மாயாவி


பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு முக்காலமும் அறியும் ஆற்றல் எப்படி கிடைத்தது….?
முக்காலமும் தெரிந்திருந்தால், ஏன் போரில் என்ன நடக்கும் என்று உடன் பிறந்தவர்களிடம் ஏன் செல்லவில்லை ?
பாண்டு உயிர் பிரியும் தருண*த்தில் மகன்கள் ஐவரையும் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாக பிய்த்து தின்று விடும்படியும் , அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்றல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான்..
பாண்ட்வர்களும் அதையே செய்ய திட்டமிடும் போது

அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார்..
விஷயத்தை கேட்டவுடன் பாண்டவர்களை திட்டுகிறார்.

சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகிவிட்டதென்றால் , உங்களுக்கு என்ன ஆனது? யாராவது பிணத்தை தின்பார்களா?
வாருங்கள் விறகு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச்செல்கிறார்.
மிருகங்கள் இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள்…

அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் தன் தந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்றுவிடுகிறான்…

உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி கிடைக்கிறது.
விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள்.

கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார்..ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது..

அதுமற்ற*வர்கள்கண்களுக்குதெரியவில்லை..

சகாதேவனுக்குமட்டும்தெரிகிறது.
கிருஷ்ணரும் மிக களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார்…
அவரருகில் சென்ற சகாதேவன் , கண்ணா . எல்லோரும்விறகை சுமந்துவந்தார்கள்…

அவர்கள் களைப்பாவது நியாயம்…உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்துதானே வந்தது.. நீ ஏன் களைத்தது போல நடிக்கிறாய் என்று கேட்கிறான்…
உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது….

சகாதேவனை தனியே அழைத்துச் செல்லும் அவர் கேட்க ,சகாதேவன் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான்….
எதிர்காலம் தேவ ரகசியம் என்றும்…இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார்….
தனக்குத்தெரிந்த விஷயங்களை எப்ப்போதும் , எவரிடமும் சொல்லகூடாது என்று சத்தியமும் வாங்கிக் கொள்கிறார்.
சகாதேவன் தன் வாக்கை இறுதி வரை காப்பாற்றுகிறான்..

ஒரே ஒருமுறை மட்டும் யுதிஷ்டிரர் மிகவும் வற்புறுத்திக்கேட்டதால் உங்களால் நம் குலம் அழியும் என்ற ஒரு உண்மையை மட்டும் சொல்கிறான்.
மனம் வருந்தும் அவர் , தன்னால் தன் குலம் அழிய நான் விடமாட்டேன் என்றும் இன்று முதல் யாரிடமும் மோதுவதில்லை என்றும் யார் கோரிக்கையையும் மறுப்பதில்லை என்றும் முடிவு செய்கிறார்.
அதன்காரணமாகவே சூதாட துரியோதனன் விடுத்த அழைப்பை நிராகரிக்காமல் பங்கேற்கிறார்….
சகல தர்மமும் அறிந்த தர்மர் என்று அழைக்கப்பட்ட யுதிஷ்டிரர் சூதாட ஏன் ஒப்புக்கொண்டார் என்ற கேள்விக்கும் இதுவே விடை.
பாரத்த்தில் கண்ணன் மாயாவி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s