பரமாத்மா

​எல்லா தேவதைகளும் ஒரே பரமாத்மாதான்!

சிவனும் விஷ்ணுவும் கூட வேறில்லை.ஆனாலும்…இரண்டையும் வழிபடுகிறபோது கொஞ்சம் பிரித்து பக்தி செய்தால் அதில் ஒருரஸம் இருக்கத்தான் செய்கிறது. ஒன்ராய் அரும்பி பலவாய் விரிந்து என்கிறார்போல்(UNITY IN DIVERSITY) பலவாகப் பிரிந்தும் ஒற்றுமையாக இருப்பதுதான் நம் மதத்தின் சாரம். இப்படியே சிவன் விஷ்ணு என்கிற இரண்டு மூர்த்திகளை வழிபடும்போது சாராம்சத்தில் அவை ஒன்றே என்ற உணர்ச்சி இருந்தாலும்,ஒவ்வொரு மூர்த்தியை ஒவ்வொரு தத்துவத்துக்குரூபமாக வைத்துக் கொண்டு பக்தி செய்வதில் ஒரு ருசி இருக்கத்தான் செய்கிறது. இப்படிச் செய்யும்போது சிவனை எல்லாவற்றுக்கும் அடிப்படையான ஏக வஸ்துவாந ஞானமாக பாவிக்கலாம்.

அதாவது சிவத்தை பரப்ப்ரும்மமாகவும் விஷ்ணுவை பராசக்தியாகவும் பாவிக்கலாம். அரனும் அம்பாளும் சகோதரர்கள் எனச் சொன்னாலும் அவர்கள் ஒன்றேதான் என்பது பரம ஞானிகளின்

அநுபவம்!அப்பர் ஸ்வாமிகள் ”அரியலால் தேவி இல்லை இயன்ஐயனார்க்கே” என்று சொல்கிறார். சங்கர நாராயண வடிவத்தையும், அர்த்த நாரீச்வரர் வடிவத்தையும் பார்த்தால் இது புரியும். இரண்டு உருவத்திலும் வலப்பாகம் பரமேச்வரனுடையது. இடப்பாகம் அம்பாள்

அல்லது விஷ்ணுவின் பாகம்!

உலகத்தில் இருக்கும் ஆனந்த உணர்ச்சிகளை எல்லாம் தெய்வீகமாக்குகிற பக்திமார்க்கமும் விஷ்ணு சம்பந்தமாகவே அதிகம் தோன்றுகிறது. ஹரிகதை,ஹரி நாம சங்கீர்த்தனம் என்றெல்லாம் சொல்வதுபோல் ஹர கதை ஹர நாம சங்கீர்த்தனம் என்று சொல்வதில்லை. கதை, பாட்டு இதெல்லாம் விஷ்ணுவிடம்தான் அதிகம்.பாகவதர் என்றால் பகவானை்ச் சேர்ந்தவர் என்றாலும், பாகவதம் என்றால் விஷ்ணுபக்தர் ,விஷ்ணு கதை என்றே எடுத்துக் கொள்கிறோம்.

ஆனால் இந்த ப்ரபஞ்சத்தை விட்டு இதற்கு ஆதாரமான சாந்தத்தில் திளைக்கும்போது சிவ சம்பந்தம் அதிகம் தோன்றுகிறது ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் என்ற வாக்கு இருக்கிறது. பலவாகக் காண்கிறது போனால் ஏகம்தான் மிஞ்சும் ஸர்வமும் போய்விடு்ம் அங்கே ஜகம் என்பது அடிபட்டுப் போய் சிவம் தான் எஞ்சி நிற்கிறது. இதனால்தான் சிவமயம் என்று சொல்கிறார்கள்!

வானவில்லில் வண்ணத்தில் ஏழு நிறங்களில் வெள்ளையான சிவமும், கறுப்பான விஷ்ணுவும்இடம் பெறவில்லை. ப்ரபஞ்ச வர்ணங்களில் இரண்டுபேருமே ஈடுபடாதவர்கள் லௌகீகத்தில் சேராதவர்கள் இதுவே ஹரியும் சிவனும் ஒன்று எனப்படுகிறது!

ஜய ஜய சங்கரா…

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s