தர்ப்பை


பிராஹ்மணன் வாழ்க்கையில் இன்றியமையாத வஸ்து குசம் என்று அழைக்கப்படும் தர்ப்பங்கள். பொதுவாக க்ருஹத்தில் தர்ப்பங்கள் இருப்பதே பெரும் ஐஸ்வர்யமாகும். 
மேலும் தர்பத்தை பற்றிய மேலும் பல குறிப்புகள் இதோ:

(‘வேதமும் பண்பாடும்’ நூலிலிருந்து ஒரு அத்யாயம்)
குச ப்ரசம்ஸை:

தர்ப்பத்தின் நவீன விஞ்ஞான பெயர் போவா சைநோசுராய்ட்ஸ் என்பதாகும், நவீன ஆராய்ச்சியாளர்களும் தர்ப்பங்கள் தன்னகத்தே கொண்டுள்ள அறிய குணாதிசயங்களையும் நல்ல ஒளிர் வீச்சுக்களையும் எடுத்துக் கூறி வருவதும் நம் கண்ணில்படுகின்றது.
தேவதாம்ஸம்

தர்ப்பத்தின் அடியில் பிரஹ்மாவும். மத்தியில் கேசவனும் நுனியில் சங்கரனும், நான்கு திசைகளில் எல்லா தேவர்களும் ஸான்னித்யம் கொண்டுள்ளதாக ஐதீகம். 
பவித்ரம் :

 பொதுவாகவே ப்ராஹ்மணன் எப்பொழுதுமே பவித்ரபாணியாக இருப்பது ச்ரேஷ்டம் என்று ஒரு வாக்யமும் உண்டு. அதனால்தானோ என்னமோ  ரிஷிகள் மோதிர விரலில் ஸ்வர்ண பவித்ரத்தை பிராஹ்மணன் தரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். மோதிர விரலில் தங்கத்தாலான பவித்ரம் தரிப்பதோடு ஆள்காட்டி விரலில் தர்ஜனி எனப்படும் வெள்ளி மோதிரத்தையும் அணிய வேண்டும். ஆனால் ஜீவ ஜ்யேஷ்டன் வெள்ளியினாலான தர்ஜனியைத் தவிர்க்க வேண்டும்.
ஒருவன் தங்கத்தினாலான பவித்ரத்தை நிரந்தரமாக அணிந்திருந்தாலும் கர்மாக்களில் தர்ப்ப பவித்ரம் இன்றியமையாதது. .
எந்தவிதமான கர்மாவாக இருப்பினும் பவித்ரத்தை வலது கை மோதிர விரலில் தான் அணிய வேண்டும். 
பவித்ரத்தில் அடங்கியுள்ள தர்ப்பங்களின் ஸங்க்யை அமைவதற்கு விதிமுறை உண்டு.  அதன் விவரங்கள் :
* ஜபம், தேவ பூஜைகள், ஹோமங்கள் இத்யாதி : 2 புல்

* ச்ராத்தம், தர்ப்பணாதிகள் : 3 புல்

* ப்ரேத கார்யங்கள் : 1 புல்
நிர்ருதி திசை :

பவித்ரத்தின் முடிச்சை அவிழ்த்து கையிலிருந்து நாம் எப்போதெல்லாம் கீழே போடுகிறோமோ போடுகிற திசை நிர்ருதி மூலையாகத்தான் போடச் சொல்லியுள்ளது. 
மற்ற உபயோகங்கள்:

* தர்ப்பத்தினாலான ஜப ஆஸனம் மிகவும் விசேஷம்.

* கர்மாக்களின் துவக்கத்தில் கணவன் ஸங்கல்பம் செய்யும் போது மனைவி கணவனை நேரிடையாக தொட்டுக் கொள்வதில்லை. தர்ப்பங்களினால் தான் கணவனை ஸ்பரிக்கச் சொல்லியுள்ளது. தர்ப்பங்கள் தான் அவர்களுக்கு அங்கே இணைப்பாக உபயோகப் படுத்தப்படுகிறது.

* க்ரஹண காலங்களில் (சூர்ய மற்றும் சந்திர) இல்லத்தில் ஏற்கெனவே பக்குவமாக்கி இருக்கும் பதார்த்தங்களிலும் குடிநீரிலும், தர்ப்பங்களைப் போட்டு வைத்தால் எந்த தோஷமும் அவற்றுக்கு ஏற்படாது. 

* ஹோமங்களில் பரிஸ்தரணம், ஆயாமிதம், ப்ரணீதா போன்றவைகளிலும் தர்ப்பங்கள் இடம் பெற்றுள்ளன, 

* ச்ராத்த மற்றும் தர்ப்பண காலங்களில் ஸ்தல சுத்தி, ஆஸனம், கூர்ச்சம் போன்றவைகள் தர்ப்பங்களினால்தான் செய்யப்படுகின்றன. * * குறிப்பாக தர்ப்பணங்களில் தர்ப்ப கூர்ச்சத்தினால்தான் (அல்லது தர்ப்ப ஸ்தம்பம்) ப்த்ருக்களை ஆவாஹணம் செய்யச் சொல்லியுள்ளது.

* கலச ஸ்தாபனம் போது மாவிலை கொத்து தேங்காயுடன் தர்ப்ப கூர்ச்சம் வைப்பது இன்றியமையாதது. 

* கல்யாணத்தில் கல்யாண பெண்ணிற்கும், அதே மாதிரி உபநயனத்தில் வடுவிற்கும் இடுப்பில் தர்ப்பங்களினாலான கயிற்றை மந்த்ர பூர்வமாக கட்டும் ப்ரயோகமும் இருந்து வருகின்றது.

.

இனி கர்மாக்களில் பவித்ரத்தை மந்த்ர பூர்வமாகப் பெற்றுக் கொள்ளும் போதும், மற்ற நேரங்களில் தர்ப்பங்களைப் பார்க்கும் போதும் தர்ப்பங்களின் முக்யத்துவத்தை நினைவில் கொள்வோமாக, நன்மையடைவோமாக.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s