திருமூலர்


பூநூலுக்கும், உச்சிக் குடுமிக்கும் விஞ்ஞானக் காரணம் உண்டா? ஆம் என்கிறார் திருமூலர்:

———————————————————————————

காரணம் இல்லாமல் நம் முன்னோர்கள் எந்த நியதியையும் வகுப்பதில்லை. அவர்கள் வகுத்த நியதியை சரிவர புரிந்து கொண்டு அதன்படி நடப்போமேயானால் வாழ்வில் நிகழப் போகும் அனைத்தும் சுகமாகவே அமையும்:
“நூலும் சிகையும் உணரார்நின் மூடர்கள்

நூலது வேதாந்தம், நுண்சிகை ஞானமாம்

பால் ஒன்றும் அந்தணர் பார்பார் பரம் உயிர்

ஓரொன்று இரண்டினில் ஓங்காரம் ஓதலே” (தி.ம: 1665)
பொருள்:

————-

பூண்நூல், சிகை ஆகியவற்றை அணிந்திருந்தும் அதன் உண்மை இயல்பை மூடர்கள் அறிவதில்லை. பூணூல் என்பது வேதாந்தத்தின் தத்துவத்தை உணர்த்துவது. அதாவது இடகலை பிங்கலை சுழுமுனை மூன்றும் ஒரு சேர செயல்படுத்தி சகசரதளத்தை அடைந்து ஞானத்தை பெற்றவர் என்று பொருள். அதனால்தான் பூணூலை மூன்று பிரியாக போடுகின்றனர். உச்சிக் குடுமியானது வேதத்தின்பால தனக்கு உள்ள ஞானத்தை புலப்படுத்துவது. அதாவது வேதங்களின் வழி செல்வதை மறவாமல் இறைவன் பால் என்றென்றும் பற்றுடன் இருப்பது.சிவபெருமானிடன் ஒன்றி இருப்பவர்களை சீவனும் சிவனும் ஒன்றென்பார்கள். அப்படி ஒன்றாகாது நின்றவர் ஓகாரம் உச்சரித்தால் ஒன்றாவர்.
அறிவியல்:

—————–

மனிதன் உயிர்வாழ, செயல்பட உடலில் உள்ள முன்று உறுப்புகள் மிகவும் அவசியமானது அவை:

1. Spinal cord – சுழுமுனை

2. Breath – பிங்கலை

3. Force – இடைகலை

இவை மூன்றும் ஒன்றினைந்தால்தால் உடலில் உள்ள அனைத்து உருப்புகளுக்கும் மூளையின் வாயிலாக உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். அது மட்டுமல்லால். மூளைக்கு பிராணனனையும், இரத்த ஓட்டத்தையும் அளித்து உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.

———————————————————————————-

இன்றைய அலோப்பதி மருத்துவர்களின் சின்னமும் இதுதான். ஒரே செய்யுளில் ஆன்மீகம் மற்றும் அறிவியல் கற்றுக் கொடுக்கும் வித்தை திருமூலருக்கு கைவந்த கலை.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s