கணபதி இருக்க கவலை எதற்கு?


குரு பெயர்ச்சியை காட்டி சில குறிப்பிட்ட ராசிக்கார்களை மிரட்டும் வேலை தொடங்கிவிட்டது. கணபதி இருக்க கவலையே வேண்டாம். பல்வேறு கிரகப் பெயர்ச்சி மற்றும் தோஷங்களால் தாம் அவதிப்படுவதாக கருதுபவர்கள் வீண் மன உளைச்சலை விடுத்து செவ்வாய் தோறும் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து விநாயகர் அகவல் படித்துவந்தாலே போதும். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் யாவும் நீங்கி, தன்னம்பிக்கை பெருகி, இல்லறம் சிறக்க வாழ்வார்கள். இந்த செவ்வாய் வழிபாடு நவக்கிரக தோஷத்திற்கு மட்டுமல்ல புத்திர தோஷத்திற்கும் சிறந்த பரிகாரமாகும். இதிலும் வேம்பும் அரசமரமும் இணைந்துள்ள மரத்தின் கீழுள்ள பிள்ளையார் என்றால் மிகவும் விசேஷம். அது போன்ற இடங்களை பார்த்தால் குறைந்தது பத்து நிமிடங்களாவது அங்கு அமர்ந்து (தக்க துணையுடன்) பிரார்த்தனையோ தியானமோ செய்வது கருத்தரிக்க மிகவும் உதவியாக இருக்கும்.
பரிகாரங்கள் என்பது ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் செலவு செய்து தான் செய்யவேண்டும் என்பதில்லை. நமக்கு அருகில் உள்ள பிள்ளையாருக்கு ஆத்மார்த்தமாக பக்தியுடன் செய்தாலே போதுமானது.
பிள்ளையாரின் திருவுருவத்தில் நவக்கிரகங்களும் அடங்கிவிடுவர்.
நெற்றியில் சூரிய பகவான். நாபியில் சந்திரன். வலது தொடையில் செவ்வாய். வலது கீழ்க்கையில் புதன். சிரசில் குரு அமர்ந்து அருள்பாலிக்கிறார். இடது கீழ் கையில் சுக்கிரனும், வலது கீழ்கையில் சநீஸ்வரரும் அமர்ந்திருக்கிறார்கள். இடது மேல் கையில் ராகு பகவான்.
அண்மையில் நாம் சென்ற வயலூர் மற்றும் புதுவைப் பயணத்தில் பல இடங்களில் இத்தகு பிள்ளையாரை பார்க்க முடிந்தது.
விநாயகப் பெருமானை பொருத்தவரை அவர் அதிகம் எதிர்பார்க்காத எளிமையான தெய்வம்.
அக்காலங்களில் உழவர்கள் அறுவடை செய்து நெல்லை பிரித்தெடுக்கும்போது காற்றில் தூற்றுவார்கள். அப்போது போதிய காற்று வராமல் பணி தடைப்பட்டால், உடனே பசுஞ்சாணத்தில் பிள்ளையாரை பிடித்து, களத்து மேட்டில் வைத்து “காற்று வரவேண்டும் பிள்ளையாரப்பா” என்று வேண்டிக்கொள்வார்கள். உடனே காற்று பலமாக வீசும். அந்தளவு பிள்ளையார் எளிய மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போனவர்.
இது தவிர வீட்டிலேயே சுத்தமான கஸ்தூரி மஞ்சள் அல்லது குங்குமத்தில் பிள்ளையாரைப் பிடித்து அருகம்புல் கொண்டு பூஜித்து வருவது நலம்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s