மண்டோதரி


அனுமன் வியந்த உத்தமி! மண்டோதரி:
பதிவிரதையர் ஐவர்… 
அரக்கி இலங்கினியைக் கொன்று போட்டுவிட்டு கோட்டைக்குள் புகுந்தார் ஆஞ்சநேயர். தனது இடை முடிப்பில் ஒரு முறை கை வைத்து, கணையாழி பத்திரமாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டார். ராட்சஸர்கள் எவராவது பார்ப்பதற்குள் அரண்மனைக்குள் நுழைந்து விடவேண்டும். சட்டென்று பாய்ந்தார்!
அரண்மனைக்குள்… சுவரில் ஆங்காங்கே பொருத்தப் பட்டிருந்த தீப்பந்தங்கள் இருட்டை விலக்கி வழிகாட்டின. ஒவ்வோர் அறையாக நோட்டமிட்டார். ஏதேனும் ஓர் அறையில் சீதாபிராட்டியார் இருக்க மாட்டாரா… என்ற தேடல் அவருக்குள்! ஆனால், ஆடை விலகி… கோணல்மாணலாக கை- கால்களைப் பரப்பிய படி ஒவ்வொருவரும் படுத்துக் கிடந்த கோலம்… காண சகிக்கவில்லை!

ஓர் அறையில் தீபவொளி பிரகாசிப்பதைக் கண்டார். நறுமணம் கமழும் அந்த அறையை நெருங்கினார். மலர் மஞ்சத்தில் மங்கலகரமாகத் திகழும் ஒரு பெண்மணி. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோதும்… காற்றிலும் கலையாத வண்ணம் ஆடை உடுத்தியிருக்கும் பாங்கு, பௌர்ணமியாய் ஒளிரும் திருமுகம், செந்தூரத் திலகம்…

‘அடடா… சீதாபிராட்டியார் குறித்து அண்ணல் ராமன் நம்மிடம் விளக்கிய அனைத்து லட்சணங்களும் நிரம்பியிருக்கிறது இந்தப் பெண்ணிடம். எனில்… இவர் சீதா பிராட்டியார்தான்!’ – மனம் குதூகலிக்க… ‘ஸ்ரீராம தூதனாக நான் வந்திருக்கும் விஷயத்தை அன்னையை எழுப்பி தெரிவிக்கலாம்!’ என்ற எண்ணத்துடன் கட்டிலை நெருங்கிய ஆஞ்சநேயர், ஒரு கணம் ஸ்தம்பித்தார்.
ஆமாம்… அந்தப் பெண்ணின் அவயவங்களையும் அவள் விடும் மூச்சுக் காற்றையும் உற்று கவனித்தவர் அதிர்ந்து போனார். ‘சாமுத்திரிகா லட்சணத்தின்படி இவளின் அவயவங்களை வைத்துப் பார்த்தால், வெகு சீக்கிரத்தில் இவளின் கணவன் சாகப் போகிறான். எனில், இவள் நம் அன்னை சீதா இல்லை; இந்த உத்தமி வேறு யாரோ!’ என்று முடிவுடன் அந்தப் பெண்ணை வணங்கி வெளியேறினார். அவரின் தேடல் தொடர்ந்தது!
அனுமன் கண்ட அந்தப் பெண்… மண்டோதரி. அசுர குலச் சிற்பி மயனின் மகள்; இலங்கேஸ்வரன் ராவணனின் மனைவி! கணவனே கண்கண்ட தெய்வமாக வாழ்ந்த மண்டோதரியின் பதிவிரதா தர்மமே, அவளை சீதாதேவிக்கு நிகராக கருதச் செய்தது!
விபீஷணன், கும்பகர்ணன் முதலியோர் ராவணனுக்கு அறத்தை எடுத்துச் சொல்லி, சீதையை ராமனிடம் சேர்த்துவிடுமாறு அறிவுறுத்தியது பெரிய விஷயமல்ல… ஆனால், தன் கணவனின் செயலை கண்டித்து, அவனுக்கு அறநெறியை வலியுறுத்திய மண்டோதரி, கணவனுக்கு நன்மையே நாடுபவளாக இருந்தாள். எனவே, பஞ்சகன்னியரில் அவளும் ஒருத்தியாகப் போற்றப்படுகிறாள்.

Advertisements

One thought on “மண்டோதரி

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s