தர்ம சாஸ்திரம்

​நமக்கு_தெரிந்ததும் தெரியாததும்..!
1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கூடாது.
2. உடம்பிலிருந்து உதிர்ந்த முடியையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது,  உடனே வெளியே எரிந்து விட வேண்டும்.
3. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும், தலையைச் சொறியக் கூடாது.
4. திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிக்கு, சென்று வந்தவுடன் குளிக்க கூடாது
5. சாப்பிடும் அன்னத்தை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது.
6. ஈரத்துணியை உடுத்திக்கொண்டு உணவு அருந்தக்கூடாது.
7. வபனம் (ஷேவ் ) செய்து கொள்ளும் முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது.
8. தாய் தந்தை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமையன்று ஷவரம் (ஷேவ் ) செய்துக்கொள்ள கூடாது.
9. இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக்கொண்டு நிற்பதோ , உட்கார்ந்து கொள்வதோ கூடாது.
பெண்கள்_தெரிந்துக்கொள்ள_வேண்டியது
1. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை, கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.
2. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது).
3. கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது.
4. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.
5. கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.
6. தலை குளிக்கும் பொழுது,  சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும்.
7. கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது.
8. திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது, அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல் ,வருமானம் )பாதிப்பு அடையும்.
9. கர்ப்பமான பெண்கள் உக்கர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போககூடாது.
10. பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை,  இரண்டு புருவ மத்தியிலும்,  உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளக்கூடாது.
11. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
வாழ்க வளமுடன்

Advertisements

One thought on “தர்ம சாஸ்திரம்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s