கருணைக் கடல்


‘முட்புதர்கள் மண்டிக் கிடக்கும் ஓரிடத்தில் சுருண்டு கிடந்த-பெரியவா’
(வேதம் படிக்கிற அந்தக் கொழந்தைகளுக்கு எப்படி 

இருந்திருக்கும்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கிறதுக்குத்தான்)
கட்டுரை-ரா கணபதி.

கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்து

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
காலம் வகுக்கவொண்ணாமல் யுகாந்திரமாக இங்கு

நிலவி வந்த வேத அத்யனத்தை இக் கலியின் கடும்

பாதிப்பையும் மீறி எதிர்காலத்துக்குக் காத்துக்

கொடுக்கும் ஸநாதன தர்மக் காவல் வீரர்களாவே

அவர் இன்று மறை பயிலும் மாணாக்கரை மதித்துப்

போற்றினார்.அவர்களிடம் அவருக்கிருந்த 

அலாதியான இதய தேசம்! வைராக்ய பர்வதமான

அவரது நேசம் இங்கு பாசமாகவே ஆகிவிட்டது

என்று கூடச் சொல்லலாம்!அவர்களோடு அப்படி

அவர் தம்மை இழைத்துக் கொண்டிருந்தார்.
அவர் ஆஸ்தானம் கொண்டிருந்த தேனம்பாக்கம்

 சிவாஸ்தானத்தில் அன்று இளங்காலை ஒரே 

பரபரப்பு,பதைபதைப்பு என்றே சொல்லலாம்.
உடனிருந்தோர் உறக்கம் கலைந்து பார்க்கும்

போது பெரியவாளைக்காணோம்.

சிவாஸ்தான ஆலயச் சூழலில் முழுதும் 

தேடிப் பார்த்தும் காண முடியவில்லை.

பரபரப்பும் பதைபதைப்பும் ஏற்படாதிருக்குமா?
அடியார்கள் சுற்றுப் புறம், அதைக் கடந்தும்

சல்லடை போட்டுத் தேடிக் கொண்டே போனார்கள்.

முடிவாக, அங்கு ஓடிய சிற்றாற்றின் கரையில்……

என்ன கொடூரம்!
முட்புதர்கள் மண்டிக் கிடக்கும் ஓரிடத்தில்

ஸ்ரீசரணர் சுருண்டு கிடக்கிறார்.
“அவராக வந்து இங்கு முள்ளுப்படுக்கை உவந்தாரா,

அல்லது..?- எண்ணாததெல்லாம் எண்ணி அடியர் கணம்

அருகு நெருங்க, அவர் பளிச்சென எழுந்தமிர்கிறார்.

அந்த மட்டும் வயிற்றில் பால் வார்த்து விட்டார்.

ஆயினும் திருமேனியில் அப்பினாற்போல முள் அங்கி

பூண்டுள்ள கோலம் அடியார்களின் நெஞ்சில்

கூர்ப்பாகத் தைக்கிறது.
வயது முதிர்ந்த ஒரு பக்தர், “ஐயோ, பெரியவா!

இதென்ன சோதனை?” என்று வாய்விட்டு அலறுகிறார்.
பெரியவாள் சொல்கிறார்.
“இந்த நாள்ல ஜனஸமூஹத்தை வசீகரிச்சுப்

பிடிச்சுண்டிருக்கிறதா, கை நெறய ஸம்பாதிக்கிறதுக்குத்

தினுஸு தினுஸாப் படிப்புகள் இருக்கு. அப்படி

இருக்கிறப்ப, என் வார்த்தையை மதிச்சு,(நெகிழ்ந்த குரலில்) என்னை நம்.பிண்டு சில தாயார்-தோப்பனார்மார் தங்கள் குழந்தைகளை வருமானம், ‘ஆனர்’,’ஃபாஷன்’ எதையும் கவனிக்காம, (வேத) பாடசாலைகளுக்கு அனுப்பிண்டிருக்கா.
அந்தக் கொழந்தைகளும் ஊர் ஒலகத்துல ஒடனொத்த

கொழந்தைகள் தினம் ஒரு ட்ரெஸ், வேளைக்கு ஒரு

ஹோட்டல்னு இருந்துண்டிருக்கிறப்ப, ஒரு மூணறை மொழ சோமனைச் சுத்திண்டு, போடற உண்டைக் கட்டியைத் தின்னுக்கிண்டு, வெளில தலை காட்டினாலே, ‘சிண்டு டோய்!னு பரிஹாஸத்தை வாங்கிக் கட்டிக்கிண்டு, தொண்டை தண்ணி

வத்த ஸந்தை சொல்லிண்டிருக்குகள்.”
ஏதோ ஓரிடத்தில் ஸ்ரீ மடத்தின் ஆதரவில் நடைபெறும்

பாடசாலையைக் குறிப்பிட்டுவிட்டுத் தொடர்கிறார்.
“அங்கே கொழந்தைகள் என்னமோ விஷமம் 

பண்ணிடுத்துகள்-ங்கிறதுக்காகச் சமையக்கார அம்மா

புதுத் தொடைப்பத்தால் அடிச்சுட்டாளாம். வேதம் படிக்கிற அந்தக் கொழந்தைகளுக்கு எப்படி இருந்திருக்கும்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கிறதுக்குத்தான்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s