ராம நாமம்

​🌼தூய்மை தரும் ராமநாமம்
🌼வலிமை மிகுந்த ராம நாமம்
🌼ராம ராம ராம ராம ராம ராம்
🌼நான் வழிபாடு செய்யும் ராமன் இறப்பும் பிறப்பும்

இல்லாதவன். ஈடுஇணையில்லாத பெருமை உள்ளவன்.

அவன் திருவடிகளையே எப்போதும் வணங்குகிறேன்.

ராமவழிபாடு எல்லாருக்கு உகந்த வழிபாடாகும்.
🌼* ராமநாமம் என்பது வெறும் கண்கட்டி வித்தையன்று.

அதன் உட்பொருளை உணர்ந்து மனத்தூய்மையோடு

சொல்பவர்கள் சாதனைகள் பல புரிந்து நல்ல பலன்களைப்

பெறுவார்கள்.
🌼* இதயத்தூய்மை பெற எண்ணுபவர்களுக்கு ராமநாமம்

மகத்தானது. இதயத்தின்

அடிஆழத்திலிருந்து ராமநாமம்

எழவேண்டும். அப்போது நாடி நரம்பெல்லாம் உண்மையும்

தூய்மையும் பரவத்தொடங்கும்.
🌼* எல்லையற்ற பொறுமையும், விடாமுயற்சியும்

உள்ளவர்களால் மட்டும் ராம

நாமத்தை தொடர்ந்து ஜபிக்கமுடியும்.

ஜெபித்தோடு, ராமபிரான் வாழ்ந்து காட்டிய

நெறிமுறைகளைப் பின்பற்றி உயர்வாழ்க்கை வாழ

முயற்சிக்க வேண்டும்.
🌼* ராமநாமத்தை நன்மைக்காக

மட்டுமே பயன்படுத்தலாமே அன்றி, ஒருபோதும்

தீமைக்கு பயன்படுத்துதல் கூடாது.

அப்படி பயன்படுத்துபவர்கள் திருடர்களுக்குச்

சமமானவர்கள்.
🌼* உடல் நோய்களை மட்டுமே மருத்துவரால்

குணப்படுத்த முடியும். ஆனால், நம் உடல், மனம்,

ஆன்மா ஆகிய

மூன்றில் உண்டாகும் குறைகளையும் களையும்

சக்தி ராமநாமத்திற்கு உண்டு.
🌼”ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா

ஹரே ஹரே

ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே”
🌼எந்த காரியத்துக்கும் ராமாயண பாராயணம் :-

வால்மீகி முனிவர் அருளிய 

ஸ்ரீ மத்

ராமாயணத்திலுள்ள ஒவ்வொரு காண்டத்திலும் ,

சிற்சில ஸர்க்கங்களை பாராயணம் செய்தால்

ஒவ்வொரு காரியமும் சுலபமாக நிறைவேறும்

என்று கூறப்பட்டுள்ளது.
🌼திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க

பாலகாண்டத்தில் சீதா கல்யாணத்தை காலை,

மாலை இரு வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.
🌼குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை உண்டாக

பாலகாண்டத்தில் புத்திர காமேஷ்டி பாயாஸதான

பாராயண கட்டத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
🌼சுகப்பிரசவத்திற்கு பாலகாண்டத்தில் ஸ்ரீ

ராமாவதாரத்தை காலையில் பாராயணம் செய்ய

வேண்டும்.
🌼கெட்ட வழியில் செல்லும் பிள்ளை திருந்தி வாழ

அயோத்யா காண்டத்தில்

கௌசல்யா ராமா ஸம்வாதத்தை காலையில் பாராயணம்

செய்ய வேண்டும்.
🌼அரச காரியங்களiல் வெற்றி கிட்ட

அயோத்யா காண்டத்தில் ராஜதர்மங்களை காலையில்

பாராயணம் செய்ய வேண்டும்.
🌼ஏவல், பில்லி, பேய், பிசாசு நீங்க சுந்தர

காண்டத்தில் லங்கா விஜயத்தை மாலையில் பாராயணம்

செய்ய வேண்டும்.
🌼பித்தம் தெளிய சுந்தர காண்டத்தில் ஹுனுமத்

சிந்தையை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.
🌼தரித்திரம் நீங்க சுந்தர காண்டத்தில்

சீதா தரிசனத்தை காலையில் பாராயணம் செய்ய

வேண்டும்.
🌼பிரிந்தவர் சேர சுந்தர காண்டத்தில் அங்குலீயக

பிரதானத்தை காலை, மாலை இரு வேளைகளில்

பாராயணம் செய்ய வேண்டும்.
🌼கெட்ட கனவுகள் வராமலிருக்க சுந்தர காண்டத்தில்

திரிஜடை ஸ்வப்னத்தை காலையில் பாராயணம் செய்ய

வேண்டும்.
🌼தெய்வ குற்றம் நீங்க சுந்தர காண்டத்தில் காகாசுர

விருத்தாந்தத்தை காலையில் பாராயணம் செய்ய

வேண்டும்.
🌼ஆபத்து நீங்க யுத்த காண்டத்தில் வீபிஷண

சரணாகதியை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.
🌼சிறை பயம் நீங்க யுத்த காண்டத்தில் வீபிஷணன்

சீதையை ஸ்ரீ ராமரிடம் சேர்த்ததை காலையில்

பாராயணம் செய்ய வேண்டும்.
🌼மறு பிறவியில் சகல சுகம் பெற யுத்த காண்டத்தில்

ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை காலையில் பாராயணம்

செய்ய வேண்டும்.
🌼குஷ்டம் போன்ற நோய்கள் தீர யுத்த காண்டத்தில் ராவண

கிரீட பங்கத்தை காலை, மாலை இரு வேளைகளில்

பாராயணம் செய்ய வேண்டும்.
🌼துன்பம் நீங்க யுத்த காண்டத்தில் சீதா ஆஞ்சநேய

ஸம்வாதத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.
🌼மோட்ச பலன் கிடைக்க ஆரண்ய காண்டத்தில்

ஜடாயு மோட்சத்தை காலையில் பாராயணம் செய்ய

வேண்டும்.
🌼தொழிலில் இலாபம் அடைய அயோத்யா காண்டத்தில

யாத்ரா தானத்தை காலை, மதியம்,

இரவு என்று மூன்று வேளைகளில் பாராயணம் செய்ய

வேண்டும்.
🌼ராமாயாணத்திலிருந்து கற்க வேண்டியவை :-

ராமன்
🌼தந்தை சொல் தட்டாதவன். சித்தியையும் தாயாக

மதித்து நடப்பவன். ஒரு மனைவி சட்ட-திட்டங்கள்

இல்லாத காலத்திலும் ஒரு பெண்ணுடன் வாழ

விழைந்தவன். படகோட்டியான

குகனை மார்போடு அணைத்து இன்றோடு ஐயவரானோம்

என்று சொல்லி ஏற்ற தாழ்வு மனிதருள்

இல்லை என்று காட்டியவன். மக்கள் சந்தேகம்

கொண்டு தன் மனைவியை தவறாக

பேசிவிடுவார்களோ என்று அவளை தீக்குளிக்க

சொன்னவன். தன் மனைவி தவறு இழைக்காதவள் அதனால்

அதிலிருந்து மீண்டு வருவாள்

என்று நம்பிக்கை கொண்டவன்.

சீதை

வசதியாக வாழ்ந்திருந்தாலும் கணவன் இருக்கும்

இடம் சொர்க்கமாக நினைத்து காட்டுக்கு பின்

தொடர்ந்தவள்.்
🌼தலைவன் – தொண்டனுக்கு இடையில் இருக்கும்

ஒரு அற்புத பந்தம்.சேவையில் உயர்ந்தவன். தன் தலைவன்

மீது அசரா நம்பிக்கை கொண்டவன். தன் தலைவனுக்காக

எதையும் செய்யத் துணிந்தவன். எதிலும் தன்

தலைவனையே கண்டவன்.
🌼 திருகயிலாயப் பொதியமுனிப் பரம்பரை 1001-

வது குரு மஹா சந்நிதானம்

சக்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அடிமை சத்குரு ஸ்ரீ-

ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகள் அவர்களால்

அருளப்பட்ட திவ்யமான
🌼ஸ்ரீ ராமர் மந்திரங்கள்
🌼ஞாயிறு -ஸ்ரீ ராம் ஜெய ராம் ரகு ராம்
🌼திங்கள் -ஸ்ரீ ராம் ஜெய ராம் சிவ ராம்
🌼செவ்வாய் -ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்
🌼புதன் -ஹரி ராம ஹரி ராம ராம ராம ஹரி ஹரி
🌼வியாழன் -ஜெய ராம சிவ ராம குரு ராம ஜெய ராம்
🌼வெள்ளி -சீதா ராமா ஹனுமந்தா ரமா சீதா ஹனுமந்தா
🌼சனி – ஸ்ரீ ராம் ஜெய ராம் சுந்தர ராம்
🌼தினமும் – ஸ்ரீ ராம் ஜெய ராம் கோதண்ட ராம்

அந்தந்த நாளுக்குரித்தான திவ்யமான இம்

மந்திரங்களை தினமும் பாராயணம் செய்பவருக்கு
ஸ்ரீ

🌼ராமரின் அருள் பரிபூரணமாக

கிட்டும் ,குழந்தைகள் ஜபித்தால்

அவர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும் .
🌼ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்

ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்

ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s