ஸௌந்தர்ய லஹரி


அந்த நிகழ்வு நடந்து கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேல் ஆகிறது. ஸ்ரீமஹாஸ்வாமிகள் ஸ்ரீ சிவானந்தன் லஹரியில் பகவத்பாதாள் அருளிய “அங்கோலம் நிஜ பீஜ சந்ததி…” என ஆரம்பிக்கும் 61-வது ஸ்லோகத்தினை அவர்களுக்கே உரிய ஏற்ற-இறக்கம், நடுவே அமைதி என்ற தனித்துவத்தோடு விளக்கிக் கொண்டிருக்கும்போது, ஒரு பக்தர் எழுந்து “திருவண்ணாமலையில் பகவான் ரமணர் சிவானந்தலஹரியில் பத்து ஸ்லோகங்களைப் பொறுக்கி எடுத்து அதனை தினமும் பாராயணம் செய்யும்படியாக உத்தேசித்துள்ளார்கள்.  அதில் முதல் ஸ்லோகம் இது. ஸ்லோக வரிசை முன்னும் பின்னுமாக மாறியிருக்கும்.  அப்படிச் சொல்லலாமா? அல்லது புத்தகத்தில் உள்ள வரிசையின்படியாக சொல்வது நல்லதா? என்றுக் கேட்டார்.   
“மஹான்கள் நல்லதெனக் கண்டுணர்ந்ததைத் தான் உபதேசிப்பார்கள்.  அதனால் எது நல்லது என்று சிந்திப்பது உசிதமல்ல.  அவர்கள் உபதேசித்த வழியும் பெரியோர்கள் ஏற்றது.  அந்த வரிசை பற்றிய குறிப்பு அடங்கிய ஸ்லோகம் உண்டே!”  என்று சிந்தித்து உடன் அந்த ஸ்லோகத்தைச் சொல்லி, வரிசை சரியென்பதனை உணர்த்தினார்கள். 
இனி ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் அருளிய சிவானந்தலஹரி-யிலிருந்து பகவான் ஸ்ரீ ரமணரும் காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகளும் நமக்கென தந்தருளிய ரத்தினங்களான பத்து ஸ்லோகங்கள் யாவை எனப் பார்ப்போமா…?!!! 
61-வது ஸ்லோகம்: 
அங்கோலம் னிஜ பீஜ ஸந்ததிர்-அயஸ்காந்தோபலம் ஸூசிகா 

ஸாத்வீ னைஜ விபும் லதா க்ஷிதி-ருஹம் ஸிந்துஹ்-ஸ்ரித-வல்லபம் | 

8ப்ராப்னோதீஹ யதா ததா பஶுபதே:ஃ பத பாதாரவின்த-த்வயம் 

சேதோவ்றுத்திர்-உபேத்ய திஶ்டதி ஸதா ஸா பக்திர் இதி-உச்யதே ||        || 61 || 
ஏறழிஞ்சல் மரத்தை அதன் விதைக்கூட்டமும், காந்தக்கல்லை ஊசியும், தன் நாயகனை பதிவ்பதையும், கொடிமரத்தையும், ஆறு சமுத்ரத்தையும், நாடியடைவது போல் மனநாட்டம் பசுபதியின் திருவடித்தாமரையை அடைந்து எக்கணமும் இருக்குமேயாகில் அதுவே பக்தி எனப்படும். 
76-வது ஸ்லோகம்: 
பக்திர் மஹேஶ-பத-புஶ்கரம்-ஆவஸன்தீ 

காதம்பினீவ குருதே பரிதோஶ-வர்ஶம் | 

ஸம்பூரிதோ பவதி யஸ்ய மனஸ்-தடாக: 

தஜ்-ஜன்ம-ஸஸ்யம்-அகிலம் ஸபலம் ச னான்யத் ||              || 76 || 

பரமசிவன் திருவடியாகிய வானத்தில் இருந்து வரும் பக்தி, மேக்ககூட்டம்போல் இன்பமழையைப் பொழிகிறது. அதன் மூலம் எவரெவருடைய மனதாகிய தடாகம் நிரம்புகிறதோ அவரவருடைய பிரவிப்பயிர் முழுதும் ஸபலமாகிறது. மற்றது அப்படியில்லது.  
83-வது ஸ்லோகம்: 
ஜனன-ம்றுதி-யுதாநாம் ஸேவயா தேவதானாம் 

ன பவதி ஸுகேலேஶ: ஸம்ஶயோ னாஸ்தி தத்ர | 

அஜனிம்-அம்றுத ரூபம் ஸாம்பம்-ஈஶம் பஜன்தே 

ய இஹ பரம ஸெளக்யம் தே ஹி தன்யா லபந்தே ||                   || 83 ||
ஜனனம், மரணம் என்ற தொடர் உள்ள மனிதருக்கு மற்ற தெய்வங்களை வழிபடுவதால் ஒருவித சுகமும் இல்லை. இது நிச்சயம். பிறப்பில்லாதவர், ஆனால் அம்ருதரூபர், பரமேச்வரன் அம்பிகையருபாகன். அவர்பால் பற்று கொண்டவரோ பரம சௌக்கியம் எய்துகின்றனர். அவரே புண்யவான்களுமாவர்.  
6-வது ஸ்லோகம்: 
கடோ வா ம்றுத்-பிண்டோ-அபி-அணுர்-அபி ச தூமோ-அக்னிர்-அசல: 

படோ வா தன்துர்-வா பரிஹரதி கிம் கோர-ஶமநம் | 

வ்றுதா கண்ட-க்ஶோபம் வஹஸி தரஸா தர்க-வசஸா 

பதாம்போஜம் ஶம்போர்-பஜ பரம-ஸெளக்யம் வ்ரஜ ஸுதீ:ஃ ||        || 6 || 
ஹே அறிஞனே!உன்னை கேட்கிறன் – (தர்க்கத்தில் உதாரணமாகவரும்) குடமோ மண் உருண்டையோ, அணுவோ, புகையோ, தீயோ அல்லது மலையேதான் இருக்கட்டுமே, இன்னும், துணியோ, நூலோ தான் பயங்கர யமனை தூரத்தில் தள்ள முடியுமா?ஏன் இந்த கடித்த தர்க்கப்பேச்சு?சம்புவுன் திருவடியை சேவித்து பரம சௌக்யம் பெறலாமே!   
65-வது ஸ்லோகம்: 
வக்ஷஸ்-தாடன ஶன்யா விதலிதோ வைவஸ்வதோ னிர்ஜரா | 

கோடீரோஜ்ஜ்வல-ரத்ன-தீப-கலிகா-நீராஜனம் குர்வதே | 

த்றுஶ்ட்வா முக்தி வதூஸ் தனோதி நிப்றுதாஶ்லேஶம் பவானீ-பதே 

யச்-சேதஸ்-தவ பாத-பத்ம-பஜனம் தஸ்யேஹ கிம் துர்-லபம்  ||      || 65 || 
ஹே பவாநிபதே!எவனது மனம் திருவடித்தாமரையை சேவிக்கிறதோ அவனுக்கு இவ்வுலகில் அடைய முடியாதது எது?யமனும் மார்பில் உதை கிடக்குமோ என அஞ்சி ஒடிவிடுகிறான்?தேவர்கள் தம் கிரீடத்தில் பிரகாசிக்கும் ரத்ன கற்களாகிய தீபங்களால் ஹாரத்தியை செய்கிறார்கள். முக்தி என்னும் பெண் அவனைக் கண்டதும் இறுகத் தழுவிக் கொள்வாளே!   
12-வது ஸ்லோகம்: 
குஹாயாம் கேஹே வா பஹிர்-அபி வனே வா(அ)த்ரி-ஶிகரே 

ஜலே வா வஹ்நௌ வா வஸது வஸதே:ஃ கிம் வத பலம் | 

ஸதா யஸ்யைவாந்த:ஃ கரணம்-அபி ஶம்போ தவ பதே 

ஸ்திதம் செத்-யோகோ(அ)ஸெள ஸ ச பரம-யோகீ ஸ ச ஸுகீ ||       || 12 || 
ஒருவன் வஸிக்கும் இடத்தின் மூலமும் பயனில்லை. குகையிலோ, வீட்டிலோ மலை உச்சியிலோ, தண்ணீரிலோ, தீயிலோ அவனிருக்கட்டும். அவன் மனம் மட்டும்,  ஹே ஸம்போ! உமது காலடியை பற்றியிருந்தால் அதுவே யோகம், அவனே யோகீ, அவனே ஸகல சுகங்களையும் பெறுவான்.   
10-வது ஸ்லோகம்: 
நரத்வம் தேவத்வம் நக-வ-னம்றுகத்வம் மஶகதா 

பஸுத்வம் கீடத்வம் பவது விஹகத்வாதி-ஜனனம் | 

ஸதா த்வத்-பாதாப்ஜ ஸ்மரண-பரமானந்த-லஹரீ
விஹாராஸக்தம் சேத்-ஹ்ருதயம்-இஹ கிம் தேந வபுஶா ||         || 10 || 
ஹேப்ரபோ, உமது திருவடித்தாமரையை எக்கணமும் நினைத்துப் பெறும் பரமானந்த வெள்ளப்பெருக்கில் மூழ்கித் திளைக்கும் பற்று மட்டும் ஒருவருக்கு இருந்தால், உருவத் தோற்றம் எப்படி இருந்தாலென்ன?பிறப்பு முறையில் மனிதராகவோ, தேவராகவோ, மலைக்காட்டுமிருகமாகவோ, கொசுவாகவோ, பசுவாகவோ, பூச்சியாகவோ அல்லது பக்ஷியாக இருந்து விட்டுப் போகட்டுமே!   . 
9-வது ஸ்லோகம்: 
கபீரே காஸாரே விஸதி விஜனே கோர-விபினே

விஶாலே ஶைலே ச ப்ரமதி குஸுமார்த்தம் ஜட-மதி:ஃ | 

ஸமர்ப்யைகம் சேத:ஃ ஸரஸிஜமுமாநாத பவதே 

ஸுகேன-அவஸ்தாதும் ஜன இஹ ந ஜானாதி கிம்-அஹோ ||   || 9 || 
விவேகமில்லாதவர் புஷ்பம் பறிக்க தன்னந்தனியே பயங்கர காட்டிலும், ஆழமான குளத்திலும், பெரும் குன்றுகளிலும் புகுவர்;அந்தோ பரிதாபம். உமையருபாகனே! உமக்கு ஒரே ஒரு மனம் என்ற தாமரைப்பூவை ஸமர்ப்பித்து சுகம் பெறலாம் என்பது கூட ஏன் தெரியவில்லை?       
11-வது ஸ்லோகம்: 
வடுர்வா கேஹீ வா யதிர்-அபி ஜடீ வா ததிதரோ 

நரோ வா ய:ஃ கஶ்சித்-பவது பவ கிம் தேன பவதி? | 

யதீயம் ஹ்றுத்-பத்மம் யதி பவத்-அதீனம் பஶுபதே 

ததீயஸ்-த்வம் ஶம்போ பவஸி பவ பாரம் ச வஹஸி |      || 11 || 
நிலமை பற்றியும் கவலை வேண்டாம். பிரம்மசாரி, கிருஹத்தன், ஸந்நியாஸி, ஜடை தரித்தவர் இப்படி எந்த நிலையில் இருப்பினும் அதனால் ஆவதொன்றுமில்லை. பசுபதே!உனதடிமை என்ற எண்ணமிருந்தால், அவணடியாளாகவல்லவா தாங்கள் ஆகி அவர் குடும்பச் சுமையை தாங்குவீர்!          
91-வது ஸ்லோகம்:
ஆத்யா(அ)வித்யா ஹ்ருத்-கதா நிர்கதாஸீத் 

வித்யா ஹ்ருத்யா ஹ்ருத்-கதா த்வத்-ப்ரஸாதாத் | 

ஸேவே நித்யம் ஸ்ரீ-கரம் த்வத்-பதாப்ஜம் 

பாவே முக்தேர் பாஜனம் ராஜ-மௌலே ||                || 91 || 
ஹே சந்த்ரமௌலே!வெகுநாட்களாக இருந்த அஜ்ஞானம் உமதருளால் தொலைந்துவிட்டது. நல்லதான ஜ்ஞானம் ஹ்ருதயத்தில் பதிந்துள்ளது. மங்களகரமான, மோக்ஷமளிப்பதுமான உமது திருவடித்தாமரையை நித்யம் ஸேவிக்கிறேன்.         
இறைவன் கலியுகத்தில் குருஸ்வரூபமாக அவதரித்து நம்மையெல்லாம் வழிபடுத்துகின்றார் என்பது பெரியோர் வாக்கு. இனி வருங்காலத்தே திருக்கோயிலுக்கு தரிசனத்திற்காகச் செல்லுகையிலும், நம் வீட்டில் பூஜையறையில் ப்ரார்த்தனை செய்யும் போதும் சிவசங்கரனைப் ப்ரார்த்தித்து இந்த பத்து ரத்தினங்களான ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து லோக ஜீவர்கள் அனைவருக்காகவும் ப்ரார்த்திப்போமே!   
த்யானமூலம் குரூர் மூர்த்தி:ஃ  பூஜாமூலம் குருர்பதம் | 

மந்த்ரமூலம் குருர்வாக்யம்  மோக்ஷமூலம் குரூர்க்ருபா || 
குருவுண்டு – பயமில்லை;  குறையேதும் இனியில்லை. 
பெரியவா கடாக்ஷம்

Advertisements

One thought on “ஸௌந்தர்ய லஹரி

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s