ஆசையை விட்டொழி…

​பிறவிப்பயன்………
பிறப்பை அறுக்க விரும்பும் அன்பர்களுக்கு…….
மாணிக்கவாசகர் கூறியதுபோல் புல்லாகி பூடாய், புழுவாய், மரமாகி….. இப்பிறவி பாவத்தால் விளைந்ததா முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் விளைந்ததா என ஈசனே அறிவான். கிடைத்த மானிட பிறவியை பயன்படுத்தி பிறப்பை அறுக்கும் வழிமுறையை சிந்திப்போம்.
ஆன்மீகத்தில் இருக்கும் அனேக அன்பர்கள் பூசை புனஸ்காரம் செய்வதும் விரதமிருப்பதும் மந்திரம் ஓதுவது பரிகாரம் செய்வதும் இதர ஆன்மீக செயல்களில் ஈடு படுவதும் தனது சுய நலத்திற்காகவும் தனது குடும்பத்திற்காகவுமே….. இதற்கு அடிப்படை காரணம் நான் நாம் என்ற எண்ணம். 
நீங்கள் எத்தெய்வத்தை வேண்டுமானாலும் வனங்கிக்கொள்ளுங்கள்
என்ன பரிகாரம் வேண்டுமானாலும் சேய்து கொள்ளுங்கள்
எந்த விரதத்தை வேண்டுமானாலும் கடைபிடியுங்கள்
எந்த மந்திரத்தை, எந்த திருமுறையை வேண்டுமானாலும் ஓதுங்கள்.
ஆனால் உங்களுக்கென்று வகுக்கப்பட்டது நடந்தே தீரும் இதையே விதி என்கிறோம்.
நான் கூறுவது பொய்யெனில் சாதகமும், சோதிடமும,  வானவியல் சாஸ்திரமுமம், பஞ்சாங்கமும் பொய்யே.
வகுக்கப்பட்ட வாழ்கையையே போக்கிக்கொண்டிருக்கிறோம். இருப்பினும் பிறவிப்பயன் பெற பிறப்பை அறுக்க பல வழிகள் இருப்பினும் அனைத்திற்கும் மூலாதாரமாக இருப்பது ஆசை (மாயை). சரியை, கிரியை, யோகம், ஞானம், இதில் எதை முயற்சித்தாலும் அடிப்படையான மாயயை (ஆசை) அறுக்காவிட்டால் பிறப்பை அறுக்க சாத்தியமே இல்லை ஆசையே மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க முழு முதற்காரணம். 
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ….. அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ…..! எனும் பட்டினத்தாரின்  வரிகளை கேட்கும்பொழுது இது நமக்கு எத்தனையாவது பிறவி என்று யோசிக்கவைக்கிறது.
ஆன்மீகம் என்பதும் பக்தி என்பதும் கடவுள் என்பதும் ஆசைகளை பெருக்கி பொருளை வேண்டிப்பெற்று மீண்டும் மீண்டும்  பிறந்து உழல அல்ல, ஆசையை அருத்து அருளை பெற்று பிறப்பை அறுக்கவே. 
எனவே பிறப்பை அறுக்க முற்படும் அடியார்கள் முதலில் ஆசையை (மாயை) அறுக்க முற்ப்படுங்கள்.
இதை சாத்தியம் இல்லையென்று என்னுபவர்களுக்கு பிறப்பு சத்தியம்
முயல்பவர்களுக்கு முக்தி நிச்சயம்.
திருச்சிற்றம்பலம்🙏🏻🙏🏻🙏🏻

Advertisements

One thought on “ஆசையை விட்டொழி…

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s