ப்ரம்ம ஞானம்


கடும் தவம் செய்து கொண்டிருந்த விஸ்வாமித் திரருக்கு தான் பிரம்ம ஞானத்தை அடைந்து விட்டோமோ இல்லையா என்ற சந்தேகம் வந்தது. அதை எப்படி அறிந்து கொள்வது? விசுவாமித்திரர் தன் தவத்தை நிறுத்தினார். முதலில் பரிசோதனை. பின்னர் தவம் என முடிவெடுத்தார். வசிஷ்டரைப் பார்க்கப் போனார். நம்மை விட வயதில் மூத்தவர்களை வணங்கினால் அவர்கள் ஆசி தருவார்கள். பதிலுக்கு விழுந்து வணங்கமாட்டார்கள். சமவயதில் உள்ளவர்கள் ஆசி கூறாமல் பரஸ்பரம் வணக்கம் சொல்வார்கள். வசிஷ்டர் பிரம்ம ரிஷி. அவரை விஸ்வாமித்திரர் வணங்க பதிலுக்கு வசிஷ்டர் ஆசிகூற தனக்கு இன்னமும் ஞானம் வரவில்லை போலிருக்கின்றது என்று கோபம் கொண்டாலும் மீண்டும் கானகம் சென்று தன் தவத்தைத் தொடர்ந்தார். பலநாட்களுக்குப்பின் அவர் குலதெய்வம் அவர் கனவில் தோன்றி உனக்கு ஞானம் வந்துவிட்டது, நீ தவம் புரிந்தது போதும். நீ இப்போது வசிஷ்டரை வணங்கு. இம்முறை அவர் பதிலுக்கு வணக்கம் செலுத்துவார். அப்படி அவர் செய்யவில்லையெனில் அவர் சிரசு சுக்கு நூறாக உடைய சாபம் கொடு என்றது. அதன்படி காட்டிலிருந்து சென்று வசிஷ்டரைப் பார்த்தார். வணக்கம் சொன்னார். பதிலுக்கு வசிஷ்டர் வணக்கம் சொல்லாமல் ஆசிதர கைகளை உயர்த்தியதும் விசுவாமித்திரருக்கு கோபம் மூண்டது. முதன் முறை திரும்பி சென்று விட்டேன். இம்முறை எனக்கு பிரம்ம ஞானம் பூரணமாக ஏற்பட்டிருந்தும் இவர் அதை அங்கீகரிக்கவில்லை. குலதெய்வம் கூறியதுபோல் செய்து விடலாமா என்று கோபத்துடன் நினைத்தவருக்கு வேரொன்றும் தோன்றியது. குலதெய்வம் இம்முறை வசிஷ்டர் வணக்கம் செலுத்துவார் என்றதே என எண்ணி மீண்டும் வணங்க நினைத்தவருக்கு நமக்கு ஏன் இந்த கோபம் வருகின்றது? இவ்வளவு தவம் செய்து என்ன பயன். பிரம்ம ஞானம் பெற்றிருந்தால் இந்த கோபம் தலைக் காட்டியிருக்காதே. அப்படியானால் தாம் இன்னமும் தவம் புரியவேண்டும் என நினைத்து ஒன்றும் பேசாமல் திரும்பி ஓர் அடி எடுத்துவைத்தார். அப்போது முனிவரே சற்று நில்லுங்கள். நீங்கள் என்னை வணங்கினீர்கள். பிரம்ம ஞானம் பெற்ற தங்களை நான் வணங்க வேண்டாமா? என்று வசிஷ்டர் கூறியது ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்தியது. வசிஷ்டர் வாயல் பிரம்மரிஷி என அழைக்கப்பட்டார் விசுவாமித்திரர். கோபத்தை அடக்கவில்லையென்றால் என்னதான் தவமிருந்தாலும் சாஸ்திரம் கற்றிருந்தாலும் பயன் ஏதுமில்லை. ஞானம் கைகூடாது. ஒன்றிருந்தால் ஒன்றிருக்காது.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s