கலச ஸ்தாபனம்


எந்த இடத்தில் கலசத்தை ஸ்தாபிக்க வேண்டுமோ அந்த இடத்தை சுத்தப்படுத்த வேண்டும். அந்த இடத்தை பசுஞ்சாணத்தால் சுத்தம் செய்ய வேண்டும். ஏனென்றால் பூமி பவித்ரமாக வேண்டுமென்றால் அதற்கு ஒரே ஸாதனம் பசுஞ்சாணம் தான். பசுஞ்சாணத்தால் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். ப்ரபஞ்சத்தில் 84 லட்சம் ஜீவராசிகள் உள்ளன என்று வேதம் கூறுகிறது. இந்த 84 லட்ச ஜீவராசிகளின் மல மூத்திரம் துர்வாசனையாக இருக்கும். ஆனால் பசுவின் மலம் மட்டும் எப்பொழுதும் நறுமணத்தோடு இருக்கும். மேலும் ஏதேனும் விசேஷமான காரியம் செய்யும் பொழுது நாம் பஞ்சகவ்யத்தை உட்கொள்வதுண்டு. பஞ்சகவ்யம் என்றால் பசுவினடத்தில் உற்பத்தியாகும் 5 பதார்த்தங்கள் – பால், அந்தப் பாலிலிருந்து எடுக்கப்படும் தயிர், அந்தத் தயிரிலிருந்து எடுக்கப்படும் நெய், பசு மூத்திரம், பசுஞ்சாணம். இந்த ஐந்தையும் கலந்து மந்திரத்துடன் நாக்கில் வைத்து உட்கொள்ள வேண்டும். அந்த உட்கொண்ட மாத்திரத்தில் உள்ளே இருக்கின்ற பாபங்கள் அக்னிஹோத்ரமாக வேலை செய்து உள்ளே உள்ள அனைத்து பாபங்களும் நசிக்கும். அந்த பாபங்கள் நசிக்கப்படுவதால் உத்தமமான வேலை செய்வதற்கு தேவையான அதிகாரத்தை எஜமானர் அடைவார். பசுவிடத்திலிருந்து உற்பத்தியாகும் திரவியங்களுக்கு அவ்வளவு சக்தி உண்டு. பசுவைவ பசுவாக பாவனை செய்யக்கூடாது. பசு ஸாக்ஷாத் பரதேவதை ஸ்வரூபம். அப்பேற்பட்ட பரதேவதை ஸ்வரூபமாக பாவிக்கப்படும் பசுவிடத்திலிருந்து உற்பத்தியாகும் அனைத்து பதார்த்தங்களும் பரம பவித்ரமானவை ஆகும். அந்த கோமியத்தினால் கலசத்தை ஸ்தாபிக்கும் இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். அப்படி சுத்தம் செய்யாவிட்டால் அந்த இடத்தில் சக்தி ஆவாஹனம் ஆவதற்கான சந்தர்ப்பம் இராது. அதனால் தான் கோமீயத்தினால் பூ ஸுத்தி செய்து புதிய வஸ்திரத்தை பரப்ப வேண்டும். புதிய வஸ்திரம் கரையுடன்(border) கூடி இருக்க வேண்டும். அந்த புதிய வஸ்திரத்தின் மீது அரிசியை போட வேண்டும். அரிசி என்றால் ஔஷதம் என்று அர்த்தம். அதற்கு ஒரு சக்தி உண்டு. அது பகவானின் கிரண ஸ்பர்த்தினால், சூரிய கிரணங்கள், சந்திர கிரணங்களின் ஸ்பர்ஸத்தினால் ஔஷதீ தத்வத்துடன் கூடி இருக்கும். அப்பேற்பட்ட அரிசியை போட்டு அதன் மீது கலசத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s