அச்யுதா அனந்த கோவிந்தா


சொன்னவர்-ஸ்ரீமடம் அணுக்கத் தொண்டர்.

கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஒருநாள் மகான் காஞ்சியில் முகாமிட்டு இருந்தபோது அவரை தரிசிக்க ஐந்தாறு வைணவர்கள் வந்தார்கள். பளிச்சென்று நெற்றியில் திருமண் வைணவர்களுக்கே

உரிய கரை போட்ட வேட்டி இடுப்பில், துண்டு மார்பில்.
வந்தவர்களில் ஒருவர் மட்டும் சற்று வித்தியாசமாகக் காணப்பட்டார். மற்றவர்கள் யாவரும் பெரியவாளுக்கு ‘நமஸ்காரம்’ செய்தபோது இந்த ஒருவர் மட்டும் அசையாத சிலையாக, வெறித்த பார்வையுடன் அங்கே

நின்று கொண்டு இருந்தார்.முகத்தில் எந்த விதமான உணர்ச்சியோ,சலனமோ இல்லை. அங்கே வந்திருந்தவர்களில் ஒருவர் சொன்னார்.
“இவர் என்னோட மாமா. இருந்தாற்போலிருந்து 

இவருக்கு ஏதுமே ஞாபகமில்லாமல் போய்விட்டது. இரவு,பகல் தெரியல்லே.எல்லா டாக்டர் கிட்டேயும் காண்பிச்சாச்சு.அவளாலே ஏதும் கண்டுபிடிக்கமுடியல்லே. அவர்களே குழம்பிப்போய் தூக்க மாத்திரையை கொடுத்து

அனுப்பிட்டாங்க. பல திவ்ய தேசங்களுக்கும் அழைச்சுட்டு போய் வந்துவிட்டோம். குணசீலம்.சோளிங்கர் ஒரு ஊரை பாக்கி விடல்லே.ஆனால் பலன் ஏதும் இல்லை.அதனால்

பெரியவாகிட்டே வந்திருக்கோம் நீங்கதான் அருள்

புரியணும்.
இவர்கள் கவலையோடு சொன்னதை எல்லாம் மிகவும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்தார் மகான். பின்னர் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணக்கிரமத்தில் சொல்லப்படும் ஒரு சுலோகத்தை 108 முறை சொல்லச் சொல்லி அவர்களிடம் கட்டளையிட்டார்கள்.
“அச்சுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் நஸ்யந்தி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்”
இதைத்தான் அவர்கள் 108 முறை ஜபித்து உச்சரிக்கச் சொன்னார்கள்.அவர்கள் சொல்லி ஜபித்து முடித்ததும் மனம் பேதலித்த அப்பெரியவருக்கு துளசி தீர்த்தம் கொடுக்கச் சொன்னார்கள்.
அதற்கு அடுத்து ஸ்ரீபெரியவாளெனும் அந்த சாத்வீக தெய்வத்தின் கட்டளைதான் அனைவரையும் வியக்க வைத்தது. இதை அங்கிருந்தோர் யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஸ்ரீமடத்திலிருந்து ஒரு முரட்டு ஆசாமியை ஸ்ரீபெரியவா அங்கே அழைத்து வரச்சொன்னார்.அங்கே வந்த வஸ்தாத் போன்ற மனிதரிடம்,கிழவர் தலையில் பலமாகக்

குட்டச் சொன்னார்.
அந்த மனிதரும் அப்படியே செய்தார். அடுத்த வினாடி அங்கே ஒரு ஆச்சர்யம் எல்லோரும் வியக்கத்தக்க வகையில் நிகழ்ந்தது. அந்த முதியவர் ஏதோ தூக்கத்தில் இருந்து விழித்தவர் போல எழுந்து நின்றார்.
“ஏண்டா ரகு, நாம இங்கே எப்போ வந்தோம்?

இது ஏதோ மடம் மாதிரி இருக்கே? இது எந்த ஊரு?”
என்று சரமாரியாகக் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். இதன் மூலம் அவர் பூர்ணமாக சுய நினைவுக்கு வந்துவிட்டது தெரிந்தது. கூட இருந்தவர்கள் நடந்தவற்றை மெதுவாக அதே சமயத்தில் விளக்கமாகவும் சொன்னார்கள். இதை கேட்ட அவர் பயபக்தியுடன் ஸ்ரீபெரியவாளை வணங்கி எழுந்தார். அவருடன் வந்தவர்களுக்கெல்லாம் எல்லையில்லாத

மகிழ்ச்சி. எத்தனையோ நாட்களாகப் பட்ட கஷ்டமெல்லாம் சற்று நேரத்தில் மாயமாய் போனது போல் தீர்ந்து விட்டதே! அந்த மாயத்தை செய்த மாதவன் எதிரே நிற்கும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவாளோ? கண் எதிரில் நடந்த உண்மைதானே அது?
“எல்லாம் பெரியவாளோட அனுக்கிரகம்”

என்னும் நன்றிப்பெருக்கோடு மருமான் சொல்லி

ஸ்ரீபெரியவாளை வணங்கி எழுந்தார்.
பெரியவா,- “எல்லாம் அந்த பெருமாள் அனுக்கிரகம்னு சொல்லுங்கோ. அத்தனை திவ்யதேசம் போய் பெருமாளை தரிசனம் செஞ்சதோட பலன்தான் இப்போ கிடைச்சிருக்கு…

நீங்க எல்லாமா சேர்ந்து அச்சுதன்,ஆனந்தன்,கோவிந்தனை

வேண்டி இங்கே ஜபம் செஞ்சதிலே கைமேல் பலன் கிடைச்சிருக்கு” என்று அவர்களிடம் சர்வ சாதாரணமாகச் சொன்ன மகான் தன் மேன்மையை துளியேனும்

வெளிக்காட்டாமல் மிக சாதரணமாய் அது நடந்தது போன்ற ஒரு உணர்வை அவர்களுக்கு உண்டாக்கியதோடு விட்டுவிடாமல்,அதே சமயம் அவர்கள் சார்ந்த வைணவ சம்பிரதாயப்படி பெருமாளை வேண்டியதன் பலனாக மட்டும் அந்த அதிசயம் நடந்ததாக,தன்னை முன்னிலை படுத்தாமல் ஜாக்கிரதையாக இருந்ததை அனைவரும் புரிந்து கொண்டனர்.

ஸ்ரீ பெரியவா பிரசாதமாக தந்த பழங்களையும் துளசியையும் பெற்றுக்கொண்டு அவர்கள் ஆனந்தக் கண்ணீரோடு அகன்றனர். ஏதும் அறியாதது போல் இந்த அத்வைத சந்யாசிரூப ஈஸ்வரர் அங்கே நின்று கொண்டு இருந்தார்.

Advertisements

One thought on “அச்யுதா அனந்த கோவிந்தா

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s