வில்வ மரம்


ஒரு சிவ பத்தர். நாள் தவறாமல் சிவ பூஜை செய்பவர். வீட்டுக் கொல்லையிலேயே வில்வமரம். 
பூச்சி அரிக்காத தளமாக சேகரித்து வைத்துக் கொண்டு ஆனந்தமாக பூஜை செய்வார். 
அந்த வில்வ மரம் பட்டுப் போய்விட்டது.
லட்சம் ரூபாயை இழந்த சோகம் அந்த பக்தருக்கு.
வழக்கம் போல் பெரியவா தரிசனத்துக்கு வந்தபோது, துக்கம் தொண்டையை அடைக்க, வில்வமரம் பட்டுப் போய் விட்ட செய்தியை கூறினார்.
பெரியவா, அவர் சொன்னதைச் செவியில் போட்டுக் கொண்ட்தாகவே தெரியவில்லை. வேரு யார் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். 
பின்னர், பக்தரை பார்த்து, “இப்போ Water Pollution, Air Pollution-னெல்லாம் சொல்றாளே, உனக்க்கு தெரியும்?’ என்று கேட்டார்கள். 
“ஆமாம்… தெரியும்” என்றார் பக்தர்
“ நம்ம சாஸ்திரங்களில் கூட Pollution பற்றி சொல்லியிருக்கு”
பக்தருக்குப் புரியவில்லை. 
“Air Pollution-ங்கிறது, மனுஷாளுக்கு மட்டுமில்லே; மரங்களுக்கும் உண்டு, ஆசாரமில்லாமல், தீட்டுக் காலத்தில் மரங்களுக்குப் பக்கமா போனால், மரத்துக்குக் கெடுதல். வில்வமரம் அதனால்தான் பட்டுப் போயிருக்கு….”
“வில்வமரத்தின் வேர்ப்பகுதியிலே நிறையப் பசுஞ்சானம் போட்டு, தினமும் தீர்த்தம் விடு. அதுதான் பிராயசித்தம்…”
சிவபக்தர் அவ்வாறே செய்தார். பதினைந்து நாட்களில், துளிர்கள் தெரியத் தொடங்கின. இரண்டு மாதங்கள் கழித்து தரிசனத்துக்கு வந்த பக்தர், அதே வில்வமரத்திலிருந்து வில்வம் பறித்து, பெரியவாளுக்கு வில்வ மாலை சமர்ப்பித்தார்.
பசுஞ்சாணத்தில் உயிர்ச்சத்து – உயிர் தரும் சத்து – இருக்கிறது என்படு என்ன சப்ஜெக்ட்? பயாலஜியா, பாஷ்யாலஜியா? உம்மாச்சி தாத்தா – பசுபதியே அறிவார் !!!

Advertisements

One thought on “வில்வ மரம்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s