சிவலிங்கம்


புலித்தோலைப் போர்த்தியது போன்ற அபூர்வக் கல்லில் வடித்த அற்புத இலிங்கம்!!!
அருள்மிகு அபூர்வ விஸ்வநாதர் சிவாலயம்,சுவாமி மகேஷ் ஆனந்தகிரி ஆசிரமம்,அபு மலை[மவுண்ட் அபு] இராஜஸ்தான்.
சுவாமி மகேஷ் ஆனந்தகிரி அவர்கள் தமது இளம்வயதில் புராணங்களைக் கற்கும் பொழுது ,அதில் ”சிவப்பரம்பொருள் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களின் இலிங்கங்கள் புலித்தோலாடை அணிந்து ,காண்பவர்கள் வியக்கும் வண்ணம் அருட்காட்சியளிப்பார்” என்று படித்தது மிக ஆழமாக அவர் மனதில் பதிந்து விட்டது.
நாமும் அதே போன்ற இலிங்கம் அருளும் திருக்கோயில் அமைக்கவேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்புதான் இந்த அபூர்வ விஸ்வநாதர் சிவாலயம்.
சுவாமிகளின் எண்ணத்திற்கு ஏற்றாற்போல இராஜஸ்தானின்  பாலனா என்னும் சுரங்கத்தில் அபூர்வமான மிகப்பெரியக் கல் சிவப்பரம்பொருளின் திருவருளால் கிடைத்தது.
அக்கல்லில் மிகப்பெரிய சிவலிங்கம் [சுமார் ஆறு அடி உயரம்]செய்யப்பட்டு ,பிரதிஷ்டை செய்தபின் திருக்கோயில் அமைக்கப்பட்டது.
திருக்கோயில் விமானம்,சிவலிங்க உருவிலேயே அமைக்கப்பட்டது.விரிவுரை மண்டபம் ஜோத்பூர் நகரிலிருந்து தருவிக்கப்பட்ட CHHEETAR கற்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டது.
இந்த சிவலிங்கம்”அற்புத விஸ்வநாதர்”என்னும் திருப்பெயரால் அழைக்கப்படுகிறது.இங்கு,சாம வேத முறைப்படி பூஜைகள் நிகழுகின்றன.
அருள்மிகு அற்புத விஸ்வநாதர் மிகப்பெரிய தாமரை மலரின் மீது வீற்றிருந்து  தனது அன்பர்களுக்குத் திருவருளை வாரி வழங்கிக் கொண்டுள்ளார்.
”பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து 

மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே 

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே 

அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.”
–சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த

திருமழபாடி தேவாரத் திருப்பதிகம். 
01.,02.,03.,04.அருள்மிகு அபூர்வ விஸ்வநாதர்[புலித்தோலைப் போர்த்தியது போன்ற அபூர்வக் கல்லில் வடித்த அற்புத இலிங்கம்!!!]
அருள்மிகு அபூர்வ விஸ்வநாதர் சிவாலயம்,சுவாமி மகேஷ் ஆனந்தகிரி ஆசிரமம்,அபு மலை[மவுண்ட் அபு] இராஜஸ்தான்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s