய”காலம்” என்னும் விஷமும், பாற்கடலில் தோன்றிய “ஆலம்”என்னும் விஷமும் சேர்ந்து “ஆலகால விஷமாக” திரண்டு தேவர்களையும், அசுரர்களையு அழிக்க துரத்தியது.
தேவர்களும் அசுரர்களும் பரமசிவனிடம் தம்மை காப்பாற்ற வேண்டினர். பரமசிவன் அவ் ஆலகால விஷத்தினை ஏந்தி அதனை அருந்தி தேவர்களையும், அசுரர்களையு காப்பாற்றியதுடன்திருநீலகண்டன் ஆனார்.
அதன் பின்னர் அவர்கள் திருபாற்கடலைக் கடைந்த போது; திருபாற்கடலில் சங்கமித்த இந்திரனின் செல்வங்களானசங்கநிதி, பதுமநிதி, சிந்தாமணி, இரதி, இலக்குமி, அகலிகை, இந்திராணி, அறுபத்தாறாயிரம் அரம்பாஸ்த்திரீகள், காமதேணு, கற்பக விருட்சம், ஐராவதம், உச்சைசிரவம் முதலானவை தோன்றின.
ஆனால் தேவர்களும், அசுரர்களும் எதிர்பார்த்த தேவாமிர்தம்தோன்றவில்லை. அதனால் மனச்சோர்வடைந்த தேவர்களும், அசுரர்களும் செய்வதறியாது ஏங்கினர். தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர். அப்போது தேவாமிர்தம் பாற்கடலில் தோன்றியது. தேவர்கள் அங்கு இலாதிருக்கவே அதனை அங்கிருந்தஅசுரர்கள் பெற்று தமதாக்கிக் கொண்டனர். 
இதனைக் கண்ட திருமால்தேவாமிர்தத்தை அசுரர்கள் அருந்தினால் அவர்கள் சாகாவரம் பெற்றுவிடுவார்கள் என எண்ணி அதனை அவர்களிடம் இருந்து தந்திரமாக பெற்றுக் கொள்ள முடிவு செய்தார்.  அசுரர்களின் பலவீனத்தை (அளகான பெண்களைக் கண்டால் தமை இழந்து மயங்கும் தன்மையை) நன்குணர்ந்த நாராயண மூர்த்தி “மோகினி” அவதாரம் எடுத்து அசுரர்களின் கவனத்தை திசை திருப்பி, தேவாமிர்தத்தை அசுரர்களிடம் இருந்துதந்திரமாகப் பெற்று தேவர்களுக்கு பகிந்தளித்தார்.
அப்போது, அசுரர்கள் எல்லாம் அப்படியே மோகினியின் அழகில் மயங்கிக் கிடந்தார்கள். தேவர்களும் மோகினியின் அழகில் மயங்கத்தான் செய்தார்கள்; ஆனாலும், உடனேயே தங்கள் மனதை நிலை நிறுத்திக்கொண்டு, அமுதத்தைப் பெறுவதிலே அறிவைச் செலுத்தினார்கள். அசுரர்கள் பலரும் மோகினியிடம் மயங்கி இருந்தாலும் அவர்களில் ”சுவர்பானு” என்ற அசுரனுக்குமட்டும் சந்தேகம் இருந்தது. அவனும் உண்மையை தெரிந்து கொண்டதும், மெல்ல நகர்ந்து தேவர்களின் பக்கம் போய்தேவர்களில் ஒருவனாக வரிசையில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வந்து அமர்ந்தான். அவன், சுவர்பானு, காஸ்யப்பர் வம்சத்தில் வந்தவன். பெற்றோர், விப்பிர சித்து-சிம்ஹிகை.  
மோகினி, தேவர்களுக்கு அமுதம் வழங்கியபோது அவனும் அமுதம் பெற்று, அதை உண்டுவிட்டான். அப்போது சூரியனும் சந்திரனும், “இவன் அசுரன்”என்று, குறிப்பு (சாடை) காட்டினார்கள். உடனே மோகினி தன் கையிலிருந்த  அகப்பையால்,  சுவர்பானுவின் தலையில் அடித்தார். அதனால், சுவர்பானுவின் தலை தனியாகவும் உடல் தனியாகவும் விழுந்தது. அமுதம் உண்டதால், சுவர் பானு இறக்கவில்லை. தலையும் கைகளும் பர்ப்பர தேசத்தில் விழுந்தன. அவற்றைபர்ப்பர தேசத்து அரசனான பைடீனசன்என்பவன் எடுத்துப்போய் வளர்த்து வந்தான். அவனால் வளர்க்கப்பட்ட, அந்தத் தலையும் கைகளும் சேர்ந்த வடிவம்தான், ராகு. ராகு, மகாவிஷ்ணுவை நோக்கித் தவம் செய்து, கறுத்த பாம்பின் உடலைப் பெற்றான்; கிரக பதவியும் பெற்றான் என அபிதான சிந்தாமணி கூறுகிறது.
சூரிய, சந்திரர் தன்னைக் காட்டிக் கொடுத்ததால், அவர்களுடன் பகைமை கொண்டான் ராகு. அதனால், அவர்களைப் பீடிக்கத் தொடங்கினான். அதுவே, கிரகணம் எனப்படுகிறது. 
இவ் ” நாராயண மூர்த்தியின் “மோகினி”அவதாரத்தை சாதகமாக்கி; விதி வசத்தால் நிகழ இருக்கும் மகிஷி சம்காரத்தை நிகழ்ததுவதற்காக; கைலாசபதியான ஸ்ரீ பரமேஸ்வரன்;மோகினியின் அழகில் மயங்கி, ஆழ்ந்து பரவசம் கொள்ள; அவ் இரு மூர்த்திகளின் ஆற்றல்கள் முழுவதும் ஒன்றாகப் பெற்றஸ்ரீ ஹரிஹர புத்திரன் தர்ம சாஸ்தா அவதரித்தார் என விஷ்ணு புராண வரலாறுகள் கூறுகின்றது.ஆனால்; பஸ்மாசுரன் என்னும் அசுரன் பெரும் தவம் செய்து சிவபிரானிடம்; தான் யாருடைய தலைமேல் கை வைத்தாலும் அவர்கள் (சாம்பலாக) பஸ்பமாக வேண்டும் என்னும் வரத்தினைப் பெற்றான். தான் பெற்ற வரத்தின் வலிமையினால் அகங்காரம் கொண்ட பஸ்மாசுரன் மதி மயங்கி தான் பெற்ற வரத்தினை, வரங்கொடுத்த இறைவனிடமே பரீட்சித்து பார்க்கத்துணிந்தான்.
சிவபிரான் செய்வது அறியாது  திகைத்து நின்ற போது; மகாவிஷ்ணு மோஹினிரூபமெடுத்து  பஸ்மாசுரன் முன் தோன்றி; அவனின் எண்ணத்தை திசை திருப்பி; அவனுடன் போட்டியாக நடனமாடி தந்திரமாக அவனது கையை அவனாகவே அவனது தலையில் வைக்கச் செய்து பஸ்ப மாக்கினார். அந்த மோஹினி ரூபத்தைப் பார்த்த பரமேஸ்வரன் விதி வசத்தால் நிகழ இருக்கும் மகிஷி சம்காரத்தைநிகழ்ததுவதற்காக நாராயண மூர்த்தியாகிய மோஹினி மேல் மோகம் கொள்ள ஹரிஹரசுதன் ஐயப்பன்அவதரித்ததாக பத்ம புராணம்கூறுகின்றது.
இவ் இரு புராணங்களும் (விஷ்ணு புராணமும், பத்ம புராணமும்) இரு வேறு நிகழ்வுகளைக் கூறினாலும் அவை இரண்டும்; ஐயப்பன் அவதாரம்; நாராயண மூர்த்தியினுடைய சக்தியும், பரமேஸ்வரனுடைய சக்தியும்இணைந்ததால் அவதரித்தஹரிஹரபுத்திரன் என்பதை உறுதியாக நிரூபிக்கின்றன.
ஹரிஹர புத்திரரான தர்ம சாஸ்தாவை தந்தையாகிய சங்கரனும், தாயாகிய நாராயண மூர்த்தியும் பூலோகத்தைக் காவல் புரியும் காவல் தெய்வமாக  (ஐயனாராக) ஆசீர்வதித்து பிரம்மாவிடம் ஒப்படைத்தார்கள். (நாராயண மூர்த்தியின் கையில் அவதரித்தமையால்கைஅப்பன் என்ற பெயர் பெற்றார் என்றும் பின்பு அப்பெயர் மருவி ஐயப்பன் ஆகிற்று என்று கூறுவாருமுளர்).

Advertisements

One thought on “ஸ்ரீ ஐயப்பன்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s